Shuru
Apke Nagar Ki App…
தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.
CHANDRA SEKAR AYYANAR
தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டான அருகில் தனியார் பேருந்தும்,காரும் மோதி விபத்து1
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது1
- திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானாவில் இன்று காரும் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ இல்லை. ஆனாலும் இந்த விபத்தில் காரணமாக போக்குவரத்து நெரிசல் நீண்ட நேரம் ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.1
- முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்1
- உத்தமபாளையம் அருகே கருநாக்கமுத்தன்பட்டி சேர்ந்த அஜித் என்பவரை முன் விரோதம் காரணமாக சந்தோஷ் மற்றும் பசும்பொன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தனர் இந்த கொலை சம்பந்தமாக இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல் படி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி சந்தோஷ் மற்றும் பசும்பொன் இருவர் மீது குண்டத் தடுப்புச் சட்டத்தின் கைது செய்தனர்1
- மணப்பாறை குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால், தூக்கத்தை தொலைத்த மக்கள். மணப்பாறையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் இருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலை பட்டி பகுதியில் ஒழுங்குமுறை கூடத்தின் குடோன் உள்ளது. இங்கு அரிசி, உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. குடோனில் உணவு தானியங்களுக்கு வண்டுகள் மற்றும் பூச்சிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மருந்து தெளித்து பராமரிப்பது வழக்கம். இந்த வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்க மறந்துவிட்டதால் வண்டுகள், பூச்சிகள் அதிகமாக உருவாகி குடோனில் இருக்கும் உணவு தானியங்களை நாசம் செய்வதோடு, அருகில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன. குறிப்பாக மாலை 5 மணியிலிருந்து குடோனில் இருந்து அதிகளவில் வண்டுகள் வெளியேறி, வீடுகளுக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்து வருகின்றன. குடோனுக்கு அருகே உள்ள பூமாலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வண்டுகளால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து பகுதிவாசிகள் கூறும்போது,வீடுகளில் வைத்துள்ள குடிநீர், உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட இடங்களில் வண்டுகள் வந்து விழுகின்றன. எங்களை கடித்தும் துன்புறுத்துகின்றன. இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவிக்கிறோம். இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களில் வண்டுகள் விழுந்து கண்களுக்கு கேடு விளைவிப்பதோடு, விபத்துகள் ஏற்படவும் காரணமாகின்றன. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் வண்டுகள் உருவாகாமல் இருக்க முறையான வழிமுறைகளை கையாள வேண்டும். மாவட்ட நிர்வாகம் தான் எங்களை காக்க வேண்டும்” என்று பகுதிவாசிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- பானி பூரி விற்பனையாளர் ஒருவர் தண்ணீரில் இருந்து உயிருள்ள எலியை அகற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி, 25 மில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளது. சாலையோரக் கடையில் ஒரு இளைஞர் சவால் வீடியோவை படமாக்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் பெரும் சுகாதாரக் கவலைகளைத் தூண்டியுள்ளது1