logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சக்கரை( ஜுனி) விலைவாசி உயர்வினால் செய்வதறியாமல் நலி வடையும்.. கடந்த சில தினங்களாக அத்வாசியபொருள்களான அரிசி ஜீனி( சக்கரை) பாமாயில் பருப்பு வகைகள் விலைவாசி கூடுதல் முகமாக உள்ளது அதனால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது மேலும் குடிசை தொழிலாக லட்டு ஜாங்கிரி போன்ற இனிப்பு பலகாரங்கள் செய்வதில் சிக்கல் ( 5 ரூபாய்க்கு) இருப்பதாக குடிசை தொழில் செய்பவர்கள் கூறினார்கள் மேலும் பணப்புழக்கம் மிகவும் குறைந்து உள்ளதால் கடன் சுமை கூடுதலாக உள்ளது

16 hrs ago
user_தங்க சுரேஷ்
தங்க சுரேஷ்
பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
16 hrs ago
49ab6089-12cb-4387-b4d3-fdbc48f6c2de

சக்கரை( ஜுனி) விலைவாசி உயர்வினால் செய்வதறியாமல் நலி வடையும்.. கடந்த சில தினங்களாக அத்வாசியபொருள்களான அரிசி ஜீனி( சக்கரை) பாமாயில் பருப்பு வகைகள் விலைவாசி கூடுதல் முகமாக உள்ளது அதனால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது மேலும் குடிசை தொழிலாக லட்டு ஜாங்கிரி போன்ற இனிப்பு பலகாரங்கள் செய்வதில் சிக்கல் ( 5 ரூபாய்க்கு) இருப்பதாக குடிசை தொழில் செய்பவர்கள் கூறினார்கள் மேலும் பணப்புழக்கம் மிகவும் குறைந்து உள்ளதால் கடன் சுமை கூடுதலாக உள்ளது

More news from Tamil Nadu and nearby areas
  • டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள். தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.
    1
    டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள்.
தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை  (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள்  அடைக்கப்படும் என்று  தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    10 hrs ago
  • விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    1
    விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது இந்நிலையில் இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் உள்ள அரசு சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள் இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    1
    2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் 

தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட  108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்
அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது
வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது
இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்
தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும்
தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்
ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில்  வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது
இந்நிலையில்  இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்
தங்களது கிராமத்தில் உள்ள அரசு  சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள்
இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில்  வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும்
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும்
தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது
மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து 
தேனி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது *ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் சாலையில் கடந்து செல்லும் ஒற்றைக் காட்டு யானை வீடியோ வைரல்* *ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை ஒன்று தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது அந்த வழியாக காரில் சென்ற நபர்கள் தங்களது செல்போனில் யானை கடந்து செல்வது போன்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ ஆண்டிப்பட்டி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர் ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை நடமாட்டம் இல்லாத நிலையில் திடீரென யானை உலா வருவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறித்து ஆண்டிப்பட்டி வனத்துறையினர் விசாரணை செய்த நிலையில் இந்த காணொளி ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று உறுதி செய்தனர் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யானை கடந்து சென்ற வீடியோவால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த காணொளி எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அழகு ராஜா (27) என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணைக்கு பின் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்
    1
    வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது
*ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் சாலையில் கடந்து செல்லும் ஒற்றைக் காட்டு யானை வீடியோ வைரல்* 
*ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை*
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை ஒன்று தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது அந்த வழியாக காரில் சென்ற நபர்கள் தங்களது செல்போனில் யானை கடந்து செல்வது போன்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ ஆண்டிப்பட்டி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது 
இந்த நிலையில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்
ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை நடமாட்டம் இல்லாத நிலையில் திடீரென யானை உலா வருவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறித்து ஆண்டிப்பட்டி வனத்துறையினர் விசாரணை செய்த நிலையில் இந்த காணொளி ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று உறுதி செய்தனர்
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யானை கடந்து சென்ற வீடியோவால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் 
இந்த காணொளி எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அழகு ராஜா (27) என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணைக்கு பின் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் அடிப்படையிலும், பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகும் தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது : தங்கம் தென்னரசு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முன்னாள் அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை நான் நேற்றைய செய்தியாளர் சந்திப்பிலேயே விரிவாக விளக்கியிருந்தேன். சென்னை நகரின் புவியியல் அமைப்பிலேயே, வேறு எந்த இடத்திற்கும் விமான நிலையத்தை மாற்றுவது சாத்தியமில்லை என்பது புரியும். விமான நிலையம் அமைத்திட நாங்கள் நேரடியாக சென்று உடனடியாக பரந்தூரைத் தேர்வு செய்துவிடவில்லை. பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகே இந்த பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. ஒரு விமானநிலையத்தை அமைப்பதற்கு முன்பு இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்காக சோழிங்கநல்லூர், படாளம், பன்னூர் உள்ளிட்ட பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு காரணங்களினால் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னையின் கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைக்க இயலாது. வடக்குப் பகுதியில் மணலி, எண்ணூர் உள்ளிட்ட தொழிற்பேட்டைகள் உள்ளன. பழவேற்காடு ஏரி போன்ற இடங்கள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் பொருத்தமற்றதாக கருதப்பட்டன. இதைத்தொடர்ந்து, தெற்குப் பகுதியில் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் அவை தாம்பரம் விமானப்படைத் தளத்தின் வான்வெளிக்கு அருகில் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைப்பது சாத்தியமில்லை. மேலும் தெற்கில் கல்பாக்கம் அணுமின் நிலையமும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் நிராகரிக்கப்பட்டன. இதன் காரணமாகவே மேற்குப் பகுதியில் விமானநிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய நேரிட்டது. அப்போது பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த இரு இடங்களுக்கும் இடையில் விரிவான ஒப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் பணிகள் துவங்கின. முன்னதாக, ஒரு இடத்தைத் தேர்வு செய்யும்போது தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள், பெரிய தொழிற்சாலைகள் இருந்தால் அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா போன்ற அம்சங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் நிலம் தேவைப்படுகிறது. குறிப்பாக, நிலம் கையகப்படுத்தப்படும்போது அப்பகுதியில் வாழும் மக்களை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே தேர்வு செய்யப்படும் இடத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதை கணக்கிட்டு உறுதிசெய்யவேண்டும். இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. மேலும் நிலத்தின் விலை உள்ளிட்ட பொருளாதார காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. எனவே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னால் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. இது முழுக்க முழுக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதில் மாநில அரசு மட்டுமல்ல, ஒன்றிய அரசும் ஈடுபட்டுள்ளது. பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு, இந்திய குடிமை விமானப் போக்குவரத்து அமைச்சகம் இறுதியாக பரந்தூருக்கே ஒப்புதல் வழங்கியது. அதனால்தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைத்தாண்டி தனிநபர் விருப்பத்திற்காக எதுவும் செய்யப்படவில்லை. இப்போது மாற்று இடங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த புதிய இடத்தை ஆய்வு செய்தாலும் இதே போன்ற சிக்கல்கள் எழும். அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும்; அங்கும் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும்; அங்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடும். அதே மதிப்பீடுகளை மீண்டும் நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், அனுமதி நடைமுறைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் அதை கைவிட்டால், மீண்டும் இதுபோன்ற ஒரு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகிவிடும். சிலர் தற்போதைய சென்னை விமான நிலையத்தையே விரிவுபடுத்தலாம் என்று கூறுகின்றனர். ஆனால் அங்கு இரண்டாவது ஓடுபாதை அமைப்பது எப்படி சாத்தியமாகும். சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மக்கள் அடர்த்தியை கருத்தில் கொண்டால், மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் எத்தனை பேரை இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அங்கு ஏற்படும் சமூக மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் இதைவிட அதிகமாக இருக்கும். ஆகவே, பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடரப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. ஏற்கனவே அப்பகுதியில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பட்டா நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திட்டத்தை கைவிடுவது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கே பாதகமாக இருக்கும். ஒருபுறம் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் அதற்கு அடித்தளமாக அமையும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை எதிர்ப்பது முரண்பாடான நிலைப்பாடாகும்.இதுதான் எங்களுடைய நிலைப்பாடு, அதைத்தான் நாங்கள் விளக்குகிறோம் எனக்கூறினார்.
    1
    தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் அடிப்படையிலும், பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகும் தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது :  தங்கம் தென்னரசு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முன்னாள் அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை நான் நேற்றைய செய்தியாளர் சந்திப்பிலேயே விரிவாக விளக்கியிருந்தேன். சென்னை நகரின் புவியியல் அமைப்பிலேயே, வேறு எந்த இடத்திற்கும் விமான நிலையத்தை மாற்றுவது சாத்தியமில்லை என்பது புரியும். விமான நிலையம் அமைத்திட நாங்கள் நேரடியாக சென்று உடனடியாக பரந்தூரைத் தேர்வு செய்துவிடவில்லை. பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகே இந்த பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
ஒரு விமானநிலையத்தை அமைப்பதற்கு முன்பு இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்காக சோழிங்கநல்லூர், படாளம், பன்னூர் உள்ளிட்ட பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு காரணங்களினால் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
சென்னையின் கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைக்க இயலாது. வடக்குப் பகுதியில் மணலி, எண்ணூர் உள்ளிட்ட தொழிற்பேட்டைகள் உள்ளன. பழவேற்காடு ஏரி போன்ற இடங்கள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் பொருத்தமற்றதாக கருதப்பட்டன.
இதைத்தொடர்ந்து, தெற்குப் பகுதியில் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் அவை தாம்பரம் விமானப்படைத் தளத்தின் வான்வெளிக்கு அருகில் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைப்பது சாத்தியமில்லை. மேலும் தெற்கில் கல்பாக்கம் அணுமின் நிலையமும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும் உள்ளன. எனவே அந்தப் பகுதிகளும் நிராகரிக்கப்பட்டன.
இதன் காரணமாகவே மேற்குப் பகுதியில் விமானநிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய நேரிட்டது. அப்போது பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த இரு இடங்களுக்கும் இடையில் விரிவான ஒப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் பணிகள் துவங்கின. 
முன்னதாக, ஒரு இடத்தைத் தேர்வு செய்யும்போது தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள், பெரிய தொழிற்சாலைகள் இருந்தால் அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா போன்ற அம்சங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதேபோல், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் நிலம் தேவைப்படுகிறது. குறிப்பாக, நிலம் கையகப்படுத்தப்படும்போது அப்பகுதியில் வாழும் மக்களை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே தேர்வு செய்யப்படும் இடத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதை கணக்கிட்டு உறுதிசெய்யவேண்டும். இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. மேலும் நிலத்தின் விலை உள்ளிட்ட பொருளாதார காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
எனவே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னால் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. இது முழுக்க முழுக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதில் மாநில அரசு மட்டுமல்ல, ஒன்றிய அரசும் ஈடுபட்டுள்ளது. பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு, இந்திய குடிமை விமானப் போக்குவரத்து அமைச்சகம் இறுதியாக பரந்தூருக்கே ஒப்புதல் வழங்கியது. அதனால்தான் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைத்தாண்டி தனிநபர் விருப்பத்திற்காக எதுவும் செய்யப்படவில்லை. 
இப்போது மாற்று இடங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த புதிய இடத்தை ஆய்வு செய்தாலும் இதே போன்ற சிக்கல்கள் எழும். அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும்; அங்கும் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும்; அங்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடும். அதே மதிப்பீடுகளை மீண்டும் நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், அனுமதி நடைமுறைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் அதை கைவிட்டால், மீண்டும் இதுபோன்ற ஒரு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகிவிடும்.
சிலர் தற்போதைய சென்னை விமான நிலையத்தையே விரிவுபடுத்தலாம் என்று கூறுகின்றனர். ஆனால் அங்கு இரண்டாவது ஓடுபாதை அமைப்பது எப்படி சாத்தியமாகும். சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மக்கள் அடர்த்தியை கருத்தில் கொண்டால், மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் எத்தனை பேரை இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அங்கு ஏற்படும் சமூக மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் இதைவிட அதிகமாக இருக்கும். 
ஆகவே, பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடரப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. ஏற்கனவே அப்பகுதியில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பட்டா நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திட்டத்தை கைவிடுவது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கே பாதகமாக இருக்கும்.
ஒருபுறம் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் அதற்கு அடித்தளமாக அமையும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை எதிர்ப்பது முரண்பாடான நிலைப்பாடாகும்.இதுதான் எங்களுடைய நிலைப்பாடு, அதைத்தான் நாங்கள் விளக்குகிறோம் எனக்கூறினார்.
    user_குமார்
    குமார்
    Firefighter Kariapatti, Virudhunagar•
    18 hrs ago
  • மேலூரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சி அம்மன் சிவன் கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு! மேலூரில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இன்று மாலை 4:00 பிரதோஷ வழிபாடு நடைபெற உள்ளது. பிரதோஷ வழிபாடுக்கு தேவையான தயிர்,பால் மற்றும் அபிஷேகப் பொருட்கள் பக்தர்கள் வழங்கி வருகின்றனர். பிரதோஷ வழிபாடு இன்று மாலை நடைபெற உள்ளது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. சுற்று வட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளலாம்.
    1
    மேலூரில்   அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சி அம்மன்  சிவன் கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு!
மேலூரில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இன்று மாலை 4:00 பிரதோஷ வழிபாடு நடைபெற உள்ளது. பிரதோஷ வழிபாடுக்கு தேவையான தயிர்,பால் மற்றும் அபிஷேகப் பொருட்கள் பக்தர்கள் வழங்கி வருகின்றனர். பிரதோஷ வழிபாடு இன்று மாலை நடைபெற உள்ளது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. சுற்று வட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளலாம்.
    user_R. மயூரி ராமேஸ்வரி
    R. மயூரி ராமேஸ்வரி
    மேலூர், மதுரை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • தேனி கலெக்டர் அலுவலகத்தில் TNGEA சங்கம் சார்பில் கலெக்டர் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமை அழிக்க மாவட்ட துணைத் தலைவர்கள் ரவிக்குமார் லட்சுமி அழகுராஜா சக்தி திருமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் TNPGTA மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் TNPTF மாவட்டத் தலைவர் ராம்குமார் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சிவமணி சிஐடியு மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர்கள் தமிழ் பரமன் மலர்விழி பரமேஸ்வரன் விஸ்வன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாநில செயலாளர் நீதி ராஜா நிறைவுறையாற்றினார் மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்
    2
    தேனி கலெக்டர் அலுவலகத்தில் TNGEA சங்கம் சார்பில் கலெக்டர் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமை அழிக்க மாவட்ட துணைத் தலைவர்கள் ரவிக்குமார் லட்சுமி அழகுராஜா சக்தி திருமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் TNPGTA மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் TNPTF மாவட்டத் தலைவர் ராம்குமார் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சிவமணி சிஐடியு மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர்கள் தமிழ் பரமன் மலர்விழி பரமேஸ்வரன் விஸ்வன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாநில செயலாளர் நீதி ராஜா நிறைவுறையாற்றினார் மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் குவிந்த பக்தர்கள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை அங்காரக வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.
    1
    இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் குவிந்த பக்தர்கள் 
மதுரை  பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 
(25.08.2026) செவ்வாய்க்கிழமை  அங்காரக வார பிரதோசத்தை முன்னிட்டு  மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.