logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஆதார் ரேஷன் அட்டையை தரையில் எரிந்து சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட சுருளி ஆறு அருகில் சலவை தொழில் செய்து வரும் சலவை தொழிலாளர்கள் ஆதார் அட்டை ரேஷன் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் சலவை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் இதுகுறித்து அச்சுறுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆற்று நீர் மாசுபடாத வகையில் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சலவை கூடம் அமைக்க தடை இல்லா சான்று வழங்க வேண்டும் என்றும் இதனால் தங்களது வாழ்வாதாரம் இல்லாததை அரசிற்கு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உணர்த்தும் வகையில் குடும்பத்தோடு அரசு வழங்கிய ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைக்கும் வகையில் தரையில் எரிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சலவை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

21 hrs ago
user_SARAVANAN K
SARAVANAN K
Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
21 hrs ago

தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஆதார் ரேஷன் அட்டையை தரையில் எரிந்து சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட சுருளி ஆறு அருகில் சலவை தொழில் செய்து வரும் சலவை தொழிலாளர்கள் ஆதார் அட்டை ரேஷன் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் சலவை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் இதுகுறித்து அச்சுறுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆற்று நீர் மாசுபடாத வகையில் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சலவை கூடம் அமைக்க தடை இல்லா சான்று வழங்க வேண்டும் என்றும் இதனால் தங்களது வாழ்வாதாரம் இல்லாததை அரசிற்கு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உணர்த்தும் வகையில் குடும்பத்தோடு அரசு வழங்கிய ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைக்கும் வகையில் தரையில் எரிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சலவை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி கலெக்டர் அலுவலகத்தில் TNGEA சங்கம் சார்பில் கலெக்டர் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமை அழிக்க மாவட்ட துணைத் தலைவர்கள் ரவிக்குமார் லட்சுமி அழகுராஜா சக்தி திருமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் TNPGTA மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் TNPTF மாவட்டத் தலைவர் ராம்குமார் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சிவமணி சிஐடியு மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர்கள் தமிழ் பரமன் மலர்விழி பரமேஸ்வரன் விஸ்வன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாநில செயலாளர் நீதி ராஜா நிறைவுறையாற்றினார் மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்
    2
    தேனி கலெக்டர் அலுவலகத்தில் TNGEA சங்கம் சார்பில் கலெக்டர் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமை அழிக்க மாவட்ட துணைத் தலைவர்கள் ரவிக்குமார் லட்சுமி அழகுராஜா சக்தி திருமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் TNPGTA மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் TNPTF மாவட்டத் தலைவர் ராம்குமார் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சிவமணி சிஐடியு மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர்கள் தமிழ் பரமன் மலர்விழி பரமேஸ்வரன் விஸ்வன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாநில செயலாளர் நீதி ராஜா நிறைவுறையாற்றினார் மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • தேனி மாவட்டம் போடி நகரில் தேமுதிக சார்பில் கேப்டன் பிறந்தநாள் கொண்டாட்டம் தேனி மாவட்டம் போடி நகர தேமுதிக சார்பில் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது பொதுமக்கள் கலந்து கொண்டனர் தேமுதிக சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது
    1
    தேனி மாவட்டம் போடி நகரில் தேமுதிக சார்பில் கேப்டன் பிறந்தநாள் கொண்டாட்டம் 
தேனி மாவட்டம் போடி நகர தேமுதிக சார்பில்  மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது பொதுமக்கள் கலந்து கொண்டனர் தேமுதிக சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது
    user_பொன் மாரிமுத்து
    பொன் மாரிமுத்து
    Chef போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு தேனி மாவட்டம் போடி கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு ​ஓணம் திருநாளை முன்னிட்டு 6 அடி உயர சிவலிங்கத்திற்கு வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் ​நந்தியம் பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் ​ ​தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கொண்டரங்கி மல்லையா சிவன் கோவிலில், ஆவணி மாத முதல் பிரதோஷம் மற்றும் ஓணம் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றது. ​இதனை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ​மேலும் ஓணம் திருநாளை முன்னிட்டு, கருவறையில் உள்ள 6 அடி உயர சிவலிங்கத்திற்குப் பல வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'நமசிவாய' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    1
    மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு
தேனி மாவட்டம் போடி கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு
​ஓணம் திருநாளை முன்னிட்டு 6 அடி உயர சிவலிங்கத்திற்கு வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம்
​நந்தியம் பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
​
​தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கொண்டரங்கி மல்லையா சிவன் கோவிலில், ஆவணி மாத முதல் பிரதோஷம் மற்றும் ஓணம் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றது.
​இதனை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
​மேலும் ஓணம் திருநாளை முன்னிட்டு, கருவறையில் உள்ள 6 அடி உயர சிவலிங்கத்திற்குப் பல வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'நமசிவாய' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது இந்நிலையில் இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் உள்ள அரசு சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள் இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    1
    2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் 

தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட  108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்
அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது
வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது
இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்
தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும்
தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்
ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில்  வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது
இந்நிலையில்  இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்
தங்களது கிராமத்தில் உள்ள அரசு  சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள்
இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில்  வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும்
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும்
தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது
மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து 
தேனி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு  வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக ஆகஸ்ட் 25 முதல் 28- ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வழியாக காலை 6 முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்  சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிற்பகல் 4 மணிக்கு மேல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு 
வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு  நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக ஆகஸ்ட் 25 முதல் 28- ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வழியாக காலை 6 முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்  சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிற்பகல் 4 மணிக்கு மேல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    1
    விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள். தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.
    1
    டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள்.
தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை  (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள்  அடைக்கப்படும் என்று  தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    16 hrs ago
  • முந்தல் சொக்கன் அலை மேலபரவு சிறைக்காடு மலைவாழ் மக்களுக்கு இருப்பிடம்,பட்டா வேண்டி கலெக்டரிடம் மனு ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் விவசாய செய்யக்கூடிய நிலங்களுக்கு அளவீடு செய்து பட்டா வழங்க கோரி கண்ணீர் விட்டு கதறி அழுது கோரிக்கை விடுத்த ஆதிவாசி மக்கள் தேனி மாவட்டம் போடி தாலுகா பெரியகுளம் தாலுகா ஆண்டிபட்டி தாலுகா உத்தமபாளையம் தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முதுவார் குடி சிறைக்காடு சோலையூர் மேலப்பரவு களம் முந்தல் சொக்கன் அலை கரும்பாறை குறவன் குழி செல்லாங்காலனி நேரு நகர் வேலப்பர் கோவில் உப்புத்துறை தாழையூத்து கரட்டுப்பட்டி பளியங்குடி நொச்சி யோடை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 355 பேருக்கு விவசாய நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்க கோரிக்கை விடுத்திருந்தோம் ஆனால் வன உரிமை சட்டம் 2006-ன் படி தேனி மாவட்டத்தில் 350 பழங்குடியினர் நிலத்தை வருவாய் துறையினர் கள ஆய்வு செய்து நிலத்தை பழங்குடியினர் நிலத்தை நில சர்வ செய்து வன உரிமை சட்டப்படி நிலம் வழங்க வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
    1
    முந்தல் சொக்கன் அலை மேலபரவு சிறைக்காடு மலைவாழ் மக்களுக்கு இருப்பிடம்,பட்டா வேண்டி கலெக்டரிடம்  மனு
ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் விவசாய செய்யக்கூடிய நிலங்களுக்கு அளவீடு செய்து பட்டா வழங்க கோரி கண்ணீர் விட்டு கதறி அழுது கோரிக்கை விடுத்த ஆதிவாசி மக்கள் 
தேனி மாவட்டம்  போடி தாலுகா பெரியகுளம் தாலுகா ஆண்டிபட்டி தாலுகா உத்தமபாளையம் தாலுகா  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முதுவார் குடி சிறைக்காடு சோலையூர் மேலப்பரவு களம் முந்தல் சொக்கன் அலை கரும்பாறை குறவன் குழி செல்லாங்காலனி நேரு நகர் வேலப்பர் கோவில் உப்புத்துறை தாழையூத்து கரட்டுப்பட்டி பளியங்குடி நொச்சி யோடை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 355 பேருக்கு விவசாய நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்க கோரிக்கை விடுத்திருந்தோம்
ஆனால் வன உரிமை சட்டம் 2006-ன் படி தேனி மாவட்டத்தில் 350 பழங்குடியினர் நிலத்தை வருவாய் துறையினர் கள ஆய்வு செய்து நிலத்தை பழங்குடியினர் நிலத்தை நில சர்வ செய்து வன உரிமை சட்டப்படி நிலம் வழங்க வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.