ரயில் நின்று செல்ல அமைதிப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் பரங்கிப்பேட்டையில் செந்தூர், பாமணி உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் நின்று செல்லவும், ரயில் நிலைய நடைமேடையை நீட்டிப்பதற்கும், முந்தைய மாதிரியே ரயில் நிலைய தரத்தை உயர்த்துவதற்கும் பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கற்கும் மாபெரும் மக்கள் திரள் ரயில் மறியல் போராட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26.11.2024) காலை 11 மணிக்கு பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள், இந்நாள் சட்டமன்ற & பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வதற்கும் தயாராக இருந்தனர். இந்நிலையில் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் இன்று அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் திருச்சி கோட்டத்திலிருந்து உயரதிகாரிகள் வருகை தராத காரணத்தினால், கீழ்மட்ட அதிகாரிகளின் கருத்துக்கள் வழமை போல் கண்துடைப்பாகதான் இருக்கும் என்ற அடிப்படையிலும், கோரிக்கைகளை நிறைவேற்றும் உத்தரவாதத்துடன் உயரதிகாரிகள் வருகை தந்தால் அடுத்த அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப்படும். இல்லையெனில், திட்டமிட்டபடியே ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என போராட்டக் குழு அறிவிப்பு செய்துள்ளது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு கே. பாண்டியன், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு திருமதி செல்வி ராமஜெயம் மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் முஸ்லிம் லீக், அமமுக, விசிக, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத், காதிரியா ஜமாத், தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ரயில் நின்று செல்ல அமைதிப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் பரங்கிப்பேட்டையில் செந்தூர், பாமணி உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் நின்று செல்லவும், ரயில் நிலைய நடைமேடையை நீட்டிப்பதற்கும், முந்தைய மாதிரியே ரயில் நிலைய தரத்தை உயர்த்துவதற்கும் பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கற்கும் மாபெரும் மக்கள் திரள் ரயில் மறியல் போராட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26.11.2024) காலை 11 மணிக்கு பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள், இந்நாள் சட்டமன்ற & பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வதற்கும் தயாராக இருந்தனர். இந்நிலையில் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் இன்று அமைதிப் பேச்சு வார்த்தை
நடைபெற்றது. அதில் திருச்சி கோட்டத்திலிருந்து உயரதிகாரிகள் வருகை தராத காரணத்தினால், கீழ்மட்ட அதிகாரிகளின் கருத்துக்கள் வழமை போல் கண்துடைப்பாகதான் இருக்கும் என்ற அடிப்படையிலும், கோரிக்கைகளை நிறைவேற்றும் உத்தரவாதத்துடன் உயரதிகாரிகள் வருகை தந்தால் அடுத்த அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப்படும். இல்லையெனில், திட்டமிட்டபடியே ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என போராட்டக் குழு அறிவிப்பு செய்துள்ளது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு கே. பாண்டியன், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு திருமதி செல்வி ராமஜெயம் மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் முஸ்லிம் லீக், அமமுக, விசிக, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத், காதிரியா ஜமாத், தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- அண்ணாமலை பல்கலைக் கழக துணைேவந்தர் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது, இன்று பிரிவு உபசார விழா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது இதில் அனைத்து புல முதல்வர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.3
- கடலூர் குழந்தைகள் நல Dr.அபிநயா ஜெயராமன் அவர்களின் குளிர்காலமும் குழந்தைகள் நலனும் குறித்த பதிவு !!!1
- காரை மோதி விட்டு தப்பி ஓடிய கடலூர் ஆசாமிகள் drunk and drive 2 arrest1