காஞ்சிபுரம் : காலிப் பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 631 சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், 10ம் வகுப்பு வரையிலான, வாழைப்பழத்துடன் சாப்பிடும், 779 பேர் உட்பட, 60,939 மாணவ மாணவியர் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர். இந்த சத்துணவு மையங்களில், சத்துணவு, அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என, 1,857 பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது, 350 சத்துணவு அமைப்பாளர், 493 சமையலர், 363 சமையல் உதவியாளர் என, 1,206 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதம், 269 சத்துணவு அமைப்பாளர், 126 சமையலர், 256 சமையல் உதவியாளர் என மொத்தம், 651 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஒரு சத்துணவு அமைப்பாளர், இரு பள்ளிகளை கவனிக்க வேண்டியுள்ளது. சமையல் உதவியாளர் இல்லாத பள்ளிகளில், சமையலரே உதவியாளர் பணிகளை கவனிக்க வேண்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, காலி பணியிடங்களை நிரப்ப, சம்பந்தப்பட்ட துறையினர் முன் வர வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் : காலிப் பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 631 சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், 10ம் வகுப்பு வரையிலான, வாழைப்பழத்துடன் சாப்பிடும், 779 பேர் உட்பட, 60,939 மாணவ மாணவியர் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர். இந்த சத்துணவு மையங்களில், சத்துணவு, அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என, 1,857 பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது, 350 சத்துணவு அமைப்பாளர், 493 சமையலர், 363 சமையல் உதவியாளர் என, 1,206 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதம், 269 சத்துணவு அமைப்பாளர், 126 சமையலர், 256 சமையல் உதவியாளர் என மொத்தம், 651 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஒரு சத்துணவு அமைப்பாளர், இரு பள்ளிகளை கவனிக்க வேண்டியுள்ளது. சமையல் உதவியாளர் இல்லாத பள்ளிகளில், சமையலரே உதவியாளர் பணிகளை கவனிக்க வேண்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, காலி பணியிடங்களை நிரப்ப, சம்பந்தப்பட்ட துறையினர் முன் வர வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டம் காலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா சங்கர் தலைமையில் தமிழர்களின் திருநாளாம் தைப்பொங்கல் ஒட்டி சமத்துவ பொங்கல் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்பொழுது சூரிய பகவானுக்கு பொங்கல் படையல் இட்டு பொங்கலோ, பொங்கல் என தோஷங்கள் எழுப்பியவாறு சூரிய பகவானை வழிபட்டனர்.மேலும் கிராமத்தில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு வேஷ்டி சேலைகள் அரிசி பருப்பு கரும்பு வெள்ளம் உள்ளடங்கிய தொகுப்பு பரிசினை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் காலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டில்லி பாபு மற்றும்வார்டு உறுப்பினர்கள் லட்சுமி-பாலகிருஷ்ணன், கோவிந்தம்மாள்- கண்ணன், குணசேகர்,சாந்தி- மணி,டில்லிபாபு, அன்பழகன் விஜயலட்சுமி-பார்த்திபன், தமிழ்செல்வி பெருமாள் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- பனிப்பாறையில் காதலன் குடிக்க பனி நீரை குடிக்க கொடுத்தான் அவள் குடித்ததும் மறுநாள் மிக மோசமான நிலைமையில் மருத்துவ மனையில் சேர்க்க பட்டால் பின்பு குணமாகிறாளா என்பதுதான் இந்த பாடல் வரிகள் மூலம் செய்திகள் சொல்கிறது..1
- Post by Chella Pandi1
- பொங்கல் பண்டிகைக்கு ஒரே நாள் உள்ள நிலையில் நல்லம்பள்ளி வார சந்தையில் 10 ஆயிரம் ஆடுகள் குவிந்தது சுமார் 8 கோடிக்கு மேல் விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சி1
- தருமபுரியில் மாமியாருடனான கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமனாரை நண்பர்கள் உதவியுடன் அடித்து கொலை செய்து ஏரியில் வீசிய, மருமகன் உட்பட ஆறு பேர் கைது. தருமபுரி அடுத்த மதிக்கோண்பாளையம் ஏரியில் ஆண் சடலம் இருப்பதாக, நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தண்ணீரில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சடலத்தில் பல்வேறு இடங்களில் வெட்டி காயங்களும், இருசக்கர வாகனமும் தண்ணீரில் கிடந்துள்ளது. இந்த நிலையில் சடலமாக கிடந்தவர், எறங்காட்டு கொட்டாயை சார்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து ஆறுமுகம் மனைவி ஜோதி மற்றும் மருமகன் சீதாராமன் இருவரையும் காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சீதாராமனும் ஜோதியும் இருவரும் இணைந்து காரணிஓனி பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்ததில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீதாராமன் மனைவி பிரிந்து சென்ற நிலையில், ஜோதி தனது மகள் சந்தியாவை சீதாராமனுக்கு, கட்டாயப்படுத்தி 2-வது திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தில் விருப்பமில்லாத சந்தியா ஓசூர் தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். சீதாராமன் மனைவி வீட்டிற்கு வராததால் ஜோதியும், சீதாராமனும் ஓசூருக்கு சென்று, சந்தியாவை வீட்டிற்கு அழைத்து தாக்கியுள்ளனர். சந்தியா தனது தந்தை ஆறுமுகத்திடம், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் ஜோதியை கண்டித்துள்ளார். இந்த நிலையில் தங்களது பழக்கத்திற்கு இடையூறாக மாமனார் ஆறுமுகம் இருப்பதால், அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்ட சீதாராமன், தனது நண்பர்களுடன் மாமனாரை ஆறுமுகத்தை பின் தொடர்ந்து சென்று கல்லால் தாக்கி, இருசக்கர வாகனத்துடன் காரில் எடுத்துச் சென்று மதிக்கோன்பாளையம் ஏரியில் வீசிவிட்டு சென்றதாக சீதாராமன் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தை திட்டமிட்டு கொலை செய்த சீதாராமன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஆறுமுகம் மனைவி ஜோதி, முருகன், சரவணன், சங்கர் கணேஷ், பிரவீன் குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.1
- அரசு அதிகாரிகளை எச்சரித்த தர்மபுரி எம்எல்ஏ தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார் அப்போது எம்எல்ஏவிடம் அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டி வெகு நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் புழுக்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். உடனே நகராட்சி ஆணையரைத் தொலைபேசியில் அழைத்த எம்எல்ஏ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியைச் சுத்தம் செய்யாவிட்டால் நானே இறங்கிச் சுத்தம் செய்வேன்" என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் உடனடியாக அங்கு வந்த நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.1
- காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 253மாணவர்களுக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன் விலையில்லா சைக்கிளை வழங்கி,பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடினார்.பின் தான் படித்த பள்ளி என்பதால் எம்எல்ஏ எழிலரசன் ஆர்வம் மிகுதியால் மாணவர்களுக்கு வழங்கிய சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு பள்ளி வளாகம் முழுவதும் சைக்கிள் ஓட்டி பள்ளியில் தனது பருவக் கால பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.பள்ளி வளாகத்தில் பழைய பள்ளி மாணவனாகவே மாறி சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த எம்எல்ஏவின் செய்கையை பார்த்த பள்ளி மாணவர்கள் உற்சாகம் மிகிதியால் ஆரவாரம் செய்து எம்எல்ஏ-வை உற்சாகப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஏகாம்பரம், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் கே.ஆறுமுகம், பகுதி செயலாளர் வெங்கடேசன் மற்றும் புதிய பிரமுகர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் எம்.எல்.ஏ சைக்கிள் ஓட்டும் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.1