Shuru
Apke Nagar Ki App…
தேவகோட்டை வட்டானம் ரோடு பெரிய பள்ளிவாசலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப சிதம்பரம் கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டானம் ரோடு பெரிய பள்ளிவாசலில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம், ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியின் 'கை' சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின் போது ஜமாத் தலைவர் மஹபூப் பாட்சா,மற்றும் நிர்வாகிகள்,ஜமாத்தார்கள் , கூட்டணி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Devakottaigani news
தேவகோட்டை வட்டானம் ரோடு பெரிய பள்ளிவாசலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப சிதம்பரம் கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டானம் ரோடு பெரிய பள்ளிவாசலில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம், ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியின் 'கை' சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின் போது ஜமாத் தலைவர் மஹபூப் பாட்சா,மற்றும் நிர்வாகிகள்,ஜமாத்தார்கள் , கூட்டணி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, பழைய கோட்டை கிராமம் புறத்தாகுடியை சேர்ந்த அந்தோணி என்பவரின் மகள் ஜாஸ்மின் அந்தோணி பிரியா (40). இவர் பிறந்ததிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தந்தை அந்தோணி கடந்த 2000 ஆம் ஆண்டும், தாயார் ஆரோக்கியமேரி கடந்த 2016 ஆம் ஆண்டும் இறந்துவிட்ட நிலையில், அவரின் பெரியப்பா மகனான ஜான்பால்ராஜ் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று 20.04.2026 மதியம் சுமார் 15:30 மணியளவில் தனது வீட்டின் பின்பக்கம் குளிக்க செல்லும் போது, சுமார் 2½ அடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து விட்டார். இதை அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் சசிகலா மற்றும் மருத்துவர் அய்யா ராமதாஸ், ஸ்ரீ காந்திமதி அறிவித்த 120 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி இன்று பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில், வே. மலைக்கோட்டை தர்மா தலைமையில் பால்குடம் எடுத்து, மாவிளக்கு இட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.1
- *நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தவன் இல்லை. இந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானமும் வேதனையும் எல்லோருக்குமே நன்றி தெரியும். அவையெல்லாம் கடந்து வந்து இன்று மீண்டும் நான்காவது முறையாக உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் என்று கூறி சமுதாய மக்களிடையே வாக்கு சேகரித்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் சமுதாய சங்கங்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் அனைத்து செட்டியார் பேரவை சங்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அவர் தான் போடிநாயக்கனூருக்கு 15 ஆண்டுகளாக செய்த பணிகளை கூறி வாக்கு சேகரித்தார். நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததில்லை மேலும் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானங்களும் வேதனைகளும் எல்லோரும் அறிவார்கள். அனைத்தையும் கடந்து வந்து இன்று திமுக ஸ்டாலின் அவர்களின் ஆதரவோடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன் தாங்கள் எனக்கு வாக்குகள் வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் போடிநாயக்கனூரில் கடந்த 1957 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவரும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு மலைச்சாலையை உருவாக்கி தந்த வருமான சுப்புராஜிற்கு மதுரை மையப்பகுதியில் சிலையை அமைத்து தரவும் நம் தேச பிதா உத்தமர் மகாத்மா காந்திக்கு போடிநாயக்கனூரில் சிலை இல்லாத நிலையில் அவருக்கும் சிலை அமைத்து தரவும் உரிய ஏற்பாடுகள் செய்வேன் என்றும் உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- Post by பெரியசாமி1
- ஒளியும்_Vs_இருளும் !!! ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டிய அரசு !!! #publicintrest #publicresponse1
- தூத்துக்குடி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி கடற்கரை பூங்காவில் 'தேர்தல் திருவிழா' நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தத் தனித்துவமான முயற்சியைப் பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினர்.1
- திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அய்யலூரில் இன்று அதிமுக வேட்பாளர் பரமசிவத்திற்கு பொதுமக்கள் பேராதரவு கொடுத்து அவரை வரவேற்று மாலை அணிவித்து மலர்கள் தூவி சிறப்பு செய்தனர். இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் டிசி ராஜமோகன் தலைமையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் பத்மநாதன் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் இதில் போடி வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை பகுதியில் இருந்து , திருவள்ளுவர் சிலை, காவல் நிலையம், தேவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து தென்னந்தோப்பு சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்1
- #மக்கள்_vs_நான் !!! உங்கள் ஆதரவு உண்மைக்காகவா பொய்க்காகவா !!! #publicintrest #publicresponse #tamil1