logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

" எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் அமைக்க போகிறீர்கள் " : அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சால் எழுந்தது சர்ச்சை “பரந்தூர் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் என்ன செய்யப்படும்?” - பேரவையில் காரசார விவாதம் ​சென்னை: “ரத்து செய்யப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மாற்று தொழில் திட்டங்கள் மக்களை பாதிக்காதவாறு பயன்படுத்தப்படும்” என சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். ​பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “இந்த திட்டத்துக்கு மொத்தமாக 5846 ஏக்கர் நிலங்கள் தேவைப்பட்டது, இதில் 3774 ஏக்கர் பட்டா நிலங்கள். அதில் 2681 ஏக்கர் விவசாய நிலங்கள். அரசு நிலங்களாக இதில் காட்டப்பட்டது 1972 ஏக்கர் ஆகும், இதில் 1558 ஏக்கர் நீர் நிலைகள் ஆகும். ​இந்த திட்டத்துக்காக 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். ஆனால் 48% நிலங்கள் மட்டும் தான் கையகப்படுத்தப்பட்டது. இதில் ஏகனாபுரம், காரை, தண்டளம், சிறுவலூர் போன்ற கிராமங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கையகப்படுத்தவில்லை. ​சென்னையில் இப்போதுள்ள விமான நிலையத்துக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் உள்ளது. இந்த விமான நிலையத்தில் கூடுதலாக திட்டமிட்டுள்ள பணிகளை முடிந்தால் வருடத்துக்கு 55 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை வாங்கவில்லை. பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகவோ, கருப்பு பணத்தை முதலீடு செய்தவர்களுக்காகவோ கதறுகிறார்கள்” என்றார். ​இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என நீங்கள் சொல்வீர்கள் ஆனால், எந்த லாட்டரி மருமகனுக்காக நீங்கள் புதிய விமான நிலையத்தை அமைக்கப்போகிறீர்கள் என நான் கேட்கட்டுமா. சென்னையின் புவியியல் அமைப்பின்படிதான் மேற்கு பகுதியான பரந்தூரை தேர்வு செய்தோம். பரந்தூரில் குறைவான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படையில் இதனை தேர்வு செய்தோம். ​பல இடங்களை பார்த்த பின்னர் ஒன்றிய அரசு பரந்தூருக்கு தான் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதில் பல சிக்கல்கள் உள்ளது. பரந்தூரில் 2500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கைவிடுவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்” என்றார். ​தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்காக, வெளியூரில் வசிப்பவர்களின் நிலங்களுக்கு மட்டுமே வலுக்கட்டாயமாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை போட்டு கையகப்படுத்தினார்கள். நான் சொன்ன 4 கிராமங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கையகப்படுத்தவில்லை. இதற்காக 1000 நாட்களாக போராடிய மக்களுக்கு முதல்வர் விஜய் ஆதரவு கொடுத்தார். கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்து முதல்வரிடம் பேசி உரிய முடிவு எடுப்போம்” என்றார். ​அப்போது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “பரந்தூர் விமான நிலையம் அமைக்க இருந்த பகுதியில் கம்பன் கால்வாய் என்ற தொல்லியல் பொக்கிஷம் ஓடுகிறது. பரந்தூர் பகுதி உறிஞ்சு நிலம், அது சென்னை வெள்ளத்தை தடுக்க கூடியது. பரந்தூரில் கிரீன் ஏர்போர்ட் கட்ட முடியாது, தண்ணீர் ஏர்போர்ட் வேண்டுமானால் கட்டலாம்” என்றார். ​இதன் பின்னர் சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், “பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மாற்று தொழில் திட்டங்கள் மக்களை பாதிக்காதவாறு செயல்படுத்தப்படும். இதன் மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி இப்பகுதியில் ஏற்படும். ​விவசாய விளைநிலங்கள் மற்றும் கால்வாய்கள் நிறைந்துள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைத்தால், சென்னையில் வெள்ளபாதிப்பு ஏற்படும். மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தும், என்ன நோக்கத்துக்காக 5 ஆண்டுகள் ஏன் பணிகளை கிடப்பில் போட்டிருந்தீர்கள். பரந்தூர் விமான நிலையத்துக்காக தான் 5 ஆண்டுகள் விமான நிலைய விரிவாக்கம் கிடப்பில் இருந்தது. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் மக்கள், விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் கையகப்படுத்தப்பட்டு அமைக்கப்படும்” என்றார்.

21 hrs ago
user_N-KIPSRA
N-KIPSRA
மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
21 hrs ago
abfc4d9b-24c3-4e22-bb5c-cd764007873a

More news from Tamil Nadu and nearby areas
  • டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள். தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.
    1
    டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள்.
தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை  (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள்  அடைக்கப்படும் என்று  தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    16 hrs ago
  • हेडलाइन: गंगा बैराज हाईवे पर मिला अज्ञात व्यक्ति का शव, नवाबगंज पुलिस जांच में जुटी कानपुर नगर के नवाबगंज थाना क्षेत्र स्थित गंगा बैराज हाईवे पर मंगलवार सुबह एक अज्ञात व्यक्ति का शव मिलने से इलाके में हड़कंप मच गया हाईवे से गुजर रहे राहगीरों ने सड़क किनारे शव पड़ा देखा और पुलिस को सूचना दी सूचना मिलते ही नवाबगंज थाना पुलिस टीम मौके पर पहुंची पुलिस ने घटनास्थल को सुरक्षित कर आसपास के लोगों से पूछताछ की मौके पर कई पुलिसकर्मी मौजूद रहे और मामले की छानबीन करते नजर आए पुलिस के अनुसार, मृतक की उम्र लगभग 35-40 वर्ष के आसपास लग रही है और उसकी अभी तक शिनाख्त नहीं हो सकी है शव को कब्जे में लेकर पंचनामा भर पोस्टमार्टम के लिए भेज दिया गया है थाना प्रभारी ने बताया कि पोस्टमार्टम रिपोर्ट आने के बाद ही मौत के सही कारणों का पता चल सकेगा फिलहाल आसपास के थानों में गुमशुदा लोगों के बारे में जानकारी जुटाई जा रही है और शव की पहचान कराने का प्रयास किया जा रहा है पुलिस मामले की हर एंगल से जांच कर रही है
    3
    हेडलाइन: गंगा बैराज हाईवे पर मिला अज्ञात व्यक्ति का शव, नवाबगंज पुलिस जांच में जुटी
कानपुर नगर के नवाबगंज थाना क्षेत्र स्थित गंगा बैराज हाईवे पर मंगलवार सुबह एक अज्ञात व्यक्ति का शव मिलने से इलाके में हड़कंप मच गया हाईवे से गुजर रहे राहगीरों ने सड़क किनारे शव पड़ा देखा और पुलिस को सूचना दी सूचना मिलते ही नवाबगंज थाना पुलिस टीम मौके पर पहुंची पुलिस ने घटनास्थल को सुरक्षित कर आसपास के लोगों से पूछताछ की मौके पर कई पुलिसकर्मी मौजूद रहे और मामले की छानबीन करते नजर आए पुलिस के अनुसार, मृतक की उम्र लगभग 35-40 वर्ष के आसपास लग रही है और उसकी अभी तक शिनाख्त नहीं हो सकी है शव को कब्जे में लेकर पंचनामा भर पोस्टमार्टम के लिए भेज दिया गया है थाना प्रभारी ने बताया कि पोस्टमार्टम रिपोर्ट आने के बाद ही मौत के सही कारणों का पता चल सकेगा फिलहाल आसपास के थानों में गुमशुदा लोगों के बारे में जानकारी जुटाई जा रही है और शव की पहचान कराने का प्रयास किया जा रहा है
पुलिस मामले की हर एंगल से जांच कर रही है
    user_S News
    S News
    News Anchor India•
    1 hr ago
  • கொல்லங்குடியில் கோவில் திருவிழா முன்னிட்டு களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொல்லங்குடியில் இருந்து முதல் வலையம்பட்டி வரை நடைபெற்ற இந்தப் போட்டி, பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 7 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், 5 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 27 ஜோடிகளும் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. பந்தயத்தில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அழகாபுரி, மேப்பல், நரிக்கோட்டை, காளையார்கோவில், விட்டனேரி, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, ஆர்வத்துடன் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டுகளித்தனர்.
    1
    கொல்லங்குடியில் கோவில் திருவிழா முன்னிட்டு களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம், 
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கொல்லங்குடியில் இருந்து முதல் வலையம்பட்டி வரை நடைபெற்ற இந்தப் போட்டி, பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 7 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், 5 கிலோமீட்டர் பந்தய எல்லையாக  நடைபெற்ற  சிறிய மாடு பிரிவில் 27 ஜோடிகளும் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன.
பந்தயத்தில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அழகாபுரி, மேப்பல், நரிக்கோட்டை, காளையார்கோவில், விட்டனேரி, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, ஆர்வத்துடன் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டுகளித்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    20 min ago
  • விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    1
    விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது இந்நிலையில் இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் உள்ள அரசு சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள் இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    1
    2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் 

தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட  108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்
அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது
வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது
இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்
தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும்
தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்
ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில்  வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது
இந்நிலையில்  இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்
தங்களது கிராமத்தில் உள்ள அரசு  சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள்
இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில்  வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும்
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும்
தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது
மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து 
தேனி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு தேனி மாவட்டம் போடி கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு ​ஓணம் திருநாளை முன்னிட்டு 6 அடி உயர சிவலிங்கத்திற்கு வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் ​நந்தியம் பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் ​ ​தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கொண்டரங்கி மல்லையா சிவன் கோவிலில், ஆவணி மாத முதல் பிரதோஷம் மற்றும் ஓணம் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றது. ​இதனை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ​மேலும் ஓணம் திருநாளை முன்னிட்டு, கருவறையில் உள்ள 6 அடி உயர சிவலிங்கத்திற்குப் பல வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'நமசிவாய' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    1
    மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு
தேனி மாவட்டம் போடி கொண்டரங்கி மல்லையா சிவன் கோயிலில் ஆவணி மாத முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு
​ஓணம் திருநாளை முன்னிட்டு 6 அடி உயர சிவலிங்கத்திற்கு வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம்
​நந்தியம் பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
​
​தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கொண்டரங்கி மல்லையா சிவன் கோவிலில், ஆவணி மாத முதல் பிரதோஷம் மற்றும் ஓணம் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றது.
​இதனை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
​மேலும் ஓணம் திருநாளை முன்னிட்டு, கருவறையில் உள்ள 6 அடி உயர சிவலிங்கத்திற்குப் பல வண்ணச் செவ்வந்தி மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'நமசிவாய' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் குவிந்த பக்தர்கள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை அங்காரக வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.
    1
    இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் குவிந்த பக்தர்கள் 
மதுரை  பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 
(25.08.2026) செவ்வாய்க்கிழமை  அங்காரக வார பிரதோசத்தை முன்னிட்டு  மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    17 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பிரிவை சேர்ந்தோர் வீடு புகுந்து வெட்டிய கும்பல் வசிக்கும் பகுதிக்குச் சென்று 15 இருசக்கர வாகனங்கள் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கியதால் பதட்டம்... போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் கிராமம், மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த கணேச பாண்டி (49), மற்றும் அவரது மகன் கௌதம் (20) இருவரும் நேற்று நள்ளிரவு  வழக்கம் போல் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அருகில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு கும்பல் வீடு புகுந்து தந்தை  கணேச பாண்டி மற்றும் மகன் கௌதமை வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்த கணேசபாண்டி மற்றும் அவரது உறவினர் தரப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய கும்பல் வசித்த பகுதிக்கு சென்று அங்கிருந்த 15 ற்கும்  இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதனால் இப்பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமண ஊர்வலம் நடந்த போது இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு சமாதான கூட்டம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    1
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பிரிவை சேர்ந்தோர் வீடு புகுந்து வெட்டிய கும்பல் வசிக்கும் பகுதிக்குச் சென்று 15 இருசக்கர வாகனங்கள் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கியதால் பதட்டம்... போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் கிராமம், மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த  கணேச பாண்டி (49), மற்றும் அவரது மகன் கௌதம் (20) இருவரும் நேற்று நள்ளிரவு  வழக்கம் போல் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அருகில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு கும்பல் வீடு புகுந்து தந்தை  கணேச பாண்டி மற்றும் மகன் கௌதமை வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்த கணேசபாண்டி மற்றும் அவரது உறவினர் தரப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய கும்பல் வசித்த பகுதிக்கு சென்று அங்கிருந்த 15 ற்கும்  இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதனால் இப்பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமண ஊர்வலம் நடந்த போது இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு சமாதான கூட்டம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.