ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்- ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி. தருமபுரி மாவட்டம் அரூர் பாஜக சார்பில் மோடி பொங்கல் மொரப்பூரில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பாஜகவின் கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார். இந்த பொங்கல் விழாவிற்கு வந்த நடிகை கஸ்தூரியை பாஜகவினர் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர். மேலும் பொங்கல் விழாவில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் நடிகை கஸ்தூரி குழுவினரோடு இணைந்து கும்மி ஆடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தணிக்கை குழு எந்த படத்திற்கு கட்டீப்பாடுகள் விதிக்கவில்லை. காங்கிரஸ், திமுகவினருக்கு நான் சொல்ல நினைக்கிறேன். அறநிலையத் துறையில் அரசு குறிக்கீடு, கோயில் நிர்வாகத்தில் அரசு குறுக்கீடு என தமிழ்நாட்டில் இருக்கிறதனால், மத்திய அரசும் எல்லாத் துறையிலும் தலையிடும் என்று நினைக்க வேண்டாம். மத்திய அரசில் எல்லாமே நியாயமான முறையில் நடக்கிறது. தணிக்கை துறை ஐஏஎஸ் அதிகாரி பாலமுரளி தலைமையில் நடைபெறுகிறது. அவர் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி இருப்பதில் யாரும் தலையிட முடியாது. திமுகவை பொறுத்தவரையில் எல்லா பிரச்சனைகளிலும் அவர்கள் நேரடியாக தலையிட மாட்டார்கள். என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். ஒரு புகார் எங்கிருந்து வருகிறது என்று தெரியாது ஆனால் அதனை ஆழ்ந்து பின் தொடர்ந்தால் அதன் உண்மை தன்மையை புரிய வரும். எப்பொழுதும் திமுக வெளிப்படையாக அதில் செயல்படாது. ஜனநாயகன் படம் வெளியிடாதது, காலதாமதம் ஆவது, பாஜகவுக்கு தான் நஷ்டம். இதில் திமுகவுக்கு தான் லாபம். நீதிமன்றம் செல்வது, லிஸ்டிலே இல்லாத ஒன்று. விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதில் ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும். இதனை சென்சாரிலேயே முடித்திருந்தால், இன்று திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கும். நான் இதனை நினைத்து வருத்தப்படுகிறேன். ஆதங்கப்படுகிறேன். நான் விஜய்யின் ரசிகையாக வெளிநாட்டிலிருந்து எல்லா படங்களையும் முதல் நாளை பார்த்திருக்கிறேன். காவலன் படத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது, அவரை பாதிக்கப்பட்டவராக சிம்பதியோடு பார்த்தோம். ஆனால் இப்போது அவர் கம்முனு (அமைதியாக) இருக்கிறார். இவரை பாதிக்கப்பட்டவராக பார்ப்பதா? இல்லை செயலிழந்தவராக பார்ப்பதா? பெராலிக்ஸ் (முடக்கு வாதம்) வந்தவர் போல இருக்கிறார். யார் இறந்தாலும் பேசுவதில்லை. 41 பேர் இறந்த பிறகு நான்கு நாள் கழித்து யோசித்து பேசுகிறார். அவர் படத்துக்கு ஒரு பிரச்சனை வந்தாலும், பேசாமல் இருக்கிறார். அங்கே டெல்லி போய் விதவிதமாக பேசியவர்கள், கூட்டத்தில் பேசியவர்கள் எல்லாம், எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சென்சார் நீதிமன்றமானால் கூட, எதாவது தெரியனுமில்ல. காணவில்லை அறிவிப்பு தான் போடனும். இப்ப எனக்கே ஒரு சந்தேகம் வருகிறது. உங்க பிரச்சனைக்கு நீங்க சும்மா இருக்கீங்க, நாளைக்கு எந்த பிரச்சினைக்கு என்ன பண்ணுவீங்க. உங்களுக்காக, உங்க பிரச்சனைக்காக பாஜக அதிமுக தலைவர்கள் பேசுகிறார்கள். நீங்க அப்ப கூட பேசவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலை மென் வைத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் போராட்டமாகவே இருக்கிறது. அரசு ஆசிரியர்கள், செவிலியர்கள் என எல்லோரும் போராடி வருகின்றனர். செவிலியர்களுக்கு ஒரு சப்பை கட்டு செய்து, 500 ஆர்டர் மட்டும் கொடுத்துள்ளனர். இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஜாக்டோ ஜியோ ஆறாம் தேதி போராட்டத்தை சரி கட்டி உள்ளார்கள். ஆனால் பழைய பென்சன் திட்டத்தை கொடுக்கவில்லை. இது எப்ப திரும்பும் வெடிக்க போவது என்று தெரியவில்லை. தற்போது ஜனவரி மாதம் பிறந்ததிலிருந்து பத்து லட்சம் மடிக்கணினி, மகளிர் உதவி தொகை என பல திட்டங்களை கொடுத்து வருகிறார் முதலமைச்சர். 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சொல்கிறார்கள். 99 வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அங்கே கணக்கில் வீக் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் 504 வாக்குறுதியில் 99 சதவீதம் என்றால், ஏறத்தாழ 499 வாக்குறுதிகள். இது நூறு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. 404 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்பதை தான், நிறைவேற்றியதாக மாற்றி சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். நானும் தேடித்தேடி பார்க்கிறேன் என கஸ்தூரி தெரிவித்தார்.

- நல்லம்பள்ளியில் இடைவிடாமல் பொழியும் சாரல் மழை தர்மபுரி மாவட்டம் பல்வேறு பகுதியில் கடந்த ஒரு சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது ஒரு சில இடங்களில் சாரல் மழை பொழிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நல்லம்பள்ளி லளிகம், கோவிலூர், பாலக்கோடு புலிக்கரை கடமடை என பல்வேறு பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் சாரல் மலையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது இதனால் கடும் குளிர் நிலவுகிறது1
- உதகை அருகே முதுமலை வனப்பகுதிற்குட்பட்ட வாழைத் தோட்டம் பகுதியில் சாலையின் நடுவே கம்பீரமாக நின்ற காட்டு யானை... சுமார் ஒரு மணி நேரமாக நின்றதால் போக்குவரத்து பாதிப்பு... உதகை அருகே முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதி சாலையிலுள்ள வாழைத் தோட்டம் - மசினகுடி சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையின் நடுவே கம்பீரமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றது. இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன். இதனால் வாழைத்தோட்டம் - மசினகுடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம், திமுகவுக்குத்தான் லாபம்-விஜய் தரப்பினர் யாரும் பேசாமல் இருப்பதால், காணவில்லை அறிவிப்புத்தான் கொடுக்க வேண்டும் என மொரப்பூரில் பாஜக நிர்வாகி நடிகை கஸ்தூரி பேட்டி.1
- கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் அவர்களின் 94 வது நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர் ஈஸ்வரன்,திமுக முன்னாள் நகர்மன்ற தலைவரும் நகர செயலாளருமான ஆர் நடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் உள்ளிட்டவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரன் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆதவன் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றி நினைவேந்தல் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.2
- கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்2
- தாராபுரத்தை சேர்ந்த சமூக சேவகருக்கு சேவை நாயகன் விருது ஜன.9 கோவையில் பிரமாண்ட ஹோட்டலில் சாதனையாளர்களுக்கு (வாகை) விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் பிரபல திரைபட நடிகர் வையாபுரி அவர்கள் கலந்து கொண்டு ஒவ் ஒரு துறையிலும் சாதித்தவர்களுக்கு பாராட்டி அவர்களை கௌரிவித்து அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது விழாவில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த சமூக சேவகரும் தினதளம் பத்திரிக்கை நிருபருமான ரஜினிகுமார் அவர்களின் 15 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி 2026 ஆம் ஆண்டின் சேவை நாயகன் விருது வழங்கப்பட்டது அவர் இதற்கு முன் சமூக சேவகர் சேவை செம்மல் அண்ணல் அம்பேத்கர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தருமபுரி நகரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10வயதிற்குட்பட்ட ஆண் பெண் பிள்ளைகளுக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் கணக்கு தொடக்கம் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பெற்றோரிடம் வழங்கினார். தருமபுரி நகருக்குட்பட்ட 33வார்டுகளை சேர்ந்த 601 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 10வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு கழக மருத்துவர் அணி இணை செயலாளர் அசோகன் தன் சொந்த பணத்திலிருந்து தபால் அலுவலகத்தில் 601 பிள்ளைகளுக்கு ரூபாய் 500 வீதம் செல்வ மகன் சேமிப்பு திட்டம் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் என மொத்தம் 601 பிள்ளைகளுக்கு கணக்கினை தொடங்கினார்.அதனையடுத்து இன்று தருமபுரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெற்றோரிடம் கணக்கு புத்தகத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாநில விவசாயப்பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன்,பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1