காஞ்சிபுரம் : வல்லக்கோட்டை முருகன் கோவில் தோட்ட உற்சவம் காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தோட்ட உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு தோட்ட உற்சவம் நடைபெறாமல் இருந்தது. கடந்த ஆண்டு இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு நின்றுபோன உற்சவங்கள் மீண்டும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. வல்லன் எனும் அசுரனை முருகப்பெருமான் அழித்து கோயில் கொண்டமையால் இத்தலம் வல்லக்கோட்டை என்று வழங்கப்படுகிறது. இத்தலத்தில் சத்ரு சம்கார யாகம் செய்து வழிபடுவது பரிகார சிறப்பாகும். வல்லாசுரன் மாண்டு விழுந்த இடத்தில் ஆண்டுதோறும் தோட்ட உற்சவம் நடத்தப்படுகிறது. இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு கட்டுதல், திருமணம், பதவி உயர்வு, சொந்த வீடுமனை கிடைப்பதால் வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை முருகன் என்ற சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு. புராண காலத்தில் இராமபிரானின் முன்னோராகிய பகீரத மன்னன், தேவர்களின் தலைவன் இந்திரன், துர்வாச முனிவர், பிருகஸ்பதி, பல்லி சாப விமோசனம் பெற்ற சிருங்கி முனிவரின் சீடர்கள் வந்து வணங்கி அருள்பெற்ற தலமாகவும் இத்திருக்கோயில் விளங்குகின்றது. இங்கு பிரபல சினிமா நடிகர்களும், சின்னத்திரை கலைஞர்களும், அரசியல் பிரமுகர்களும் வந்து வழிபட்டு வளர்ச்சிடைந்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு திங்களன்று நடைபெற்ற தோட்ட உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. பிறகு மூலவருக்கு பால் தயிர் மஞ்சள் விபூதி முதலிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மஞ்சள் சாமந்தி மாலை அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உற்சவர் கோடையாண்டவருக்குப் பால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு கோடை ஆண்டவர் மேளதாளங்கள் முழங்க சப்பரத்தில் எழுந்தருளி வல்லாசுரன் விழுந்த தோட்டத்திற்கு நண்பகலில் சென்றடைந்தார். இந்த உற்சவத்தை முன்னிட்டு வல்லக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள வல்லாசுர தோட்டம் சுத்தம் செய்யப்பட்டு அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு மாலை 4 மணிக்கு கோடையாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு சிறப்பு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு பெருமான் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பிறகு கோடையாண்டவர் அங்கிருந்து புறப்பட்டு கரகாட்டம், ஒயிலாட்டம் நடனத்துடன் மேளதாளங்கள் முழங்கிட வல்லக்கோட்டை கிராமத்தில் வீதி உலா வந்தார். வண்ண வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டது. தோட்ட உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் குமரதுரை அவர்களின் அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், செல்வகுமரன், ஊராட்சி தலைவர் மணிமேகலை தசரதன், துணைத் தலைவர் சிவா எத்திராஜ், தியாகு மற்றும் உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

- தங்க தாரகை, புரட்சி தலைவி அம்மா 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட கழகம், காஞ்சிபுரம் கிழக்கு பகுதி கழகம்,23 வது வார்டு சார்பில் திருவள்ளூவர் தெரு பகுதியில் கிழக்கு பகுதி கழக கைத்தறி பிரிவு செயலாளர் குமார் ஏற்பாட்டில் பகுதி கழக செயலாளர் பாலாஜி முன்னிலையில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் அம்மா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி,பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட கைத்தறி பிரிவு இணை செயலாளர் கோபால்,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன்,பகுதி கழக துணை செயலாளர் கபாலி, உத்திரமேரூர் நகர செயலாளர் ஜெய விஷ்ணு,பகுதி கழக இணை செயலாளர் கோல்டு கணேஷ்,பகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்வகுமார், பகுதி அம்மா பேரவை செயலாளர் வினோத் பாபு சிங்,பகுதி அம்மா பேரவை தலைவர் காஞ்சி ராஜா, பகுதி கழக இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கே. ஸ்ரீதர்,பகுதி வர்த்தக அணி செயலாளர் ராஜா,வட்ட செயலாளர்கள் சம்பத் தனபால், சிவகுமார் ,மோத்திலால், ஆர்.டி.சேகர்,அம்மா பாலு,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி,மற்றும் வட்ட நிர்வாகிகள் சந்திரசேகர்,ராதா பூபதி, சக்திவேல், பாலமுருகன்,தம்பிகா, சந்தானம், ராமசாமி, மகளிரணி நீலாவதி, மாதவி உள்ளிட்டோர் உள்ளனர்1
- Post by Vinayagam Vinayagam1
- Post by Kuppusamy4
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டிஎன்டியுசி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது .நிகழ்விற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.சேகர் தலைமை தாங்கினார்.மாநில செயற்குழு உறுப்பினர் டி.கே. மாரிமுத்து முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்க தலைவர் ஜி.ஆர்.மூர்த்தி, பொதுச் செயலாளர் செல்வமணி பங்கேற்றனர். நிகழ்வை ஒட்டி ஆட்டோ சங்கப் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.4
- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் மோகன்தாஸ் இவரது மனைவி ரஞ்சிதா இவர்களது மகன் ரித்தீஷ் திருப்பத்தூர் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் உதவி மாணவத் தலைவராகவும் (ASPL) இருந்து உள்ளார் இந்நிலையில் பள்ளி விடுமுறை நாள் என்பதால் ரித்தீஷ் தன்னுடைய சக மாணவர்களுடன் வெளியே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது யாரும் வீட்டில் இல்லாத நிலையில் பள்ளி மாணவன் ரித்தீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்த குடும்பத்தார் கத்தி கூச்சலிட்டு ரித்தீஷின் சடலத்தை மீட்டு உள்ளனர். பின்பு தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ரித்தீஷின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகப்படும்படியான காரணங்கள் ஏதேனும் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பேட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தோலம்பதி கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆனந்தூர் பிரதான சாலையை கடந்த பலத்தலை முறைகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாவை மிகவும் குண்டு குளியுமாக இருப்பதால் இந்த சாலையை தார்சாலையாக மாற்றிட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றுள்ளது. ஆனால் தீடிரென அந்தப்பணிகளும் நிறுத்தப்படுள்ளதால் அந்த சாலையில் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வண்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை தார்சாலையாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் பல முறை அனுகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ராமன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கிடப்பில் போட்ட சாலைப்பணிகளை மீண்டும் செயல்படுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் புகார் மனுவினைக் கெடுத்தனர். இது குறித்து பேசிய கிராம மக்கள் மத்தூர் ஒன்றியம் தோலம்பதி கிராத்தில் வசித்து வரும் எங்களுக்கு முறையான சாலை வசதிகள் இன்றி வசித்து வருகிறோம். இந்த நிலையில் கரடுமுரடான சாலையை தார் சாலையாக மாற்றிடும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாசாலையாக மாற்றிட உரிய நிதியும் ஒதிக்கீடு செய்யபட்டும் அதற்கான பணிகளும் நடைப்பெற்ற நிலையில் தீடிரென அந்தபணியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடமும் கேட்டால் முறையான தகவல் ஏதும் இல்லை ஆகையால் கிடப்பில் போடப்பட சாலப்பணியை விரைவாக செயல்படுத்திட வேண்டும் இல்லையில் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டியும், குடும்ப அட்டை, அதார் அட்டைகளை அரசிடம் கொடுத்து விட்டு வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1