தேனி உழவர் சந்தையின் இன்றைய காய்கறிகளின் விலை விபரம் (15.09.2026) தேனி உழவர் சந்தையின் இன்றைய காய்கறிகளின் விலை விபரம் (15.09.2026) கத்தரிக்காய் - 38, 35 தக்காளி - 25 வெண்டைக்காய் - 35, 30 கொத்தவரைக்காய் - 34, 30 சுரைக்காய் - 14, 10 புடலங்காய் - 30, 24 பாகற்காய் - 58, 38 பீர்க்கங்காய் - 38, 35 முருங்கைக்காய் (நீளம்) - 35, 35/30, 20 பூசணிக்காய் - 16, 18, 15 பச்சை மிளகாய் (உருட்டு) - 74, 70 அவரைக்காய் - 64, 60 தேங்காய் - 58 ஆப்பிள் - 260, 180, 140 ஆரஞ்சு - 160 மாதுளை - 220, 160 சாத்துக்குடி - 80 உருளைக்கிழங்கு - 55, 28 கருணைக்கிழங்கு - 50 சேப்பங்கிழங்கு - 35 கருவேப்பிலை - 58 கொத்தமல்லி - 35 புதினா - 64 சின்ன வெங்காயம் - 85, 80, 75 பெரிய வெங்காயம் - 65, 60, 50 இஞ்சி - 160, 75 வெள்ளை பூண்டு - 240, 200, 180, 160, 140, 100 வாழை இலை - 60 வாழைப்பூ - 10 வாழைத்தண்டு - 15 வாழைப்பழம் - 70, 60 பீட்ரூட் - 33 நூல்கோல் - 34, 30 முள்ளங்கி - 25 முருங்கை பீன்ஸ் - 90 பட்டர் பீன்ஸ் - 120 சோயா பீன்ஸ் - 100 செலக்ஷன் பீன்ஸ் - 74 முட்டைக்கோஸ் - 28 கேரட் - 48 சௌசௌ - 30 காலி பிளவர் - 35, 30, 25 பச்சை பட்டாணி - 170, 150 சேம்பு - 50 எலுமிச்சை - 220, 180, 130 பப்பாளி - 35, 30, 25 சப்போட்டா - 60 நெல்லிக்காய் - 65 மொச்சை - 54 மக்காச்சோளக்கதிர் - 50 அரைக்கீரை - 25 கோழி அவரை - 58 பொன்னாங்கண்ணிக்கீரை - 20 கோவக்காய் - 36 குடமிளகாய் - 46 ச.வ.கிழங்கு - 60 மிளகுதக்காளி கீரை - 25 வாழைப்பழம் (பச்சை) - 50 வாழைப்பழம் (பூவன்) - 40 வாழைப்பழம் (நேந்திரன்) - 50 வாழைக்காய் - 30, 36
தேனி உழவர் சந்தையின் இன்றைய காய்கறிகளின் விலை விபரம் (15.09.2026) தேனி உழவர் சந்தையின் இன்றைய காய்கறிகளின் விலை விபரம் (15.09.2026) கத்தரிக்காய் - 38, 35 தக்காளி - 25 வெண்டைக்காய் - 35, 30 கொத்தவரைக்காய் - 34, 30 சுரைக்காய் - 14, 10 புடலங்காய் - 30, 24 பாகற்காய் - 58, 38 பீர்க்கங்காய் - 38, 35 முருங்கைக்காய் (நீளம்) - 35, 35/30, 20 பூசணிக்காய் - 16, 18, 15 பச்சை மிளகாய் (உருட்டு) - 74, 70 அவரைக்காய் - 64, 60 தேங்காய் - 58 ஆப்பிள் - 260, 180, 140 ஆரஞ்சு - 160 மாதுளை - 220, 160 சாத்துக்குடி - 80 உருளைக்கிழங்கு - 55, 28 கருணைக்கிழங்கு - 50 சேப்பங்கிழங்கு - 35 கருவேப்பிலை - 58 கொத்தமல்லி - 35 புதினா - 64 சின்ன வெங்காயம் - 85, 80, 75 பெரிய வெங்காயம் - 65, 60, 50 இஞ்சி - 160, 75 வெள்ளை பூண்டு - 240, 200, 180, 160, 140, 100 வாழை இலை - 60 வாழைப்பூ - 10 வாழைத்தண்டு - 15 வாழைப்பழம் - 70, 60 பீட்ரூட் - 33 நூல்கோல் - 34, 30 முள்ளங்கி - 25 முருங்கை பீன்ஸ் - 90 பட்டர் பீன்ஸ் - 120 சோயா பீன்ஸ் - 100 செலக்ஷன் பீன்ஸ் - 74 முட்டைக்கோஸ் - 28 கேரட் - 48 சௌசௌ - 30 காலி பிளவர் - 35, 30, 25 பச்சை பட்டாணி - 170, 150 சேம்பு - 50 எலுமிச்சை - 220, 180, 130 பப்பாளி - 35, 30, 25 சப்போட்டா - 60 நெல்லிக்காய் - 65 மொச்சை - 54 மக்காச்சோளக்கதிர் - 50 அரைக்கீரை - 25 கோழி அவரை - 58 பொன்னாங்கண்ணிக்கீரை - 20 கோவக்காய் - 36 குடமிளகாய் - 46 ச.வ.கிழங்கு - 60 மிளகுதக்காளி கீரை - 25 வாழைப்பழம் (பச்சை) - 50 வாழைப்பழம் (பூவன்) - 40 வாழைப்பழம் (நேந்திரன்) - 50 வாழைக்காய் - 30, 36
- இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தேனியில் விமர்சியாக நடந்தது தேனியில் செயல்பட்டு வரும் இந்து எழுச்சி முன்னணி அமைப்பு சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் செண்டா மேளம் முழங்க அரிசி கொம்பன் யானை முன் நின்று வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைக்க இந்த ஊர்வலமானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்று பாலம் வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்1
- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.1
- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் வராக நதியில் சிலைகள் கரைப்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், தெ.கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைத் தொடர்ந்து இன்று மாலை வேளையில் அனைத்துச் சிலைகளும் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் சுருள் கத்தி, வால் சுற்றுதல், உள்ளிட்ட விளையாட்டுக்களுடன் அரண்மனைத் தெரு, வி.ஆர்.பி தெரு, தென்கரை சுதந்திர வீதி மற்றும் அக்ரகாரம் வழியாக முக்கிய வீதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முடிவில், அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன. அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறுவதற்காக, பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில், 18 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 650 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.1
- ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு தமிழக வெற்றிக்கழக ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான செட்டிநாயக்கன்பட்டி, சிலப்பாடி, தாடிக்கொம்பு , சின்னாளப்பட்டி, காந்திகிராமம், ஆத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நீண்ட நாட்களாக போதிய மழையில்லாமல் வறண்ட வானிலை காரணமாக கடும் வெப்பம் இருந்து வந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். இக்கண்திருஸ்டி கணபதி இராஜகணபதியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது போல் சிலை அமைந்திருந்தது. இன்று கணபதிக்கு சிறப்புபூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.2
- குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட வனவிலங்குகள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தண்ணீருக்காக சாலையில் திரியும் அரிய வகை சிங்கவால் குரங்குகள் சாலையில் ஓடிய மழைநீரை குரங்குகள் அருந்திய நிலையில், வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி அமைத்து தர விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை1
- பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பெரியகுளம் MLA தொடங்கி வைத்தார் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது வராக நதியில் கரைப்பதற்கு போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து பெரியகுளம் நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தநூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலமாக எடுத்து வந்து வராக நதியில் கரைக்கப்பட்டது முன்னதாக இந்த ஊர்வலத்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் தொடங்கி வைத்தார் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்ட இந்து முன்னணி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்1