logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள மணப்பாறையில், இன்று ஒரு புதிய 'மக்கள் சேவை பயிலகம்' தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய குழந்தைகள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் இந்தப் பயிலகம் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை மணப்பாறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ரா. கதிரவன் தொடங்கி வைத்தார். மேலும், இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் இந்த துவக்க விழாவில் பங்கேற்றனர்.

8 hrs ago
user_Usha arun News
Usha arun News
Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
8 hrs ago
e346c377-0774-4515-8a3d-660dca2f4efd
4c929356-ea26-485e-ab41-a382a3bc720c
29fc7d6b-51c4-47a4-be2f-5a813eb7a694
5258fb4f-532d-4494-b532-171106fca1bc

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள மணப்பாறையில், இன்று ஒரு புதிய 'மக்கள் சேவை பயிலகம்' தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய குழந்தைகள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் இந்தப் பயிலகம் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை மணப்பாறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ரா. கதிரவன் தொடங்கி வைத்தார். மேலும், இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் இந்த துவக்க விழாவில் பங்கேற்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், ஸ்ரீரங்கம் தொகுதியில் தன்னை "காணவில்லை" என்று திமுகவினர் பரப்பும் அவதூறு பிரச்சாரத்திற்கு "கொஞ்சூண்டு ஜெலுசில் மருந்தை குடித்துவிட்டு வீட்டில் இருக்கலாம்" என்று காட்டமாக பதிலளித்தார். தனது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் திருச்சியைத் தங்கள் கோட்டை என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அது தளபதியின் கோட்டையாக மாறியதை ஏற்க முடியாமல், பொதுமக்கள் புகார் அளிப்பதாகக் கூறி திமுகவினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இது முற்றிலும் பொய்யான பிரச்சாரம் என்றும், மக்கள் இதனை நம்ப மாட்டார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த ஒரு மாதமாக ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தனது எம்எல்ஏ அலுவலக அதிகாரிகள் மற்றும் கழகத் தோழர்கள் மூலம் உடனடியாகத் தீர்வு கண்டதற்கான ஆதாரங்களாகப் புகைப்படங்களையும் நன்றி கடிதங்களையும் அமைச்சர் சமர்ப்பித்தார். குடிநீர் தொட்டிகள் திறப்பது, கழிப்பறைகள் அமைப்பது உள்ளிட்ட பல மக்கள் பணிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் தனது அலுவலகத்தில் பராமரிக்கப்படும் அழைப்புப் பதிவு நோட்டைக் காட்டி அவர் மறுத்தார். தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் சீரமைப்புப் பணிகளிலும், திருச்சி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சீராய்வு கூட்டங்களை நடத்தியும் தான் செயல்பட்டு வருவதால், தொகுதிப் பணிகள் தடைபடாமல் நடைபெறுவதாகவும் அவர் விளக்கமளித்தார். சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் துறைசார்ந்த கேள்விகளுக்குப் பதிலாகத் தேவையற்ற கேள்விகளை எழுப்புவதாகவும், மாண்புமிகு முதலமைச்சரை ஒருமையில் பேசியும் கிண்டல் செய்தும் சட்டமன்றத்தின் மாண்பைக் கெடுப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் சாடினார். "மாற்றம் வேண்டும் என ஏமாற்றமே மிஞ்சியது" என்ற மு.க. ஸ்டாலின் அவர்களின் கூற்றை மறுத்த அவர், கடந்த ஐந்து ஆண்டுக்கால நிர்வாகச் சீர்கேட்டையும் பொருளாதாரச் சிக்கல்களையும் சரிசெய்ய கால அவகாசம் தேவை என்றும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஊழலை ஒழிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். மு.க. ஸ்டாலின் வீட்டிலிருந்து சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்க்க நேர்ந்ததாலேயே இந்த விமர்சனங்களை முன்வைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில், திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் செல்போன் தடை அமல்படுத்தப்படுவதாகவும், விரைவில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட வசதிகள் பெரிய கோயில்களில் முதல் கட்டமாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், துவங்கப்படாத ₹246 கோடி மதிப்பிலான திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அந்த நிதி பக்தர்கள் தங்கும் இடம், அன்னதானக் கூடங்கள், கழிப்பறைகள், குடிநீர், வாகன நிறுத்துமிட வசதிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், அதற்கான புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். காவிரி உபரி நீரை மாயாற்றிலிருந்து பொன்னணியாறு அணை மற்றும் கல்லணைக்குக் கொண்டுசெல்லும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் பேசி ஆய்வு அறிக்கை வந்தவுடன் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசென்று தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். இறுதியாக, மக்கள் தங்களை ஆதரித்து பாராட்டி வருவதாகவும், திருச்சி தளபதியின் கோட்டையாக மாறியுள்ளதாகவும், அடுத்த தேர்தலில் த.வே.க அனைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்தார். திமுகவினர் பொய்யான பிரச்சாரங்களை விடுத்து மக்கள் பணி செய்யுமாறு அவர் சவால் விடுத்தார்.
    1
    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், ஸ்ரீரங்கம் தொகுதியில் தன்னை "காணவில்லை" என்று திமுகவினர் பரப்பும் அவதூறு பிரச்சாரத்திற்கு "கொஞ்சூண்டு ஜெலுசில் மருந்தை குடித்துவிட்டு வீட்டில் இருக்கலாம்" என்று காட்டமாக பதிலளித்தார். தனது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் திருச்சியைத் தங்கள் கோட்டை என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அது தளபதியின் கோட்டையாக மாறியதை ஏற்க முடியாமல், பொதுமக்கள் புகார் அளிப்பதாகக் கூறி திமுகவினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இது முற்றிலும் பொய்யான பிரச்சாரம் என்றும், மக்கள் இதனை நம்ப மாட்டார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு மாதமாக ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தனது எம்எல்ஏ அலுவலக அதிகாரிகள் மற்றும் கழகத் தோழர்கள் மூலம் உடனடியாகத் தீர்வு கண்டதற்கான ஆதாரங்களாகப் புகைப்படங்களையும் நன்றி கடிதங்களையும் அமைச்சர் சமர்ப்பித்தார். குடிநீர் தொட்டிகள் திறப்பது, கழிப்பறைகள் அமைப்பது உள்ளிட்ட பல மக்கள் பணிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் தனது அலுவலகத்தில் பராமரிக்கப்படும் அழைப்புப் பதிவு நோட்டைக் காட்டி அவர் மறுத்தார். தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் சீரமைப்புப் பணிகளிலும், திருச்சி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சீராய்வு கூட்டங்களை நடத்தியும் தான் செயல்பட்டு வருவதால், தொகுதிப் பணிகள் தடைபடாமல் நடைபெறுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் துறைசார்ந்த கேள்விகளுக்குப் பதிலாகத் தேவையற்ற கேள்விகளை எழுப்புவதாகவும், மாண்புமிகு முதலமைச்சரை ஒருமையில் பேசியும் கிண்டல் செய்தும் சட்டமன்றத்தின் மாண்பைக் கெடுப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் சாடினார். "மாற்றம் வேண்டும் என ஏமாற்றமே மிஞ்சியது" என்ற மு.க. ஸ்டாலின் அவர்களின் கூற்றை மறுத்த அவர், கடந்த ஐந்து ஆண்டுக்கால நிர்வாகச் சீர்கேட்டையும் பொருளாதாரச் சிக்கல்களையும் சரிசெய்ய கால அவகாசம் தேவை என்றும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஊழலை ஒழிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். மு.க. ஸ்டாலின் வீட்டிலிருந்து சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்க்க நேர்ந்ததாலேயே இந்த விமர்சனங்களை முன்வைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில், திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் செல்போன் தடை அமல்படுத்தப்படுவதாகவும், விரைவில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட வசதிகள் பெரிய கோயில்களில் முதல் கட்டமாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், துவங்கப்படாத ₹246 கோடி மதிப்பிலான திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அந்த நிதி பக்தர்கள் தங்கும் இடம், அன்னதானக் கூடங்கள், கழிப்பறைகள், குடிநீர், வாகன நிறுத்துமிட வசதிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், அதற்கான புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். காவிரி உபரி நீரை மாயாற்றிலிருந்து பொன்னணியாறு அணை மற்றும் கல்லணைக்குக் கொண்டுசெல்லும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் பேசி ஆய்வு அறிக்கை வந்தவுடன் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசென்று தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

இறுதியாக, மக்கள் தங்களை ஆதரித்து பாராட்டி வருவதாகவும், திருச்சி தளபதியின் கோட்டையாக மாறியுள்ளதாகவும், அடுத்த தேர்தலில் த.வே.க அனைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்தார். திமுகவினர் பொய்யான பிரச்சாரங்களை விடுத்து மக்கள் பணி செய்யுமாறு அவர் சவால் விடுத்தார்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் இன்று ஒரு பிரம்மாண்டமான சிலம்பாட்ட சாலைப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் சிலம்பக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த பேரணி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், சிலம்பப் பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
    1
    தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் இன்று ஒரு பிரம்மாண்டமான சிலம்பாட்ட சாலைப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் சிலம்பக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த பேரணி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், சிலம்பப் பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வயலூர் கிராமத்தில் இன்று ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் குளித்தலை கடம்பந்துறை ஆற்றில் புனித நீராடினர். தொடர்ந்து, அவர்கள் தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் ஏந்தி, மங்கள மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வயலூர் ஸ்ரீ காளியம்மன் கோவிலை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
    1
    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வயலூர் கிராமத்தில் இன்று ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் குளித்தலை கடம்பந்துறை ஆற்றில் புனித நீராடினர். தொடர்ந்து, அவர்கள் தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் ஏந்தி, மங்கள மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வயலூர் ஸ்ரீ காளியம்மன் கோவிலை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    15 hrs ago
  • திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலின் ராஜகோபுரம் வாயிலில், இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரை வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த வாகன நிறுத்தத்தால் பாதசாரிகள் சிரமப்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் இந்த அசௌகரியத்தைப் போக்குவரத்து காவலர்களும் மாநகராட்சி துறையும் கண்டுகொள்ளவில்லை. ஸ்ரீரங்கம் மாநகராட்சி துறை மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடனடியாக இந்தச் சிக்கலைச் சரிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தைப் பொதுமக்கள் ரங்கா மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
    3
    திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலின் ராஜகோபுரம் வாயிலில், இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரை வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த வாகன நிறுத்தத்தால் பாதசாரிகள் சிரமப்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

பொதுமக்களுக்கு ஏற்படும் இந்த அசௌகரியத்தைப் போக்குவரத்து காவலர்களும் மாநகராட்சி துறையும் கண்டுகொள்ளவில்லை. ஸ்ரீரங்கம் மாநகராட்சி துறை மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடனடியாக இந்தச் சிக்கலைச் சரிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தைப் பொதுமக்கள் ரங்கா மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
    user_Devan
    Devan
    ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல்லில் இன்று பெய்த மழையின் காரணமாக, திண்டுக்கல் மலைக்கோட்டையில் புதிதாக ஓர் அருவி உருவாகியுள்ளது. இந்த இயற்கைக் காட்சியை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
    1
    திண்டுக்கல்லில் இன்று பெய்த மழையின் காரணமாக, திண்டுக்கல் மலைக்கோட்டையில் புதிதாக ஓர் அருவி உருவாகியுள்ளது. இந்த இயற்கைக் காட்சியை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    7 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் நேற்று (ஜூன் 20) மாலை ஆனி ஊஞ்சல் திருவிழா காப்பு கட்டுகளுடன் கோலாகலமாக தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, ஆன்மிகச் சிறப்புடன் கொண்டாடப்படவுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற ஜூன் 29ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் மாலை முருகப் பெருமான் சிம்மாசன வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வருவார்.
    1
    மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் நேற்று (ஜூன் 20) மாலை ஆனி ஊஞ்சல் திருவிழா காப்பு கட்டுகளுடன் கோலாகலமாக தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, ஆன்மிகச் சிறப்புடன் கொண்டாடப்படவுள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற ஜூன் 29ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் மாலை முருகப் பெருமான் சிம்மாசன வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வருவார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    18 hrs ago
  • இந்திய நாட்டின் உயரிய விருதான 'கீர்த்தி சக்கரா' விருதைப் பெற்ற ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு அவரது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த இவர், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த போரில் தாக்குதலுக்கு உள்ளானார். அப்போது அவரது வாயில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்த நிலையிலும், தனது காயத்தைப் பொருட்படுத்தாமல் சண்டையிட்டு ஐந்து தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதோடு, தனது சக வீரர்களையும் காப்பாற்றினார். அவரது இந்த வீர தீர செயலைப் பாராட்டி, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு 'கீர்த்தி சக்கரா' விருதை வழங்கினார். இந்த நிலையில், விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் தேனி மாவட்டத்திற்குத் திரும்பியபோது, ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் சார்பில் பாராட்டு விழா மற்றும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில், முன்னாள் படை வீரர் நலச் சங்கம் மற்றும் தர்மாபுரி ஊர் பொதுமக்கள் இணைந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பின் ஒரு பகுதியாக, தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நாட்டின் உயரிய விருதைப் பெற்ற அவருக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
    1
    இந்திய நாட்டின் உயரிய விருதான 'கீர்த்தி சக்கரா' விருதைப் பெற்ற ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு அவரது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த இவர், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த போரில் தாக்குதலுக்கு உள்ளானார். அப்போது அவரது வாயில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்த நிலையிலும், தனது காயத்தைப் பொருட்படுத்தாமல் சண்டையிட்டு ஐந்து தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதோடு, தனது சக வீரர்களையும் காப்பாற்றினார்.

அவரது இந்த வீர தீர செயலைப் பாராட்டி, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு 'கீர்த்தி சக்கரா' விருதை வழங்கினார். இந்த நிலையில், விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் தேனி மாவட்டத்திற்குத் திரும்பியபோது, ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் சார்பில் பாராட்டு விழா மற்றும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில், முன்னாள் படை வீரர் நலச் சங்கம் மற்றும் தர்மாபுரி ஊர் பொதுமக்கள் இணைந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பின் ஒரு பகுதியாக, தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நாட்டின் உயரிய விருதைப் பெற்ற அவருக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக தனியார் திருமண மண்டபத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், வருகை புரிந்த அனைவருக்கும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டதுடன், டாக்டர் சிவப்பிரகாஷ் அவர்கள் யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்து ஆலோசனை வழங்கினார். பாஜக நகர தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி, மண்டல் பொதுச் செயலாளர் ராஜா, மண்டல் செயலாளர் பாபு, ஆரோக்கியசாமி, நகரத் துணைத் தலைவர் அழகர்சாமி, ஐ டி விங் நகரத் தலைவர் சூரிய பிரகாஷ், ராஜா, மணிவேல், கார்த்திக், கண்ணன், மணிவண்ணன் உள்ளிட்ட பல பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக தனியார் திருமண மண்டபத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், வருகை புரிந்த அனைவருக்கும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டதுடன், டாக்டர் சிவப்பிரகாஷ் அவர்கள் யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்து ஆலோசனை வழங்கினார். பாஜக நகர தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி, மண்டல் பொதுச் செயலாளர் ராஜா, மண்டல் செயலாளர் பாபு, ஆரோக்கியசாமி, நகரத் துணைத் தலைவர் அழகர்சாமி, ஐ டி விங் நகரத் தலைவர் சூரிய பிரகாஷ், ராஜா, மணிவேல், கார்த்திக், கண்ணன், மணிவண்ணன் உள்ளிட்ட பல பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.