தூத்துக்குடி: பாஜக வடக்கு மண்டல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் — சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பங்கேற்பு தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வடக்கு மண்டல் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார். ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தன் அனுபவங்களை எடுத்துரைத்த அவர், “283 கிளைகளில் வெறும் 13 கிளைத் தலைவர்கள் மட்டுமே கூட்டத்திற்கு வந்த நிலை இருந்தது. அதனை மாற்றுவதற்காக ஒவ்வொரு கிளையிலும் நேரடியாக சென்று பொதுமக்களையும் கிளை நிர்வாகிகளையும் சந்தித்து பிரச்சினைகள் குறித்து பேசினேன். அதன் பயனாக ஒரு மாதத்திற்குள் 165 செயல்திறன் கொண்ட கிளைத் தலைவர்கள் உருவானார்கள்” என்றார். மேலும், “ஒவ்வொரு கிளையிலும் உள்ள குறை, நிறைகளை கண்டறிந்து அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்னால் அதன் பலன் மிகப்பெரியதாக இருக்கும். மாநில தலைவர் யார், எம்எல்ஏ யார் என்பதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். உங்கள் கிளையில் மக்களுக்காக நீங்கள் செயல்பட்டால் அதற்கான பிரதிபலிப்பு நிச்சயம் கிடைக்கும்” என்று அவர் நிர்வாகிகளுக்கு வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் மண்டல் தலைவர் சுதா, மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணை தலைவர் சிவராமன், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், வடக்கு மண்டல் பிரபாரி சரவணன், ஜெயகிருஷ்ணன், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், OBC அணி மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜ், OBC மாவட்ட செயலாளர் குரு, வடக்கு மண்டல் பொதுச் செயலாளர் சங்கர் கணேஷ், அன்புராஜ் உள்ளிட்ட பல்வேறு பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

- சுரண்டை சிவகுருநாதபுரம் சிவகாமசுந்தரி சமேத சிவகுருநாதர் திருக்கோவிலில் மார்கழி மாத பஜனை நோன்பு மற்றும் சிறப்பு ஆராதனை வழிபாடுகள் இன்று காலை நடந்தது1
- *திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு தேனியில் பழமை வாய்ந்த சிவ சக்தி விநாயகர் திருக்கோயிலில் ஆண்டாள் நகர்வள புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலமாக சென்றனர்* தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று ஆண்டாளுக்கு நான்காம் ஆண்டு திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக கோயில் வளாகத்தில் வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்திருந்த ஆண்டாளுக்கு ஆபரணங்கள் அணிவித்து கிரீடம் வைத்து வண்ணமலர் மாலைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஆண்டாளுக்கு தீபம் காட்டப்பட்டு கற்பூரம் சுற்றி புறப்பாடு தொடங்கியது பக்தர்கள் சப்பரத்தை இழுத்துச் செல்ல பெண்கள் சீர் வரிசைகளுடன் திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலம் சென்றனர் தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆண்டாளை வழிநடக பக்தர்கள் தரிசனம் செய்தனர் பின்னர் அல்லிநகரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று புறப்பாடு நிறைவு பெற்றது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசனம் செய்து சென்றனர்1
- திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கப்ட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் ஆலயத்தில் இன்று மார்கழி மாதத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் எஸ். காமாட்சிபுரம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இருந்து 200 பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜையானது குழந்தைகளின் கல்வி, மங்களம் பெருகவும், ஆரோக்கியம், செல்வம் பெருகும் . தீமைகள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். தீபத்தை ஏற்றி முதலில் கணபதி பூஜை பின்னர் குலதெய்வம், முருகப்பெருமானை மனதால் நினைத்து வழிபட்டார்கள். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் பாதாள செம்பு முருகன் திருக்கோவில் சார்பாக இந்த வருடத்திற்கான காலண்டர் மற்றும் முருகனின் புகைப்படம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.1
- ஜல்லிக்கட்டு காளைக்கு சிறப்பு பூஜை! புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் தொடங்கியுள்ள நிலையில் அந்த காளைக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்று மாலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டு படையல் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான காளை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.1
- தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது1
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக குண்டடம் ஒன்றியம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதன் பின்னர் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்1
- தென்காசி மாவட்டம் சுரண்டை நகர திமுக சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார் நகர செயலாளர் கணேசன் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார் தென்காசி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் கலைகதிரவன், பாலன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- தேவதானப்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் கூடாரவல்லி முன்னிட்டு பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் மார்கழி மாதம் 27ஆம் தேதி கூடாரவல்லி முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் பெண்கள் வாழை இலையில் வளையல் மஞ்சள் குங்குமம் மற்றும் குத்துவிளக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு குடும்ப பிரச்சினைகள், மாணவர்களின் கல்வி, தொழில், விவசாயம் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பத்ரகாளியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரணைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் அதன்பின்பு இந்து நாடார் உறவின்முறை சமுதாயம் சார்பாக திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண் பக்தர்களுக்கு அன்பளிப்பு மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்1
- திண்டுக்கல் செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செம்பட்டி ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரூ. 2 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆடுகள் விற்பனை செய்யும் வாரச்சந்தை நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற இந்தச் சந்தைக்கு ஆந்திரம், கா்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, ஒட்டன்சத்திரம், மணப்பாறை, அய்யலூா், திருச்சி, மதுரை, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இந்த நிலையில், தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், தொடா் விடுமுறையை முன்னிட்டு ஆடுகள், கிடாய்கள் விற்பனைக்கு வந்தன. இதையடுத்து, ஆட்டுச் சந்தையில் சுமாா் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டுக் கிடா ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 14 ஆயிரம் வரையிலும், 15 கிலோ எடை கொண்ட கிடா ரூ. 22 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. எடையைப் பொருத்து கிடாய்களின் விலை நிா்ணயம் செய்யப்பட்டது. சந்தையில் செம்மறி ஆடு, வெள்ளாட்டுக் கிடா அதிகளவில் விற்பனையானது. வெள்ளாட்டுக் கிடாய்களை இறைச்சிக் கடை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனா். இதனால், சுமாா் ரூ. 2 கோடி வரை வியாபாரம் நடைபெற்ால், ஆட்டுக் கிடாய்களை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், தமிழத்தில் ஆடுகள் வளா்க்கப்படுவது குறைந்ததன் காரணமாக அவற்றின் விலை உயா்ந்ததாக ஆடு வியாபாரிகள் தெரிவித்தனா். இதே போல, செம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து நாட்டுக் கோழிகள், சேவல்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரு கிலோ எடை கொண்ட நாட்டு ரக சேவல் ரூ. 1,000 முதல் ரூ. 1,200 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.1