logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காரிமங்கலம் அருகே பைக் மீது பிக்கப் வேன் மோதிய விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி காரிமங்கலம், ஆக.28, காரிமங்கலம் அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் அரசு பஸ் ஓட்டுநர்  உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த எலுமிச்சன அள்ளி  ஊராட்சி  முதலிப்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் 45. இவர் அரசு பஸ் ஓட்டுநராக  பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் வடிவேல் தனது பைக்கில் காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். செல்லமாரம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது அவ்வழியே வந்த பிக்கப் வேன் பைக் மீது மோதியது. இதில் வடிவேல் பைக்கில் இருந்து தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

48 min ago
user_Just Now Karimangalam
Just Now Karimangalam
Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
48 min ago
f0128f9f-230d-4e2e-80fb-6a41d5fa0fbb
0e6ea3bf-aaf1-4597-ae3e-62cadff24fab
d15ccd53-3ce5-4159-aa9b-9856dd31a3cf
179d47e7-9535-43aa-9d91-a5e691d4f63b

காரிமங்கலம் அருகே பைக் மீது பிக்கப் வேன் மோதிய விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி காரிமங்கலம், ஆக.28, காரிமங்கலம் அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் அரசு பஸ் ஓட்டுநர்  உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த எலுமிச்சன அள்ளி  ஊராட்சி  முதலிப்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் 45. இவர் அரசு பஸ் ஓட்டுநராக  பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் வடிவேல் தனது பைக்கில் காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். செல்லமாரம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது அவ்வழியே வந்த பிக்கப் வேன் பைக் மீது மோதியது. இதில் வடிவேல் பைக்கில் இருந்து தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

More news from தமிழ்நாடு and nearby areas
  • பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா ஜக்கசமுத்திரத்தில் இணைப்பு சாலை கோரி பொதுமக்கள் தர்ணா - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 கிராமங்களுக்கு மையப்பகுதியாகவும் இக்கிராமம் உள்ளது. ஊராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 844-ல் சேவைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், ஜக்கசமுத்திரம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஜக்கசமுத்திரம் என்ற கிராமமே பதிவேட்டில் இல்லை” என தெரிவிப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலையோரம் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சரவணன் சம்பவ இடத்திற்க்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தவர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருமாறு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பேட்டி: சின்னசாமி ஊர் கவுண்டர் - ஜக்கசமுத்திரம்
    1
    பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா
ஜக்கசமுத்திரத்தில் இணைப்பு சாலை கோரி பொதுமக்கள்  தர்ணா - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 
மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 கிராமங்களுக்கு மையப்பகுதியாகவும் இக்கிராமம் உள்ளது. ஊராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 844-ல் சேவைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், ஜக்கசமுத்திரம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
மேலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஜக்கசமுத்திரம் என்ற கிராமமே பதிவேட்டில் இல்லை” என தெரிவிப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து, இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலையோரம் நின்று  தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சரவணன் சம்பவ இடத்திற்க்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தவர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருமாறு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பேட்டி:
சின்னசாமி 
ஊர் கவுண்டர் - ஜக்கசமுத்திரம்
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • பாலக்கோட்டில் முறைகேடாக செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையமா? – நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார். மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய கோரிக்கை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே சமீபகாலமாக செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எர்ரனஅள்ளி, கரகதஅள்ளி, பேளாரஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகள் வறட்சியின் தாக்கத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் போதிய மழையின்மை மற்றும் நீராதாரங்கள் குறைந்து வருவதால், விவசாயம் மேற்கொள்வதில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருவதுடன், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருவதாகவும், சில பகுதிகளில் குடிநீருக்காக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு ஆழ்துளை கிணறு மூலம் தினசரி பல ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பாலக்கோடு அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரை வணிக நோக்கத்திற்காக அதிகளவில் உறிஞ்சினால், அதன் தாக்கம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களிலும் ஏற்படும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக, வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக பொதுமக்கள் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் அந்த ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வணிக நோக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதி உள்ளதா, அனுமதி பெற்ற இடத்திலேயே சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அனுமதி பெற்ற இடம் வேறு பகுதியாக இருந்து, பாலக்கோடு நகரப் பகுதியில் வேறு இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தால், அது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு, குடிநீர் வழங்கல் மற்றும் நிலத்தடி நீர் தொடர்புடைய அதிகாரிகளை கொண்டு சம்பந்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேரில் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆய்வின்போது, நிலையத்திற்கு தேவையான அனைத்து அரசு அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீர் எடுக்க அனுமதி உள்ளதா, எவ்வளவு அளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    1
    பாலக்கோட்டில் முறைகேடாக செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையமா? – நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார்.
 மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய கோரிக்கை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே சமீபகாலமாக செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 
தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எர்ரனஅள்ளி, கரகதஅள்ளி, பேளாரஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகள் வறட்சியின் தாக்கத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இப்பகுதிகளில் போதிய மழையின்மை மற்றும் நீராதாரங்கள் குறைந்து வருவதால், விவசாயம் மேற்கொள்வதில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருவதுடன், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருவதாகவும், சில பகுதிகளில் குடிநீருக்காக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு ஆழ்துளை கிணறு மூலம் தினசரி பல ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாலக்கோடு அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரை வணிக நோக்கத்திற்காக அதிகளவில் உறிஞ்சினால், அதன் தாக்கம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களிலும் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக பொதுமக்கள் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் அந்த ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வணிக நோக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதி உள்ளதா, அனுமதி பெற்ற இடத்திலேயே சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அனுமதி பெற்ற இடம் வேறு பகுதியாக இருந்து, பாலக்கோடு நகரப் பகுதியில் வேறு இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தால், அது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு, குடிநீர் வழங்கல் மற்றும் நிலத்தடி நீர் தொடர்புடைய அதிகாரிகளை கொண்டு சம்பந்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேரில் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆய்வின்போது, நிலையத்திற்கு தேவையான அனைத்து அரசு அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீர் எடுக்க அனுமதி உள்ளதா, எவ்வளவு அளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    8 hrs ago
  • நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி
    1
    நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி
நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    45 min ago
  • RDO அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் உடலில் சாமி இறங்கிய சம்பவம் : கத்தி கூச்சலிட்டு பெண்ணால் பரபரப்பு நிலவியது. கடத்தூர் அருகே கோவில் வழிபாடு தொடர்பான இருகிராமங்களுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு - RDO அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் உடலில் சாமி இறங்கிய சம்பவம் : கத்தி கூச்சலிட்டு பெண்ணால் பரபரப்பு நிலவியத
    1
    RDO அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் உடலில் சாமி இறங்கிய சம்பவம் : கத்தி கூச்சலிட்டு பெண்ணால் பரபரப்பு நிலவியது.

கடத்தூர் அருகே கோவில் வழிபாடு தொடர்பான இருகிராமங்களுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு - RDO அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் உடலில் சாமி இறங்கிய சம்பவம் : கத்தி கூச்சலிட்டு பெண்ணால் பரபரப்பு நிலவியத
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கிருஷ்ணகிரி பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அருகே  பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைப்பெற்றது நுகர்வோர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி திருமதி குமுதா தலைமையில் நடைப்பெற்றது
    1
    கிருஷ்ணகிரி பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரி அருகே  பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைப்பெற்றது
நுகர்வோர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி திருமதி குமுதா தலைமையில் நடைப்பெற்றது
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தமிழ்நாட்டில் எச்சரிக்கை அவசியம். நேபாளத்தில் ஏற்பட்டதாக பகிரப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில், மலைப்பகுதியில் திடீரென பெருக்கெடுத்து வரும் மண் மற்றும் வெள்ளநீர், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து அடித்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் நீரின் இயல்பான பாதையை ஆக்கிரமிப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன. நீர்வழிப்பாதைகளின் இருபுறமும் குறைந்தபட்சம் 50 மீட்டர் வரை எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக மலைப்பிரதேசங்களில், நில அமைப்பு மற்றும் மழைப்பொழிவை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு இடைவெளி மேலும் அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் இருப்பின் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காமல் விட்டால், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் நேரத்தில் அந்த ஆக்கிரமிப்புகளே மிகப்பெரிய பாதிப்புகளுக்கு காரணமாக மாறக்கூடும். இயற்கை தனது பாதையை மீட்டெடுக்கும் போது ஏற்படும் சேதங்களை பணத்தால் ஈடு செய்ய முடிந்தாலும், மனித உயிரிழப்புகளை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. எனவே, நேபாளத்தில் பகிரப்படும் இந்த பேரிடர் காட்சிகளை ஒரு எச்சரிக்கை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள நீர்வழிப்பாதைகள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் செல்லும் இயற்கை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கண்டறிந்து அகற்ற வேண்டும். குறிப்பாக மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். “இயற்கையின் பாதையை மறிக்காதீர்; இல்லையெனில் பேரிடர் நேரத்தில் அதன் விளைவுகளை மனிதர்களே சந்திக்க நேரிடும்” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் ஏற்படுத்துவது அவசியமாகிறது.
    1
    தமிழ்நாட்டில் எச்சரிக்கை அவசியம்.
நேபாளத்தில் ஏற்பட்டதாக பகிரப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில்,
மலைப்பகுதியில் திடீரென பெருக்கெடுத்து வரும் மண் மற்றும் வெள்ளநீர், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து அடித்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் நீரின் இயல்பான பாதையை ஆக்கிரமிப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன.
நீர்வழிப்பாதைகளின் இருபுறமும் குறைந்தபட்சம் 50 மீட்டர் வரை எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக மலைப்பிரதேசங்களில், நில அமைப்பு மற்றும் மழைப்பொழிவை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு இடைவெளி மேலும் அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் இருப்பின் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு நடவடிக்கை எடுக்காமல் விட்டால், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் நேரத்தில் அந்த ஆக்கிரமிப்புகளே மிகப்பெரிய பாதிப்புகளுக்கு காரணமாக மாறக்கூடும். இயற்கை தனது பாதையை மீட்டெடுக்கும் போது ஏற்படும் சேதங்களை பணத்தால் ஈடு செய்ய முடிந்தாலும், மனித உயிரிழப்புகளை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது.
எனவே, நேபாளத்தில் பகிரப்படும் இந்த பேரிடர் காட்சிகளை ஒரு எச்சரிக்கை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள நீர்வழிப்பாதைகள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் செல்லும் இயற்கை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கண்டறிந்து அகற்ற வேண்டும். குறிப்பாக மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
“இயற்கையின் பாதையை மறிக்காதீர்; இல்லையெனில் பேரிடர் நேரத்தில் அதன் விளைவுகளை மனிதர்களே சந்திக்க நேரிடும்” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் ஏற்படுத்துவது அவசியமாகிறது.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! சேலம் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை கனரா வங்கி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
    1
    சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
சேலம் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை கனரா வங்கி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    46 min ago
  • காரிமங்கலம் ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆணி அவிட்ட நிகழ்ச்சி! காரிமங்கலம், ஆக .27, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வாணியர் ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றி சிறப்பு பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வாணியர் சங்க தலைவர் முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்
    1
    காரிமங்கலம் ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆணி அவிட்ட நிகழ்ச்சி!
காரிமங்கலம், ஆக .27, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வாணியர் ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றி சிறப்பு பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வாணியர் சங்க தலைவர் முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.