திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடைய மாவட்ட நிலையில் உள்ள அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் விஜயா, ஜெயசுதா, உஷாராணி, செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலையில்குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடைய மாவட்ட நிலையில் உள்ள அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது இதில் ஒவ்வொரு துறையின் சார்பிலும் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக 2026-ம் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மேற்கொண்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தனியார் பள்ளிகளில் விடுதிகள் இயங்கி வந்தால் அதற்கான உரிமம் பெற்று செயல்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும், கல்வி இடைநிற்றல் உள்ள குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்குச் செல்ல வழிவகை மேற்கொள்ளுமாறும், பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சீரமைப்பு செய்வதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடைய மாவட்ட நிலையில் உள்ள அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் விஜயா, ஜெயசுதா, உஷாராணி, செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலையில்குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடைய மாவட்ட நிலையில் உள்ள அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது இதில் ஒவ்வொரு துறையின் சார்பிலும் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக 2026-ம் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மேற்கொண்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தனியார் பள்ளிகளில் விடுதிகள் இயங்கி வந்தால் அதற்கான உரிமம் பெற்று செயல்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும், கல்வி இடைநிற்றல் உள்ள குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்குச் செல்ல வழிவகை மேற்கொள்ளுமாறும், பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சீரமைப்பு செய்வதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது
- இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தேனியில் விமர்சியாக நடந்தது தேனியில் செயல்பட்டு வரும் இந்து எழுச்சி முன்னணி அமைப்பு சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் செண்டா மேளம் முழங்க அரிசி கொம்பன் யானை முன் நின்று வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைக்க இந்த ஊர்வலமானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்று பாலம் வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்1
- தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.1
- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- 118 வது அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை கரூர்: அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் சமூகநீதிக்கான அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவரது வழியில் தொடர்ந்து பணியாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.1
- தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.1
- மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.1
- *தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலம் எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர்* விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் திருமேனிகளை வைத்து நேற்று வழிபாடு நடைபெற்றது இதனை அடுத்து விநாயகர் திருமேனிகளைக் இன்று ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது இதற்காக தேனியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் திருமேனிகளை பொம்மையகவுண்டன்பட்டி பகுதிக்கு வாகனத்தில் எடுத்துவரப்பட்டது அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது செயற்கை யானையை தத்ரூபமாக அழைத்து வரப்பட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் சிறிய விநாயகர் சிலைகளை தலையில் சுமந்து கொண்டு மேளதாளத்துடன் முன்னே சொல்ல சிறுவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் திருமேனிகளின் ஊர்வலம் தொடங்கியது பொம்மையை கவுண்டன்பட்டியில் தொடங்கிய இந்த ஊர்வலம் அல்லிநகரம், பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு உள்ளிட்ட தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அரண்மனை புதூரில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர் இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த விநாயகர் ஊர்வலத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்து வரப்பட்டு முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது இதனை தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் இன்று மாலையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் ஊர்வலம் நடைபெற உள்ளது1
- பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பெரியகுளம் MLA தொடங்கி வைத்தார் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது வராக நதியில் கரைப்பதற்கு போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து பெரியகுளம் நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தநூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலமாக எடுத்து வந்து வராக நதியில் கரைக்கப்பட்டது முன்னதாக இந்த ஊர்வலத்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் தொடங்கி வைத்தார் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்ட இந்து முன்னணி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- தேர்தல் பணிமனை திறப்புவிழா விழாக்கோலம் பூண்ட தாராபுரம் தாராபுரத்தில் மின்வெட்டு, மின்கட்டணப் பிரச்சினை திடீர் கனமழையிலும் உரையாற்றிய கே.என்.நேரு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கனமழை பெய்தது. இதனால் விழா மேடையில் இருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மழையில் நனைந்தனர். இருப்பினும், மழையைப் பொருட்படுத்தாமல் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடையே உரையாற்றினார். மழையில் இருந்து தப்பிக்க தொண்டர்கள் நாற்காலிகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு தலைவர்களின் பேச்சைக் கேட்டனர். சிலர் மழையில் நனைந்தபடியே நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றனர். மழை பெய்தபோதும் கூட்டம் கலைந்து செல்லாமல் இருந்தது விழாவில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. தாராபுரத்தில் மின்வெட்டு, மின்கட்டணப் பிரச்சினை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தாராபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக மழையின்றி வறட்சி நிலவி வந்த நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யாவின் தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் திடீரென கனமழை பெய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை அறிவித்தவுடன் திமுகவிற்கு வெற்றி மழை பெய்துவிட்டது எனக் குறிப்பிட்டார். மேலும், தாராபுரம் பகுதியில் மின்சாரக் கட்டணக் கணக்கீட்டுப் பணிகள் தொய்வாக நடைபெறுவதாகவும், 200 யூனிட் மின்சாரம் தொடர்பான கணக்கீட்டுப் பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் மின்நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மின்கட்டணமாக ரூ.2,000 செலுத்தி வந்தவர்களுக்கு ரூ.10,000 வரை கட்டணம் விதிக்கப்படுவதாகவும், அதிக மின்கட்டணம் செலுத்திய பின்னரும் தாராபுரத்தில் இரவு, பகல் என அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து நிலவி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மகளிர் உரிமைத்தொகை குறித்து சக்கரபாணி பேச்சு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தால் வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத்தொகையான ரூ.1,000 மட்டுமே தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்றும் அவர் பேசினார். கனமழையால் சிறப்புப் பேச்சாளர்கள் உரையாற்ற முடியவில்லை இதனிடையே, விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இடைவிடாது கனமழை பெய்ததால் நிகழ்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. மழை காரணமாக திட்டமிட்டபடி சிறப்புப் பேச்சாளர்கள் அனைவரும் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் தலைவர்கள் அவசர அவசரமாக உரையாற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இருப்பினும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரே இடத்தில் திரண்டிருந்ததால் விழா களைகட்டியது. மழை நின்றுவிடும் என்ற எதிர்பார்ப்பில் பலர் புதிய பேருந்து நிலைய மேம்பாலத்தின் கீழும், சாலையின் இருபுறங்களிலும் காத்திருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் தொண்டர்கள் மழையில் நனைந்தபடியே அங்கிருந்து கலைந்து சென்றனர். தாராபுரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த கனமழைக்கு மத்தியில் நடைபெற்ற திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா, அரசியல் பரபரப்பையும் தொண்டர்களின் உற்சாகத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.2