*கெலமங்கலம் இளைஞா் கொலை வழக்கில் நண்பா் உள்பட 4 போ் கைது* ஒசூர் அடுத்த கெலமங்கலம் ரியல் எஸ்டேட் அதிபா் கொலையில் நண்பா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளியைச் சோ்ந்தவா் குருபிரசாத் (31). பழைய பொருள்களை வாங்கி விற்பனை செய்துவந்த இவா், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவந்தாா். கடந்த ஜன. 7-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது நண்பரான தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த சுரேஷ்பாபு (26), குருபிரசாத்தை எழுப்பி வெளியே அழைத்துச் சென்றாா். சிறிது நேரத்தில் குருபிரசாத்தின் அலறல் சப்தம் கேட்டு அவரது தாயாா் முனிரத்னா அங்கு சென்று பாா்த்தாா். அங்கு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் குருபிரசாத் இறந்துகிடந்தாா். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். அதில், நண்பா்களான கொலை செய்யப்பட்ட குருபிரசாத்தும், தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த சுரேஷ்பாபு (26) இருவரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்துள்ளனா். இந்நிலையில், சுரேஷ்பாபுவிடம் குருபிரசாத் ரூ. 5 லட்சம் கடன் வாங்கி உள்ளாா். அந்தப் பணத்தை சுரேஷ்பாபு திரும்ப கேட்டபோது, பணம் கொடுக்காமல் குருபிரசாத் அலைக்கழித்துள்ளாா். இதனால் அவா்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுரேஷ்பாபுவை தீா்த்துக்கட்ட குருபிரசாத் திட்டம் போட்டாா். இதை அறிந்த சுரேஷ்பாபு, குருபிரசாத்தை கொலை செய்ய கூலிப்படையான தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த நவீன் (27), தேவராஜ் (25), வெங்கடேஷ் (39) ஆகியோரை அணுகினாா். பின்னா் சுரேஷ்பாபு உள்ளிட்ட 4 பேரும் கடந்த 7-ஆம் தேதி இரவு குருபிரசாத் வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. கொலையாளிகளை போலீஸாா் தேடிவந்த நிலையில், அவா்கள் கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையில் இருப்பதாக கெலமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்குசென்ற போலீஸாா் சுரேஷ்பாபு, நவீன், தேவராஜ், வெங்கடேஷ் ஆகிய 4 பேரையும் இரவு கைது செய்தனா்.

- *போச்சம்பள்ளி சந்தையில் பொங்கல் முன்னிட்டு – ஆடு, கோழி, தங்கம், மளிகை, மாட்டு அலங்காரம் வரை விற்பனை ஜோர்* *தமிழ்நாடு – கர்நாடகா – ஆந்திரா மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வருகை; இன்று மட்டும் 5 கோடிக்கு ஆடு விற்பனை!* கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமான போச்சம்பள்ளியில் இன்று நடைபெற்று வரும் வாரச் சந்தை, தைப்பொங்கல், , மாட்டு பொங்கல் , காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு அதிகாலையிலேயே பெரும் கூட்ட நெரிசலுடன் களைகட்டியது. வாடிக்கையாளர்கள் அதிகாலை 5 மணி முதலே சந்தைக்கு திரண்டதால், வியாபாரிகள் தங்கள் கடைகளை முன்கூட்டியே அமைத்து விற்பனையைத் தொடங்கினர். இன்றைய சந்தையின் சிறப்பம்சமாக, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களுடன் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகை தந்திருந்தனர். வேறுபட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள், கோழிகள், மளிகை பொருட்கள், காய்–பழங்கள் மற்றும் மசாலா பொருட்கள் மிக உயர்ந்த விற்பனையைப் பெற்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இறைச்சி தேவையும், குலதெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன் செலுத்துதல், பலி வழிபாடு ஆகியவற்றிற்கான ஆடுகளின் தேவை அதிகரித்ததால், இந்த வாரம் மட்டும் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 20–25 கிலோ எடை கொண்ட ஆடுகள் 19,000 முதல் 23,000 ரூபாய் வரை விற்பனையாகின. மாட்டு பொங்கல் நெருங்கிவருவதால், கால்நடைகளுக்கான அலங்காரப் பொருட்கள் சந்தையில் அதிகம் தேவை பெற்றன. விற்பனையாளர்கள் கொண்டு வந்த மாட்டுக் கொம்புக்கு நிறமூட்டும் பவுடர்கள் – சிவப்பு, மஞ்சள், பச்சை கொம்புக்கு கட்டும் மணி, தாலம் கழுத்தில் அணிவிக்கும் பொன்/வெள்ளி நிற அலங்கார கயிறுகள் மாட்டிற்கு அணிவிக்கும் முத்து சங்கிலி, முல்லுறி ரிப்பன், வால் அலங்காரம் அலங்கார குட்டைகள் மற்றும் வண்ணத்துண்டுகள் இந்த பொருட்கள் அனைத்தும் அதிகாலை முதலே வேகமாக விற்று, பெரும்பாலான கடைகளில் பொருட்கள் மாலைக்குள் விற்றுவிட்டன. அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், மஞ்சள், நெய் போன்ற பண்டிகை மளிகைப் பொருட்கள் அதிக விற்பனையாகின காய்கறி விலை உயர்ந்திருந்தாலும், விற்பனை அதிகரித்தது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த அனைத்து வியாபாரிகளும், “இன்று விற்பனை மிக சிறப்பாக உள்ளது. கடந்த வாரங்களை விட இரட்டிப்பு அளவில் மக்கள் வருகை. பண்டிகை முன்பாக சந்தை முழுவதும் விற்பனை சூடுபிடித்துள்ளது,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.1
- ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. நேற்று 700 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.12) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- தர்மபுரி அருகே மதிகோன் பாளையம் ஏரியல் மருந்து கடை விற்பனையாளர் சடலமாக மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் நகர அளவிலான திராவிட பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் இன்றும்நடைபெற்றது. வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கபடி போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட அணிகளும் வாலிபால் போட்டியில் 15க்கும் மேற்பட்ட அணிகளும் பங்கேற்று விளையாடினார்கள் இறுதி வாலிபால் போட்டியை திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சேலம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சேலம் ஏ வி எஸ் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன்திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்தப் போட்டிகளில்நகர அளவிலான விளையாட்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.கபடி பிரிவில் முதலிடம் பிடித்த எஸ்.பி. என் A அணிக்கு 5 ஆயிரம் ரொக்கப் பரிசு கோப்பை, 2ம் இடம் பிடித்த எஸ்.பி. என் B அணிக்கு 4ஆயிரம் மற்றும் கோப்பை 3ம் இடம் பிடித்த அன்னைத் தமிழ் அணிக்கு 3 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப் பட்டது. இதே போல் வாலிபால் பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணிக் பிரண்ட்ஸ் அணிக்கு5000 ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு பெற்ற சந்துரு பிரண்ட்ஸ் அணிக்கு 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை மூன்றாம் இடம் பிடித்த பி.ஆர்.சி அணிக்கு ரூ 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது1
- காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க பெண் மருத்துவர்கள் பிரிவின் சார்பாக சங்கரா பன்னோக்கு மருத்துவமனையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சங்கரா அறக்கட்டளை அறங்காவலர் விஸ்வநாத ஐயர் வரவேற்புரை நிகழ்த்தினார். காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கா.சு. தன்யகுமார் தலைமை வகித்தார். மதிப்புறு செயலர் டாக்டர் வெ. முத்துக்குமரன், பொருளாளர் டாக்டர் ஆ.ஞானவேல் முன்னிலை முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் டாக்டர் எம். நிஷாப்ரியா, இணை செயலர் டாக்டர் வி. முத்துலஷ்மி, பெண் மருத்துவர்கள் பிரிவு தலைவர் டாக்டர் ஏ. சசிகலா, செயலர் டாக்டர் கோ. காஞ்சனா, முன்னாள் தலைவர்கள் டாக்டர் சு.மனோகரன், டாக்டர் தி. விக்டோரியா, மூத்த மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ரெ. ஹரிபாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்ட பின்னர் உறியடித்தல், ரங்கோலி கோலப் போட்டி முதலான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் டாக்டர் ஜி. லஷ்மி விஜயசங்கர், டாக்டர் க.புஷ்பம், டாக்டர் ஜெ.இன்பவல்லி, மூத்த மருத்துவர்கள் டாக்டர் ச. கர்ணன் ஸ்ரீனிவாஸ், டாக்டர் வை. சிந்துஜா , சங்கரா செவிலியர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை செயல் அலுவலர் விஜயலெச்சுமி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.1
- திருப்பூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து1
- மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் தற்போது வரை பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையின் விவரம். வேப்பம்பட்டி 4.4 மிமீ, சூரியக்கடை 4மிமீ, கேத்துரெட்டிபட்டி 2.8 மிமீ, பெரியப்பட்டி 2.8 மிமீ, மருதிப்பட்டி 2.4 மிமீ, தென்கரைக்கோட்டை 2.4 மிமீ, பையர்நத்தம் 2.4மிமீ, தீர்த்தமலை 2மிமீ என மழை பதிவாகி உள்ளது1