logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தென்காசி மாவட்டம் குற்றாலம் இன்றைய நிலவரம் மிதமான மழை இதமான காற்று லேசான வெயில் அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீர் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்

1 hr ago
user_King
King
தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
1 hr ago

தென்காசி மாவட்டம் குற்றாலம் இன்றைய நிலவரம் மிதமான மழை இதமான காற்று லேசான வெயில் அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீர் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்

More news from Tamil Nadu and nearby areas
  • மயிலம் அடுத்த பெரமண்டூரில்தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேமுதிக மாவட்ட கழக செயலாளர் எல் வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக மயிலம் வடக்கு ஒன்றியம் பெரமண்டுர் கிராமத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது ஒன்றிய அவைத் தலைவர் டி. சி. முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்த்தின் திரு உருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் இதனை தொடர்ந்து ஒன்றிய கழகச் செயலாளர் ஆர் பி முருகன் கட்சி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி பாலு மகேந்திரன் ஒன்றிய பொருளாளர் பொய்யாது ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் முருகேசன் சங்கர் ராஜேஷ் குபேந்திரன் தாடி முருகன் பாரதி அன்பு ரோஸ் தங்கராஜ் மிருதுளா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்
    1
    மயிலம் அடுத்த பெரமண்டூரில்தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது
விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேமுதிக மாவட்ட கழக செயலாளர் எல் வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக மயிலம் வடக்கு ஒன்றியம் 
பெரமண்டுர் கிராமத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது ஒன்றிய அவைத் தலைவர் டி. சி. முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்த்தின் திரு உருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் இதனை தொடர்ந்து ஒன்றிய கழகச் செயலாளர் ஆர் பி முருகன் கட்சி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட நிர்வாகி 
பாலு மகேந்திரன்  ஒன்றிய பொருளாளர் பொய்யாது ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் முருகேசன் சங்கர் ராஜேஷ் குபேந்திரன் தாடி முருகன் பாரதி அன்பு ரோஸ் தங்கராஜ் மிருதுளா உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்துக் கொண்டனர்
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    2 hrs ago
  • தூத்துக்குடி வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க புத்தகக் கண்காட்சி தூத்துக்குடியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களின் வாசிப்புத் திறனை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது. 25 அரங்குலுடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தக கண்காட்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் தொடங்கி வைத்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். 11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அரசியல் இலக்கியம் கதைகள் கவிதைகள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன இந்த புத்தக கண்காட்சியின் போது பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
    1
    தூத்துக்குடி  வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க புத்தகக் கண்காட்சி 
தூத்துக்குடியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களின் வாசிப்புத் திறனை அதிகப்படுத்தும் வகையில்  தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது.
25 அரங்குலுடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தக கண்காட்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் தொடங்கி வைத்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர்.
11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அரசியல் இலக்கியம் கதைகள் கவிதைகள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன இந்த புத்தக கண்காட்சியின் போது பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • அணுக்கனிம சுரங்க அனுமதி நீட்டிப்பு ரத்து செய்யப்படுமா ?ஆஸ்டின் எம்எல்ஏ கேள்வி தமிழக சட்டமன்றத்தில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிம சுரங்கம் அமைப்பது தொடர்பான அனுமதியை திமுக அரசு நிறுத்தி வைத்திருந்தது ஆனால் தற்போது புதிதாக பதவி ஏற்று உள்ள அரசு ஓர் ஆண்டு காலத்திற்கு அந்த அனுமதியை நீட்டித்து வழங்கி உள்ளது.இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த அனுமதி ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தாது என்று கூறினார்.
    1
    அணுக்கனிம சுரங்க அனுமதி நீட்டிப்பு ரத்து செய்யப்படுமா ?ஆஸ்டின் எம்எல்ஏ கேள்வி
தமிழக சட்டமன்றத்தில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிம சுரங்கம் அமைப்பது தொடர்பான அனுமதியை திமுக அரசு நிறுத்தி வைத்திருந்தது ஆனால் தற்போது புதிதாக பதவி ஏற்று உள்ள அரசு ஓர் ஆண்டு காலத்திற்கு அந்த அனுமதியை நீட்டித்து வழங்கி உள்ளது.இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த அனுமதி ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தாது என்று கூறினார்.
    user_Sabarees
    Sabarees
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • த.வெ.க சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா. தமிழக வெற்றி கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. இதில் சமபந்தி விருந்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களோடு சேர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது த.வெ.க நிர்வாகி பால்ராஜ் முன்னிலையில் த.வெ.க கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் நலத்திட்டங்களை வழங்கினார். தூய்மை பணியாளர்கள் அனைவரும் சமபந்தி விருந்து அளித்த த.வெ.க வினரை பாராட்டி வாழ்த்தி சென்றனர்.
    1
    த.வெ.க சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா.
தமிழக வெற்றி கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. இதில் சமபந்தி விருந்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களோடு சேர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது  த.வெ.க நிர்வாகி பால்ராஜ் முன்னிலையில் த.வெ.க கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் நலத்திட்டங்களை வழங்கினார். தூய்மை பணியாளர்கள் அனைவரும் சமபந்தி விருந்து அளித்த த.வெ.க வினரை பாராட்டி வாழ்த்தி சென்றனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணியை ஆவணித் திருவிழாவிற்கு ஒலிக்க வைக்க வேண்டும். பக்தர்கள் கோரிக்கை. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணியை ஆவணித் திருவிழாவிற்கு ஒலிக்க வைக்க வேண்டும். பக்தர்கள் கோரிக்கை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகள் கொண்ட கோவில் ராஜகோபுரம் உள்ளது. இந்த ராஜகோபுரத்தில் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி உள்ளது. அந்த காலத்தில் நாள்தோறும் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜை முடிந்து கோபுர மணி ஒலிக்கப்படும். இந்த கோபுர மணி ஒலிக்கப்பட்ட பின்னரே வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவை உண்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மணி கோபுரத்தின் உச்சியில் உள்ள 9வது நிலையில் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் 300 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வந்த பெருந்திட்ட வளாக பணிகளில் இந்த மணியும் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த மணி ஒலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ஆலய மணியை வருகின்ற ஆவணித்திருவிழா நாட்களில் தினமும் ஒலிக்க வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணியை ஆவணித் திருவிழாவிற்கு ஒலிக்க வைக்க வேண்டும். பக்தர்கள் கோரிக்கை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணியை ஆவணித் திருவிழாவிற்கு ஒலிக்க வைக்க வேண்டும். பக்தர்கள் கோரிக்கை.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகள் கொண்ட கோவில் ராஜகோபுரம் உள்ளது. இந்த ராஜகோபுரத்தில் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி உள்ளது. அந்த காலத்தில் நாள்தோறும் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜை முடிந்து கோபுர மணி ஒலிக்கப்படும். இந்த கோபுர மணி ஒலிக்கப்பட்ட பின்னரே வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவை உண்டதாக கூறப்படுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மணி கோபுரத்தின் உச்சியில் உள்ள 9வது நிலையில் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் 300 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வந்த பெருந்திட்ட வளாக பணிகளில் இந்த மணியும் புதுப்பிக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை இந்த மணி ஒலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ஆலய மணியை வருகின்ற ஆவணித்திருவிழா நாட்களில் தினமும் ஒலிக்க வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_திகழன்
    திகழன்
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • ஆபத்தான ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக 3 பேர் கைது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பியதாக 3 இளைஞர்களை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) மற்றும் ஆவியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (23) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காரியாபட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முத்துராமன், ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    1
    ஆபத்தான ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக 3 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் 
காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பியதாக 3 இளைஞர்களை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) மற்றும் ஆவியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (23) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.
இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காரியாபட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முத்துராமன், ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    user_குமார்
    குமார்
    Firefighter Kariapatti, Virudhunagar•
    22 min ago
  • காரியாபட்டியில் ஆபத்தான ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக 3 பேர் கைது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பியதாக 3 இளைஞர்களை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) மற்றும் ஆவியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (23) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காரியாபட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முத்துராமன், ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    1
    காரியாபட்டியில் ஆபத்தான ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் 
காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பியதாக 3 இளைஞர்களை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) மற்றும் ஆவியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (23) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.
இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காரியாபட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முத்துராமன், ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    2 hrs ago
  • மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தண்ணீருக்கு தவிக்கும் கிராம மக்கள் ஒட்டப்பிடாரம் தாலுகாவை சேர்ந்தது மாப்பிள்ளை யூரனி.. இங்கு தற்போது குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பைப் லைன் புதியதாக பதிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் தற்போது அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது அதுபோக மங்களக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து மாப்பிள்ளை யூரணிக்கு வரும் குடிநீர் பைப் லைன் 18 லட்சம் தண்ணீர் வரக் கூடிய அளவுக்கு தான் பைப்லைன் பதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது கடந்த திமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் மாப்பிள்ளையூரனிபஞ்சாயத்தில் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கு பஞ்சாயத்து மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதால் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்துக்கு தேவையான 95 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது தற்போது அந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தனைக்கும் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜா அவர் அமைச்சராகவும் உள்ளார் ஆனால் இதுவரை மாப்பிள்னளயூரனிபஞ்சாயத்தில் வந்து மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மதன் ராஜா வந்து இதுவரை மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை நாங்கள் குடிநீர் பிரச்சனையில் திண்டாடி வருகிறோம் என்ற ஒரு குற்றச்சாட்டும் வருகிறது இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெண்களிடம் கேட்டபோது சொன்ன ஒரே பதில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது . என்றனர்.
    1
    மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தண்ணீருக்கு தவிக்கும் கிராம மக்கள்
ஒட்டப்பிடாரம் தாலுகாவை சேர்ந்தது  மாப்பிள்ளை யூரனி.. இங்கு தற்போது  குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பைப் லைன் புதியதாக பதிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் தற்போது அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது அதுபோக மங்களக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து மாப்பிள்ளை யூரணிக்கு வரும் குடிநீர் பைப் லைன் 18 லட்சம் தண்ணீர் வரக் கூடிய அளவுக்கு தான் பைப்லைன் பதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது கடந்த திமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் மாப்பிள்ளையூரனிபஞ்சாயத்தில் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கு பஞ்சாயத்து மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதால் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்துக்கு தேவையான 95 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது தற்போது அந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தனைக்கும் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜா அவர் அமைச்சராகவும் உள்ளார் ஆனால் இதுவரை மாப்பிள்னளயூரனிபஞ்சாயத்தில் வந்து மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மதன் ராஜா வந்து இதுவரை மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை நாங்கள் குடிநீர் பிரச்சனையில் திண்டாடி வருகிறோம் என்ற ஒரு குற்றச்சாட்டும் வருகிறது இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெண்களிடம் கேட்டபோது சொன்ன ஒரே பதில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது . என்றனர்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி உலக சுற்றுலா மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது இங்கு சூரியன் உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சியை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியும் இதன் காரணமாக விடுமுறை தினங்களில் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள் ஓணம் விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர் அவர்கள் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர் கன்னியாகுமரியில் இயற்கை அழகை கண்டு ரசித்த அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள நினைவகங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர் இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது
    1
    விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரி உலக சுற்றுலா மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது இங்கு சூரியன் உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சியை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியும் இதன் காரணமாக விடுமுறை தினங்களில் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள் ஓணம் விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர் அவர்கள் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர் கன்னியாகுமரியில் இயற்கை அழகை கண்டு ரசித்த அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள நினைவகங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர் இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது
    user_Sabarees
    Sabarees
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.