logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கோவையில் எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமார் எழுதிய 'மை பிரெஞ்சு கிராமர்' புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கோவை காந்திபுரம் பகுதியில் நடந்த இந்நிகழ்வில், மூத்த வழக்கறிஞர் மதிவாணன் புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமார் அதனை பெற்றுக்கொண்டார். இது கிருபாஷினியின் நான்காவது புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையைச் சேர்ந்தவரான கிருபாஷினி ஜெயக்குமார், கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தின் நிறுவனர் ஆவார். 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை கொண்டுள்ள இவர், ஒரு மொழி பயிற்றுநராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் இதற்கு முன்னதாக 'மை இங்கிலிஷ் கிராமர்', 'தி அன்டோல்ட் சீக்ரெட் ஆஃப் சக்சஸ்', 'மை இங்கிலிஷ் கிராமர்' ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருபாஷினி, தான் இதுவரை மொழி தொடர்பான மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகங்களை எழுதியுள்ளதாகத் தெரிவித்தார். ஐரோப்பிய மற்றும் ஆசிய மொழிகள் உட்பட அனைத்து மொழிகளிலும் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதே தனது எதிர்கால லட்சியம் என்று அவர் கூறினார். மேலும், தங்கள் பயிற்சி மையத்தின் மூலம் 20-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பொதுமக்களுக்குப் பயிற்றுவித்து வருவதாகவும், இரண்டு மொழிகளுக்கு மேல் கற்பது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்பதையும், எந்த வயதினரும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். மொழி கற்றுக்கொள்ள விரும்புவோர் கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தை அணுகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

on 7 July
user_Political Pulse
Political Pulse
Reporter கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
on 7 July
7e0183be-86c4-4493-9830-a16b4ffb1477

கோவையில் எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமார் எழுதிய 'மை பிரெஞ்சு கிராமர்' புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கோவை காந்திபுரம் பகுதியில் நடந்த இந்நிகழ்வில், மூத்த வழக்கறிஞர் மதிவாணன் புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர் கிருபாஷினி ஜெயக்குமார் அதனை பெற்றுக்கொண்டார். இது கிருபாஷினியின் நான்காவது புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையைச் சேர்ந்தவரான கிருபாஷினி ஜெயக்குமார், கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தின் நிறுவனர் ஆவார். 20-க்கும் மேற்பட்ட மொழிகளில்

3afa5a1a-96ee-40c9-a1fe-65700541dcb6

புலமை கொண்டுள்ள இவர், ஒரு மொழி பயிற்றுநராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் இதற்கு முன்னதாக 'மை இங்கிலிஷ் கிராமர்', 'தி அன்டோல்ட் சீக்ரெட் ஆஃப் சக்சஸ்', 'மை இங்கிலிஷ் கிராமர்' ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருபாஷினி, தான் இதுவரை மொழி தொடர்பான மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகங்களை எழுதியுள்ளதாகத் தெரிவித்தார். ஐரோப்பிய மற்றும் ஆசிய மொழிகள் உட்பட அனைத்து மொழிகளிலும் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதே

3680ea15-8645-4b3a-9d25-45f830b2e14b

தனது எதிர்கால லட்சியம் என்று அவர் கூறினார். மேலும், தங்கள் பயிற்சி மையத்தின் மூலம் 20-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பொதுமக்களுக்குப் பயிற்றுவித்து வருவதாகவும், இரண்டு மொழிகளுக்கு மேல் கற்பது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்பதையும், எந்த வயதினரும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். மொழி கற்றுக்கொள்ள விரும்புவோர் கிருபா ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸ் பயிற்சி மையத்தை அணுகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கோவை,குமரன் கோட்டம் "சுவாமிநாத சுவாமி"திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா. வரும் ஆவணி திங்கள் 27 -ஆம் நாள் (13.09.2026) அன்று... கோவை மாவட்டம, சூலூர் வட்டம், கண்ணம்பாளையம் திருச்சி சாலையில் அமைந்துள்ள குமரன் கோட்டம், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் மகா பாக்கியத்தை பக்தர்களுக்கு வழங்கும் ஒரு உன்னதமான ஆன்மீகத் தலமாகும். ஆர்.வி.எஸ் (RVS) குழுமத்தின் அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட இத்திருக்கோயில், முருக பக்தர்களுக்கு ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது.பொதுவாக முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களைத் தனித்தனியாகச் சென்றுதான் தரிசிக்க முடியும். ஆனால், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், ஆறு படை வீடுகளின் முருகனையும் தனித்தனி சன்னதிகளில் ஒரே இடத்தில் தரிசித்து முழுமையான அருள் பெறலாம். இத்தலத்தின் முதன்மைத் தெய்வமாக சுவாமிநாத சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.தனித்துவமான இக்கோயிலில் உள்ள நவகிரகங்கள் அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது மிக அபூர்வமான சிறப்பம்சமாகும்.பூஜை முறைகள்: மூலவருக்குத் தினமும் ஆறு கால பூஜைகள் (ஆறு கால பூஜை) மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இக்கோயிலில் முருகனுக்குரிய அனைத்து முக்கிய விழாக்களும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருவது ஆன்மீக வரலாற்றில் ஒரு சிறப்பு அம்சமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் இந்த திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வரும் ஆவணி திங்கள் (மாதம்) 27- ஆம் நாள் (13.09.2026) அன்று ஆர்.வி.எஸ் கல்வி, மருத்துவ, விவசாய பண்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் அதன் தலைவர் முனைவர் (Dr.) K.V.குப்புசாமி செட்டியார் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாகவும், கோலாகலமாகவும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளுடன் கொண்டாடப்படவுள்ளது,
    3
    கோவை,குமரன் கோட்டம் "சுவாமிநாத சுவாமி"திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா. வரும் ஆவணி திங்கள் 27 -ஆம் நாள் (13.09.2026) அன்று...
கோவை மாவட்டம, சூலூர் வட்டம், கண்ணம்பாளையம் திருச்சி சாலையில் அமைந்துள்ள குமரன் கோட்டம், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் மகா பாக்கியத்தை பக்தர்களுக்கு வழங்கும் ஒரு உன்னதமான ஆன்மீகத் தலமாகும். ஆர்.வி.எஸ் (RVS) குழுமத்தின் அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட இத்திருக்கோயில், முருக பக்தர்களுக்கு ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது.பொதுவாக முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களைத் தனித்தனியாகச் சென்றுதான் தரிசிக்க முடியும். ஆனால், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், ஆறு படை வீடுகளின் முருகனையும் தனித்தனி சன்னதிகளில் ஒரே இடத்தில் தரிசித்து முழுமையான அருள் பெறலாம். இத்தலத்தின் முதன்மைத் தெய்வமாக சுவாமிநாத சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.தனித்துவமான இக்கோயிலில் உள்ள நவகிரகங்கள் அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது மிக அபூர்வமான சிறப்பம்சமாகும்.பூஜை முறைகள்: மூலவருக்குத் தினமும் ஆறு கால பூஜைகள் (ஆறு கால பூஜை) மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இக்கோயிலில் முருகனுக்குரிய அனைத்து முக்கிய விழாக்களும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருவது ஆன்மீக வரலாற்றில் ஒரு சிறப்பு அம்சமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் இந்த திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வரும் ஆவணி திங்கள் (மாதம்) 27- ஆம் நாள் (13.09.2026) அன்று ஆர்.வி.எஸ் கல்வி, மருத்துவ, விவசாய பண்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் அதன் தலைவர் முனைவர் (Dr.) K.V.குப்புசாமி செட்டியார் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாகவும், கோலாகலமாகவும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளுடன் கொண்டாடப்படவுள்ளது,
    user_முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
    முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
    பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப் உருளை ஒழிக்கு வண்ணம் விழிப்புணர்வைb பொது மக்களுக்கு மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது
    1
    திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப் உருளை ஒழிக்கு வண்ணம் விழிப்புணர்வைb பொது மக்களுக்கு மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    4 hrs ago
  • தாமரைக் குளம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கரட்டில் மலை மேல் வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது இக்கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளனர் இந்நிலையில் அதே பகுதியில் தர்ஹா கட்ட முயற்சித்தும், அப்பகுதியில் அசைவ விருந்து வழங்கப்படுவதாகவும், அங்கு செல்வதற்கு சாலை வசதி அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர் மேலும் அப்பகுதியில் வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளதாகவும் இப்பகுதியில் அசைவம் சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டு களுக்காக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு போராட்டத்தை நடத்தி வந்தனர் இந்நிலையில் இந்த ஆண்டு அசைவ விருந்து வழங்குவதற்காக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சாலை அமைக்கும் நபர்கள்  மீது நடவடிக்கை எடுக்க கோரி தாமரைக்குளம் பஸ் ஸ்டாப் அருகே பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் இப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் அசைவ விருந்து வழங்குவது தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    1
    தாமரைக் குளம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கரட்டில் மலை மேல் வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது
இக்கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளனர்
இந்நிலையில் அதே பகுதியில் தர்ஹா கட்ட முயற்சித்தும், அப்பகுதியில் அசைவ விருந்து வழங்கப்படுவதாகவும், அங்கு செல்வதற்கு சாலை வசதி அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்
மேலும் அப்பகுதியில் வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளதாகவும் இப்பகுதியில் அசைவம் சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டு களுக்காக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு போராட்டத்தை நடத்தி வந்தனர் இந்நிலையில் இந்த ஆண்டு அசைவ விருந்து வழங்குவதற்காக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சாலை அமைக்கும் நபர்கள்  மீது நடவடிக்கை எடுக்க கோரி தாமரைக்குளம் பஸ் ஸ்டாப் அருகே பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மேலும் இப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் அசைவ விருந்து வழங்குவது தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல்லில் பொதுமக்கள் மத்தியில் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி. திண்டுக்கல்லில் பொதுமக்கள் மத்தியில் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஏராளமான பங்கேற்றனர்.
    1
    திண்டுக்கல்லில் பொதுமக்கள் மத்தியில் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி.
திண்டுக்கல்லில் பொதுமக்கள் மத்தியில் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஏராளமான பங்கேற்றனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • முத்து தேவன் பட்டி ஆற்றுப் படுகையில் கிராம மக்கள் ஒருங்கிணைந்து மரம் நடும் விழா நடத்தினர் தேனி அருகே முத்துதேவன் பட்டியில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது ஆற்றப்படுகையில் நடைபெற்ற மரம் நடும் விழா நிகழ்வுக்கு ஊர் தலைவரும் திராவிட கழக மாவட்ட செயலாளருமான மணிகண்டன் தலைமை வகித்தார் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் அபு பக்கர் சித்திக் முன்னாள் கவுன்சிலர் சகாயராஜ் விவசாயத்துறை சார்பில் பாண்டியன் மற்றும் ரஜினி அய்யனார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்வில் கிராம மக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் ஒருங்கிணைந்து மரம் நடுவிழா நடத்தினர் இந்த மரம் நடும் விழாவில் மரக்கன்று பராமரிப்பு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது அந்த குழுவில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் அமலன் எஸ்டிபிஐ கட்சி நகரத் தலைவர் உமர் கதிரேசன் அழகுராஜ் திராவிடர் கழக மாணவரணி தலைவர் ஹரி பிரசன்னா கதிரேசன் ஜான்சன் பாரத் பிரியன் வினித் மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மரம் நடும் விழாவில் மரக்கன்றுகள் வழங்கியதோடு நட்டும் வைத்தனர் நிகழ்வின் நிறைவாக திராவிட கழக மாணவரணி செயலாளர் ரஞ்சித் நன்றி கூறினார்
    1
    முத்து தேவன் பட்டி ஆற்றுப் படுகையில் கிராம மக்கள் ஒருங்கிணைந்து மரம் நடும் விழா நடத்தினர்
தேனி அருகே முத்துதேவன் பட்டியில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது ஆற்றப்படுகையில் நடைபெற்ற மரம் நடும் விழா நிகழ்வுக்கு ஊர் தலைவரும் திராவிட கழக மாவட்ட செயலாளருமான மணிகண்டன் தலைமை வகித்தார் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் அபு பக்கர் சித்திக் முன்னாள் கவுன்சிலர் சகாயராஜ் விவசாயத்துறை சார்பில் பாண்டியன் மற்றும் ரஜினி அய்யனார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்வில் கிராம மக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் ஒருங்கிணைந்து மரம் நடுவிழா நடத்தினர் இந்த மரம் நடும் விழாவில் மரக்கன்று பராமரிப்பு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது அந்த குழுவில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் அமலன் எஸ்டிபிஐ கட்சி நகரத் தலைவர் உமர் கதிரேசன் அழகுராஜ் திராவிடர் கழக மாணவரணி தலைவர் ஹரி பிரசன்னா கதிரேசன் ஜான்சன் பாரத் பிரியன் வினித் மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மரம் நடும் விழாவில் மரக்கன்றுகள் வழங்கியதோடு நட்டும் வைத்தனர் நிகழ்வின் நிறைவாக திராவிட கழக மாணவரணி செயலாளர் ரஞ்சித் நன்றி கூறினார்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • திண்டுக்கல் திருச்சி ரோடு மானா மூனா கோவிலூர் பிரிவு அருகே மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் பலிகள் ஏதுமில்லை சம்பவ இடத்தில் தாலுகா போலீசார் விசாரணை
    1
    திண்டுக்கல் திருச்சி ரோடு மானா மூனா கோவிலூர் பிரிவு அருகே மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் பலிகள்  ஏதுமில்லை சம்பவ இடத்தில் தாலுகா போலீசார் விசாரணை
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • வெள்ளியணை அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில் சுற்றுப் பொங்கல் பெருவிழா - 2026 *அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில்* *வெள்ளியணை* *சுற்று பொங்கல் திருவிழா அழைப்பிதழ்* செல்வமும் சிறப்பும் சேரும் செழுந்திருப்புகழும் உண்டாம் கல்வியும் கனகம் எய்தும் கருணையும் அறிவும் உண்டாம் நல்லன எல்லாம் நண்ணுமற்றம் வெள்ளியணை வாழ் அன்னை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் பொன்னடி வணங்குவோர்க்கே!!! ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அன்னை பராசக்தி உலக உயிர்க்கும் உய்ய கொண்ட அவதாரங்களுள் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருவுருவமும் ஒன்றாகும். தமிழகத்திலேயே கீரண்டாவதாக ஸ்ரீ தேவி கருமாரியம்மன் வடிவுடன் விளங்கும் சந்ததம் வெள்ளியணை அன்னை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் என்றாலே காரிய வெற்றி. நன்னை அன்பு வரும் பக்தர்களுக்கு பூரண நலன்கள் தந்து காத்தருளும் பராசக்தியாக விளங்கும் திருக்கோவில் தான் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில். நிகழும் ஸ்ரீபராபவ வருடம் ஆவணி மாதம் 20ந்தேதி 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு அபிஷேகம். அன்று மாலை வீதிகளில் சுவாமி புறப்பாடு (வர்ணோ) நிகழும். ஆவணி மாதம்-21ம் தேதி 07.09.2026 திங்கட்கிழமை காலை 6 மணிக்கு அபிஷேகம் கொடுத்து அன்று முழுவதும் பொங்கல் மாவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால் கஸ்பா மற்றும் 18பட்டி கொத்துக்காரர்கள், பொதுமக்கள், திருப்பணிக் கமிட்டியினர் விழாவின் கலந்து கொண்டு அம்மன் அருள்பெற்று வெள்ளியானை சிறப்பாக நடத்தி கொடுக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். இந்த சுற்று பொங்கல் விழா கிராம பொதுமக்கள் வழங்கும் நன்கொடை மூலம் நடைபெறுவதால் அனைவரும் நன்கொடை அளித்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். 07.09.2026 திங்கள் கிழமை அன்று காலை 8.00 மணிக்கு ராயல் கோச் K.பழனிச்சாமி குடும்பத்தினர் மற்றும் M.பாலாஜி KTC வண்டி குடும்பத்தினர் இணைந்து அன்னதானம் வழங்குகிறார்கள். வெள்ளியணை கஸ்பா, 18 பட்டி கொத்துக்காரர்கள், பொதுமக்கள், திருப்பணிக் கமிட்டியினர் மற்றும் பரம்பரை காரிய கமிட்டி வகையறா, வெள்ளியணை
    2
    வெள்ளியணை அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில் சுற்றுப் பொங்கல் பெருவிழா - 2026
*அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில்*
*வெள்ளியணை*
*சுற்று பொங்கல் திருவிழா அழைப்பிதழ்*
செல்வமும் சிறப்பும் சேரும் செழுந்திருப்புகழும் உண்டாம்
கல்வியும் கனகம் எய்தும் கருணையும் அறிவும் உண்டாம்
நல்லன எல்லாம் நண்ணுமற்றம் வெள்ளியணை வாழ்
அன்னை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் பொன்னடி வணங்குவோர்க்கே!!!
ஸ்ரீ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அன்னை பராசக்தி உலக உயிர்க்கும் உய்ய கொண்ட அவதாரங்களுள் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருவுருவமும் ஒன்றாகும். தமிழகத்திலேயே கீரண்டாவதாக ஸ்ரீ தேவி கருமாரியம்மன் வடிவுடன் விளங்கும் சந்ததம் வெள்ளியணை அன்னை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் என்றாலே காரிய வெற்றி. நன்னை அன்பு வரும் பக்தர்களுக்கு பூரண நலன்கள் தந்து காத்தருளும் பராசக்தியாக விளங்கும் திருக்கோவில் தான் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில்.
நிகழும் ஸ்ரீபராபவ வருடம் ஆவணி மாதம் 20ந்தேதி 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு அபிஷேகம். அன்று மாலை வீதிகளில் சுவாமி புறப்பாடு (வர்ணோ) நிகழும். ஆவணி மாதம்-21ம் தேதி 07.09.2026 திங்கட்கிழமை காலை 6 மணிக்கு அபிஷேகம் கொடுத்து அன்று முழுவதும் பொங்கல் மாவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால் கஸ்பா மற்றும் 18பட்டி கொத்துக்காரர்கள், பொதுமக்கள், திருப்பணிக் கமிட்டியினர் விழாவின் கலந்து கொண்டு அம்மன் அருள்பெற்று வெள்ளியானை சிறப்பாக நடத்தி கொடுக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
இந்த சுற்று பொங்கல் விழா கிராம பொதுமக்கள் வழங்கும் நன்கொடை மூலம் நடைபெறுவதால் அனைவரும் நன்கொடை அளித்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
07.09.2026 திங்கள் கிழமை அன்று காலை 8.00 மணிக்கு ராயல் கோச் K.பழனிச்சாமி குடும்பத்தினர் மற்றும் M.பாலாஜி KTC வண்டி குடும்பத்தினர் இணைந்து அன்னதானம் வழங்குகிறார்கள்.
வெள்ளியணை கஸ்பா, 18 பட்டி கொத்துக்காரர்கள், பொதுமக்கள், திருப்பணிக் கமிட்டியினர் மற்றும் பரம்பரை காரிய கமிட்டி வகையறா, வெள்ளியணை
    user_சதிஷ் குமார்
    சதிஷ் குமார்
    கிருஷ்ணராயபுரம், கரூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • ஒட்டன்சத்திரம் முக்கிய சாலையில் திருவிழா போன்ற விசேஷங்களுக்காக நடு ரோட்டில் வெடி வெடிப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது மேலும் விபத்து உண்டாகும் சூழ்நிலையும் உள்ளது
    1
    ஒட்டன்சத்திரம் முக்கிய சாலையில் திருவிழா போன்ற விசேஷங்களுக்காக நடு ரோட்டில் வெடி வெடிப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது மேலும் விபத்து உண்டாகும் சூழ்நிலையும் உள்ளது
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.