logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பாலக்கோடு அருகே சோகம்... மின் கம்பம் டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி அதிமுக நிர்வாகி பலி

11 hrs ago
user_SURENDIRAVARMA. C
SURENDIRAVARMA. C
Local News Reporter Palakkodu, Dharmapuri•
11 hrs ago

பாலக்கோடு அருகே சோகம்... மின் கம்பம் டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி அதிமுக நிர்வாகி பலி

More news from தமிழ்நாடு and nearby areas
  • கிருஷ்ணகிரிஅருகே குறிஞ்சி நகர் பகுதிமக்கள் கலெக்டரிடம் மனு கிருஷ்ணகிரி அருகே தானம்பட்டி சாலையில் குறிஞ்சி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் திருக்கோயில்கள் பள்ளிக்கூடங்கள் மத்தியில் அரசு டாஸ்மாக் கடையும் இயங்கி இருக்கிறது  இதனால் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமக்களின் அலப்பறையினால் குடியிருப்பு பகுதி மக்கள் தினமும் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    1
    கிருஷ்ணகிரிஅருகே குறிஞ்சி நகர் பகுதிமக்கள் கலெக்டரிடம் மனு


கிருஷ்ணகிரி அருகே தானம்பட்டி சாலையில் குறிஞ்சி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் திருக்கோயில்கள் பள்ளிக்கூடங்கள் மத்தியில் அரசு டாஸ்மாக் கடையும் இயங்கி இருக்கிறது 
இதனால் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமக்களின் அலப்பறையினால் குடியிருப்பு பகுதி மக்கள் தினமும் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் ஜோய் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ மருத்துவமுகாமினை தொடங்கி வைத்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் ஜோய் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ மருத்துவமுகாமினை தொடங்கி வைத்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார். தருமபுரி மாவட்டத்தில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் தருமபுரி மாவட்ட செயலாளர் தகடூர் கார்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மருத்துவ முகாமினை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இம்முகாமினை நிறுவனரும் மாநில தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். பின்னர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 50க்கும் மேற்பட்டோருக்கு தேவையான கையுறை,சனுக்கு, பாண்டல், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியவசியமான உபகரணங்களை வழங்கினார். அதனையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் வழங்கினார். பின்னர் தருமபுரி மாவட்ட அலுவலகத்திற்கு சென்ற அவர் புதிய கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாநில செயலாளர் நெல்லை ஜீவா மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் குளேபால் பூபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாநில இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட மாநில மண்டல தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் ஜோய் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ மருத்துவமுகாமினை தொடங்கி வைத்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் ஜோய் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ மருத்துவமுகாமினை தொடங்கி வைத்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் தருமபுரி மாவட்ட செயலாளர் தகடூர் கார்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மருத்துவ முகாமினை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  நடைபெற்றது. இம்முகாமினை நிறுவனரும் மாநில தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். பின்னர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 50க்கும் மேற்பட்டோருக்கு தேவையான கையுறை,சனுக்கு, பாண்டல், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியவசியமான உபகரணங்களை வழங்கினார். அதனையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் வழங்கினார். பின்னர் தருமபுரி மாவட்ட அலுவலகத்திற்கு சென்ற அவர் புதிய கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநில செயலாளர் நெல்லை ஜீவா மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் குளேபால் பூபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாநில இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட மாநில மண்டல தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தருமபுரியில் கயல் குழும நிர்வாக இயக்குனர் பிறந்தநாள் விழா – 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கயல் குழுமம் மற்றும் வெங்கடாசலம் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் இல.வெ. அறிவழகனின் 39-வது பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் சமூக நலப் பணிகள் சிறப்பாக நடைபெற்றன. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சமூகத்தின் சுகாதாரம் மற்றும் தூய்மையைப் பாதுகாப்பதில் அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கயல் குழுமம் மற்றும் வெங்கடாசலம் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் இல.வெ. அறிவழகன் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டிய அவர், பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை எடுத்துரைத்தார். தங்களது அன்றாட பணிகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு, நகரங்கள் மற்றும் கிராமங்களின் தூய்மையைப் பாதுகாத்து வரும் பணியாளர்களுக்கு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உதவிகள் வழங்கப்பட்ட நிகழ்வு, சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளைப் பெற்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தை சமூக நலத்துடன் இணைத்து, தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு பங்கேற்றவர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற சமூக நலப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்களின் சேவையை பொதுமக்கள் மதித்து அவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் சங்க நிர்வாகிகள், டாக்டர் இல.வெ. அறிவழகனுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் நந்தகுமார், ரவிச்சந்திரன் மாவட்ட இணைச்செயலாளர் கார்த்திகேயன், செய்தி தொடர்பாளர் ராமதாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சிங்காரவேல், ரவி, கண்ணையன், கிருஷ்ணன், ராஜபாண்டி, விசேல் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, தூய்மை பணியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
    1
    தருமபுரியில் கயல் குழும நிர்வாக இயக்குனர் பிறந்தநாள் விழா – 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
கயல் குழுமம் மற்றும் வெங்கடாசலம் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் இல.வெ. அறிவழகனின் 39-வது பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் சமூக நலப் பணிகள் சிறப்பாக நடைபெற்றன.
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சமூகத்தின் சுகாதாரம் மற்றும் தூய்மையைப் பாதுகாப்பதில் அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் கயல் குழுமம் மற்றும் வெங்கடாசலம் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் இல.வெ. அறிவழகன் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டிய அவர், பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை எடுத்துரைத்தார்.
தங்களது அன்றாட பணிகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு, நகரங்கள் மற்றும் கிராமங்களின் தூய்மையைப் பாதுகாத்து வரும் பணியாளர்களுக்கு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உதவிகள் வழங்கப்பட்ட நிகழ்வு, சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளைப் பெற்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தை சமூக நலத்துடன் இணைத்து, தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு பங்கேற்றவர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
மேலும், இதுபோன்ற சமூக நலப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்களின் சேவையை பொதுமக்கள் மதித்து அவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் சங்க நிர்வாகிகள், டாக்டர் இல.வெ. அறிவழகனுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் நந்தகுமார், ரவிச்சந்திரன் மாவட்ட இணைச்செயலாளர் கார்த்திகேயன், செய்தி தொடர்பாளர் ராமதாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சிங்காரவேல், ரவி, கண்ணையன், கிருஷ்ணன், ராஜபாண்டி, விசேல் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, தூய்மை பணியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    1 day ago
  • அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் துவக்க விழா! அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் துவக்க விழா! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8:50 மணி அளவில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்  துவக்க விழா  அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். உடன் நாட்றம்பள்ளி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமச்சந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் சக்திராஜா (எ) செந்தில்குமார் பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட்  ராஜ்குமார் காலை உணவு திட்ட மாவட்ட உதவி அலுவலர்  சத்திய, வட்டார மேலாளர்  காந்திமதி,  பள்ளி தூதுவர் பாலசுப்பிரமணியன்  பள்ளி  மேலாண்மை குழு   தலைவர் (பொறுப்பு) சங்கர் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்  நாராயணமூர்த்தி, பொருளாளர் பாபு  சுகாதார ஊக்குனர் இந்துமதி, பள்ளி கல்வி குழு தலைவர் ராஜ்குமார் மற்றும் ஏ.எம்.மூர்த்தி, பரத் அம்பலூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்  கோபிநாதன், மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் திலகவதி, சபீதா, கலையரசி  பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சரவணன், வெங்கடேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கிரிதரன், பாலாசெல்வம், ரமேஷ், மஞ்சுளா,  மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    2
    அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் துவக்க விழா!
அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் துவக்க விழா!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8:50 மணி அளவில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்  துவக்க விழா  அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.
உடன் நாட்றம்பள்ளி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமச்சந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் சக்திராஜா (எ) செந்தில்குமார் பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட்  ராஜ்குமார் காலை உணவு திட்ட மாவட்ட உதவி அலுவலர்  சத்திய, வட்டார மேலாளர்  காந்திமதி,  பள்ளி தூதுவர் பாலசுப்பிரமணியன்  பள்ளி  மேலாண்மை குழு   தலைவர் (பொறுப்பு) சங்கர் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்  நாராயணமூர்த்தி, பொருளாளர் பாபு  சுகாதார ஊக்குனர் இந்துமதி, பள்ளி கல்வி குழு தலைவர் ராஜ்குமார் மற்றும் ஏ.எம்.மூர்த்தி, பரத் அம்பலூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்  கோபிநாதன், மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் திலகவதி, சபீதா, கலையரசி  பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சரவணன், வெங்கடேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கிரிதரன், பாலாசெல்வம், ரமேஷ், மஞ்சுளா,  மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • சேலம் வ உ சி பூ மார்க்கெட்டில் அமைச்சர் பார்த்திபன் ஆய்வு! வியாபாரிகளிடம் உறுதி... சேலம் வ உ சி பூ மார்க்கெட் பகுதியில் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக வியாபாரிகள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை நேரில் சந்தித்து மனு அளித்ததை தொடர்ந்து, இன்று மாநகராட்சி ஆணையாளருடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வியாபாரிகளிடம் அவர்களுடைய கோரிக்கைகள் மற்றும் அப்பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகளிடம் தெரிவித்தார்.
    1
    சேலம் வ உ சி பூ மார்க்கெட்டில் அமைச்சர் பார்த்திபன் ஆய்வு! வியாபாரிகளிடம் உறுதி...
சேலம் வ உ சி பூ மார்க்கெட் பகுதியில் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக வியாபாரிகள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை நேரில் சந்தித்து மனு அளித்ததை தொடர்ந்து, இன்று மாநகராட்சி ஆணையாளருடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வியாபாரிகளிடம் அவர்களுடைய கோரிக்கைகள் மற்றும் அப்பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகளிடம் தெரிவித்தார்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • சாலையில் கொட்டி கிடந்த குப்பையால் இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல அவதி வாணியம்பாடி புதூர் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி முன்பு நடந்து செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் சாலையில் தேங்கி உள்ளது இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல கூட வழியில்லாமல் குப்பைகள் சாலையில் கொட்டிக் கிடப்பதால் பொதுமக்கள் அவதி
    1
    சாலையில் கொட்டி கிடந்த குப்பையால் இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல அவதி
வாணியம்பாடி  புதூர் அரசு நிதி உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி முன்பு நடந்து செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் சாலையில் தேங்கி உள்ளது
இறந்தவர் சடலத்தை எடுத்துச் செல்ல கூட வழியில்லாமல் குப்பைகள் சாலையில் கொட்டிக் கிடப்பதால் பொதுமக்கள் அவதி
    user_VICKY REPORTER Press
    VICKY REPORTER Press
    வாணியம்பாடி, திருப்பத்தூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • தொடர் மழை எதிரொலி: காரிமங்கலம் வார சந்தையில் தேங்காய் விலை சரிவு தொடர் மழை எதிரொலி: காரிமங்கலம் வார சந்தையில் தேங்காய் விலை சரிவு! கூடுதல் விபரங்களுக்கு வீடியோவை காண்க!
    1
    தொடர் மழை எதிரொலி: காரிமங்கலம் வார சந்தையில் தேங்காய் விலை சரிவு
தொடர் மழை எதிரொலி: காரிமங்கலம் வார சந்தையில் தேங்காய் விலை சரிவு!
கூடுதல் விபரங்களுக்கு வீடியோவை காண்க!
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டலப்பட்டியில் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டுமென சமூகஆர்வலர் கோரிக்கை வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த குண்டலப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட குள்ளபள்ளம் என்ற கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீர் வழங்கி வருவதை கண்டித்தும், தற்போதுள்ள சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல் வேகமாக மாவட்டத்தில் பரவி வருவதால் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதை சரி செய்து சுகாதாரமான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டுமென சமூக ஆர்வலரும், சமூக நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளருமான டாக்டர் சந்திரமோகன் கோரிக்கை வைத்தார்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டலப்பட்டியில் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டுமென சமூகஆர்வலர் கோரிக்கை வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த குண்டலப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட குள்ளபள்ளம் என்ற கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீர் வழங்கி வருவதை கண்டித்தும், தற்போதுள்ள சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல் வேகமாக மாவட்டத்தில் பரவி வருவதால் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதை சரி செய்து சுகாதாரமான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டுமென சமூக ஆர்வலரும், சமூக நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளருமான டாக்டர் சந்திரமோகன் கோரிக்கை வைத்தார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • ஏரிக்குள் ஜீப்பை நிறுத்தி மது அருந்திய 2 வாலிபர்கள் கனமழையால் ஏரியில் மூழ்கிய ஜீப் பொக்லைன் மூலம் மீட்பு மீட்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்! தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள குமாரசெட்டி ஏரிக்கு, நேற்று முன்தினம் இரவு இரண்டு வாலிபர்கள் ஜீப்பில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏரியில் தண்ணீர் குறைவாக இருந்ததால், ஏரியின் உள்ளே ஜீப்பை நிறுத்திவிட்டு இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மது போதையில் இருந்த இருவரும் ஜீப்பிலேயே தூங்கியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் எதிர்பாராத வகையில் அன்றிரவு பெய்த கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் தண்ணீர் மட்டம் வேகமாக உயர்ந்து, ஜீப் படிப்படியாக தண்ணீரில் மூழ்கியுள்ளது. தூக்கம் கலைந்து எழுந்த இரண்டு வாலிபர்களும் ஜீப் தண்ணீரில் மூழ்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக ஜீப்பில் இருந்து வெளியேறிய அவர்கள், அப்பகுதி பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து, ஜீப்பில் கயிறு கட்டி, நீரில் மூழ்கியிருந்த ஜீப்பை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஏரியில் இருந்து வெளியே மீட்டுள்ளனர். ஏரியில் தண்ணீர் குறைவாக இருப்பதாக நினைத்து ஜீப்பை உள்ளே நிறுத்திய நிலையில், ஒரே இரவில் கனமழையால் ஜீப் தண்ணீரில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நீரில் மூழ்கிய ஜீப்பை பொதுமக்கள் பொக்லைன் மூலம் மீட்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன.
    1
    ஏரிக்குள் ஜீப்பை நிறுத்தி மது அருந்திய 2 வாலிபர்கள்
கனமழையால் ஏரியில் மூழ்கிய ஜீப்  பொக்லைன் மூலம் மீட்பு
மீட்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்!
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள குமாரசெட்டி ஏரிக்கு, நேற்று முன்தினம் இரவு இரண்டு வாலிபர்கள் ஜீப்பில் வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஏரியில் தண்ணீர் குறைவாக இருந்ததால், ஏரியின் உள்ளே ஜீப்பை நிறுத்திவிட்டு இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் மது போதையில் இருந்த இருவரும் ஜீப்பிலேயே தூங்கியுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் எதிர்பாராத வகையில் அன்றிரவு பெய்த கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.
இதனால் ஏரியில் தண்ணீர் மட்டம் வேகமாக உயர்ந்து, ஜீப் படிப்படியாக தண்ணீரில் மூழ்கியுள்ளது.
தூக்கம் கலைந்து எழுந்த இரண்டு வாலிபர்களும் ஜீப் தண்ணீரில் மூழ்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக ஜீப்பில் இருந்து வெளியேறிய அவர்கள், அப்பகுதி பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து, ஜீப்பில் கயிறு கட்டி, நீரில் மூழ்கியிருந்த ஜீப்பை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஏரியில் இருந்து வெளியே மீட்டுள்ளனர்.
ஏரியில் தண்ணீர் குறைவாக இருப்பதாக நினைத்து ஜீப்பை உள்ளே நிறுத்திய நிலையில், ஒரே இரவில் கனமழையால் ஜீப் தண்ணீரில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நீரில் மூழ்கிய ஜீப்பை பொதுமக்கள் பொக்லைன் மூலம் மீட்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.