logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஜாகீர் மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லாண்டியம்மன் திருக்கோவிலில், மஹா கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை நிறைவடைந்தது. இந்த நிறைவு விழாவையொட்டி மாவிளக்கு பூஜை மற்றும் அம்மன் நகர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லாக்கில் ஸ்ரீ செல்லாண்டியம்மன் எழுந்தருளி நகர் வலம் வந்தார். ஜாகீர் மோட்டூர், சின்ன கானப்பள்ளி, பூசாரிப்பட்டி, பளைய பாஞ்சாலியூர், கிருஷ்ணாபுரம், அண்ணையன் கொட்டாய் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாவிளக்குகளுடன் ஊர்வலமாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். நகர்வலத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. இந்த மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை மேலே குறிப்பிடப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள் மட்டுமின்றி கிராம மக்களும் சிறப்பாக செய்திருந்தனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ செல்லாண்டியம்மனை தரிசித்த கிராம மக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

2 hrs ago
user_சிவா
சிவா
Local News Reporter கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
2 hrs ago
4c692f78-dff2-4d9c-af30-693b2660473b

கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஜாகீர் மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லாண்டியம்மன் திருக்கோவிலில், மஹா கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை நிறைவடைந்தது. இந்த நிறைவு விழாவையொட்டி மாவிளக்கு பூஜை மற்றும் அம்மன் நகர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லாக்கில் ஸ்ரீ செல்லாண்டியம்மன் எழுந்தருளி நகர் வலம் வந்தார். ஜாகீர் மோட்டூர், சின்ன கானப்பள்ளி, பூசாரிப்பட்டி, பளைய பாஞ்சாலியூர், கிருஷ்ணாபுரம், அண்ணையன் கொட்டாய் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாவிளக்குகளுடன் ஊர்வலமாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். நகர்வலத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. இந்த மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை மேலே குறிப்பிடப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள் மட்டுமின்றி கிராம மக்களும் சிறப்பாக செய்திருந்தனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ செல்லாண்டியம்மனை தரிசித்த கிராம மக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

More news from Tirupathur and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தின் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, பக்தர்களின் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, விக்னேஸ்வர பூஜை மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தங்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, மகா தீபாராதனையுடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. இந்த கும்பாபிஷேக விழாவில், மாடப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ எல்லையம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகரை தரிசித்தனர். மேலும், வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் ரத்த கணபதி வேலுச்சாமி அன்னதானம் வழங்கினார். ஆலய பூசாரிகள் சத்தியன் வெங்கடசாமி, ஊர் நாட்டாண்மை அகிரி ராஜா உள்ளிட்டோர் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்ட இந்த மகா கும்பாபிஷேக விழா, பக்தர்களின் பக்தி பரவசத்துடன் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தின் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, பக்தர்களின் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, விக்னேஸ்வர பூஜை மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தங்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, மகா தீபாராதனையுடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.

இந்த கும்பாபிஷேக விழாவில், மாடப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ எல்லையம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகரை தரிசித்தனர். மேலும், வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் ரத்த கணபதி வேலுச்சாமி அன்னதானம் வழங்கினார்.

ஆலய பூசாரிகள் சத்தியன் வெங்கடசாமி, ஊர் நாட்டாண்மை அகிரி ராஜா உள்ளிட்டோர் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்ட இந்த மகா கும்பாபிஷேக விழா, பக்தர்களின் பக்தி பரவசத்துடன் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    6 hrs ago
  • சேலம் மாவட்டம், தாரமங்கலம் சின்னப்பம்பட்டி பகுதியில் நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவி கோபிகாவின் இல்லத்திற்கு திமுகவினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் திரு. இரா. ராஜேந்திரன், திமுக எம்பிக்களான எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் செல்வகணபதி ஆகியோர் நிர்வாகிகளுடன் இணைந்து பேரணியாகச் சென்று மாணவி கோபிகாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
    1
    சேலம் மாவட்டம், தாரமங்கலம் சின்னப்பம்பட்டி பகுதியில் நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவி கோபிகாவின் இல்லத்திற்கு திமுகவினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் திரு. இரா. ராஜேந்திரன், திமுக எம்பிக்களான எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் செல்வகணபதி ஆகியோர் நிர்வாகிகளுடன் இணைந்து பேரணியாகச் சென்று மாணவி கோபிகாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    21 hrs ago
  • சேலம் மாவட்டத்தின் முத்துநாயக்கன்பட்டி கவுண்டன் தெருவில் வசிக்கும் பொதுமக்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக போர்வெல் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும், அப்பகுதியில் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று மோதி அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த பிரச்சனைகள் குறித்து, உமன் ரைட்ஸ் மனித உரிமை அணியின் வார்டு தலைவர் கலைவாணன் மற்றும் உறுப்பினர் சந்திரன் ஆகியோர் மின்வாரிய ஆய்வாளரிடமும், பஞ்சாயத்து எழுத்தரிடமும் புகார் அளித்தனர். அவர்களின் புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், தங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
    2
    சேலம் மாவட்டத்தின் முத்துநாயக்கன்பட்டி கவுண்டன் தெருவில் வசிக்கும் பொதுமக்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக போர்வெல் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும், அப்பகுதியில் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று மோதி அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த பிரச்சனைகள் குறித்து, உமன் ரைட்ஸ் மனித உரிமை அணியின் வார்டு தலைவர் கலைவாணன் மற்றும் உறுப்பினர் சந்திரன் ஆகியோர் மின்வாரிய ஆய்வாளரிடமும், பஞ்சாயத்து எழுத்தரிடமும் புகார் அளித்தனர். அவர்களின் புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், தங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
    user_Kali
    Kali
    சேலம், சேலம், தமிழ்நாடு•
    1 hr ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, கரியாலூர் ஊராட்சியில் அமைந்துள்ள புளுவப்பாடி சேவா மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக தந்தையர் தினம் மற்றும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு, பல்வேறு யோகாசனங்களைச் செய்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். யோகாவின் முக்கியத்துவம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அதன் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் உற்சாகமாகப் பங்கேற்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய இந்த நிகழ்ச்சி, உலக தந்தையர் தினத்தையும் சர்வதேச யோகா தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடியது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, கரியாலூர் ஊராட்சியில் அமைந்துள்ள புளுவப்பாடி சேவா மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக தந்தையர் தினம் மற்றும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு, பல்வேறு யோகாசனங்களைச் செய்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

யோகாவின் முக்கியத்துவம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அதன் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் உற்சாகமாகப் பங்கேற்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய இந்த நிகழ்ச்சி, உலக தந்தையர் தினத்தையும் சர்வதேச யோகா தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடியது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, கடலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை எதிரில் போக்குவரத்து சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடலூர் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. அருணாச்சலம் தலைமையிலான போக்குவரத்து போலீசார், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டிக் கடைகளை அகற்றி, அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைத்தனர்.
    1
    கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, கடலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை எதிரில் போக்குவரத்து சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடலூர் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. அருணாச்சலம் தலைமையிலான போக்குவரத்து போலீசார், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டிக் கடைகளை அகற்றி, அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைத்தனர்.
    user_Premkumar prem Prem
    Premkumar prem Prem
    Engineer விருத்தாசலம், கடலூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தவெக கட்சி சார்பில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு இன்று மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாகத் துவங்கிய இந்த மாரத்தான் போட்டியை, மத்திய மாவட்ட தவெக செயலாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    1
    கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தவெக கட்சி சார்பில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு இன்று மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாகத் துவங்கிய இந்த மாரத்தான் போட்டியை, மத்திய மாவட்ட தவெக செயலாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • நாளை நீட் தேர்வை எழுதவிருந்த நிலையில், தருமபுரியில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள என்டடபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் 18 வயது மகள் ரோஷ்ணி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் +2 முடித்துவிட்டு, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார். தருமபுரியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் நாளை தேர்வு எழுதவிருந்த ரோஷ்ணி, தேர்வுக்காக சொந்த ஊர் திரும்பியிருந்தார். கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலுடன் சோர்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ரோஷ்ணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சிகரமான செய்தியறிந்த குடும்பத்தினர் பாலக்கோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து பாலக்கோடு காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா, தேர்வு அச்சம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    1
    நாளை நீட் தேர்வை எழுதவிருந்த நிலையில், தருமபுரியில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள என்டடபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் 18 வயது மகள் ரோஷ்ணி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் +2 முடித்துவிட்டு, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார். தருமபுரியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் நாளை தேர்வு எழுதவிருந்த ரோஷ்ணி, தேர்வுக்காக சொந்த ஊர் திரும்பியிருந்தார். கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலுடன் சோர்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ரோஷ்ணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சிகரமான செய்தியறிந்த குடும்பத்தினர் பாலக்கோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து பாலக்கோடு காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா, தேர்வு அச்சம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Dharmapuri, Tamil Nadu•
    12 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட புதுமனை பகுதியில், ரஜினிகாந்தி என்பவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு பொதுமருத்துவம் பார்த்து வருவதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை, மருத்துவ அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், மருத்துவ அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையில், ரஜினிகாந்தி முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மருத்துவ அதிகாரிகள் அவரை ஆம்பூர் நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், மேலும் அவரது கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். பின்னர், ரஜினிகாந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட புதுமனை பகுதியில், ரஜினிகாந்தி என்பவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு பொதுமருத்துவம் பார்த்து வருவதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை, மருத்துவ அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், மருத்துவ அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

சோதனையில், ரஜினிகாந்தி முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மருத்துவ அதிகாரிகள் அவரை ஆம்பூர் நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், மேலும் அவரது கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். பின்னர், ரஜினிகாந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    20 hrs ago
  • தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஏழுகுண்டூர் பகுதியைச் சேர்ந்த 70 வயதான விவசாயி முனுசாமி, அவரது மனைவி சாலம்மாள் ஆகியோர் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலம்மாள் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தபோது, நடைப்பயிற்சிக்காக வெளியே வந்த முனுசாமியுடன் அவர் மீது, பஞ்சப்பள்ளியில் இருந்து மாரண்டஅள்ளி நோக்கி வந்த சொகுசு கார் மோதியது. இதில் கார் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி முனுசாமி உயிரிழந்தார். இந்த விபத்தில் சாலம்மாள் பலத்த காயமடைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் சாலம்மாளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பஞ்சப்பள்ளி போலீசார் முனுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த விபத்து நடந்த சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    1
    தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஏழுகுண்டூர் பகுதியைச் சேர்ந்த 70 வயதான விவசாயி முனுசாமி, அவரது மனைவி சாலம்மாள் ஆகியோர் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலம்மாள் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தபோது, நடைப்பயிற்சிக்காக வெளியே வந்த முனுசாமியுடன் அவர் மீது, பஞ்சப்பள்ளியில் இருந்து மாரண்டஅள்ளி நோக்கி வந்த சொகுசு கார் மோதியது. இதில் கார் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி முனுசாமி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் சாலம்மாள் பலத்த காயமடைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் சாலம்மாளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பஞ்சப்பள்ளி போலீசார் முனுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த விபத்து நடந்த சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Dharmapuri, Tamil Nadu•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.