திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறை சிபிஐ (எம்எல்) கட்சியின் சார்பில் மணப்பாறை ரயில் நிலைய அடிப்படை வசதி குறித்தும், பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் நகர செயலாளர் P.பாலு தலைமையில் மாவட்ட செயலாளர். வழக்கறிஞர். செ.ராஜ்குமார் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு ரயில் நிலையத்தில் 7.1.2026 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று ரயில்வே நிர்வாக குழு உறுப்பினரும், CPI(ML) கட்சியின் பீகார் மாநிலம் கராகட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுதாமா பிரசாத் எம்பியை சந்தித்து மணப்பாறை சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் கூடுதல் ரயில் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் , ரயில்வே தொழிலாளர்கள் குடியிருக்க கூடிய ரயில் நிர்வாக குடியிருப்பு வீடுகள் மழை காலங்களில் வீட்டின் மேற்கூரையின் வழியே மழைநீர் வீட்டிற்குள் வருவதாகவும், குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் இல்லை என்றும், ரயில்வே நிர்வாகம் தற்பொழுது தொழிலாளர்களை 12 மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாகவும் , மணப்பாறை ரயில் நிலைய மேம்பாட்டிற்காக RS.10.5 கோடி செலவு செய்யப்பட்டிருந்தாலும் அடிப்படை வசதிகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாமல் பயணிகளுக்கு குடிப்பதற்கு குடிநீர் கூட இல்லாமல், பயணிகளையும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல்துறை யாரும் இல்லாமலும் செயல்படுகிறது என உள்ளிட்ட பல கோரிக்கைகளை மனுவில் வழங்கினர். இம்மனுவை பெற்றுக்கொண்டநாடாளுமன்ற உறுப்பினர் சுதாமா பிரசாத் MP ரயில்வே நிர்வாக குழுவிலும், நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதி அளித்துள்ளார்.
திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறை சிபிஐ (எம்எல்) கட்சியின் சார்பில் மணப்பாறை ரயில் நிலைய அடிப்படை வசதி குறித்தும், பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் நகர செயலாளர் P.பாலு தலைமையில் மாவட்ட செயலாளர். வழக்கறிஞர். செ.ராஜ்குமார் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு ரயில் நிலையத்தில் 7.1.2026 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று
ரயில்வே நிர்வாக குழு உறுப்பினரும், CPI(ML) கட்சியின் பீகார் மாநிலம் கராகட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுதாமா பிரசாத் எம்பியை சந்தித்து மணப்பாறை சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் கூடுதல் ரயில் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் , ரயில்வே தொழிலாளர்கள் குடியிருக்க கூடிய ரயில் நிர்வாக குடியிருப்பு வீடுகள்
மழை காலங்களில் வீட்டின் மேற்கூரையின் வழியே மழைநீர் வீட்டிற்குள் வருவதாகவும், குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் இல்லை என்றும், ரயில்வே நிர்வாகம் தற்பொழுது தொழிலாளர்களை 12 மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாகவும் , மணப்பாறை ரயில் நிலைய மேம்பாட்டிற்காக RS.10.5 கோடி செலவு செய்யப்பட்டிருந்தாலும் அடிப்படை வசதிகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாமல்
பயணிகளுக்கு குடிப்பதற்கு குடிநீர் கூட இல்லாமல், பயணிகளையும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல்துறை யாரும் இல்லாமலும் செயல்படுகிறது என உள்ளிட்ட பல கோரிக்கைகளை மனுவில் வழங்கினர். இம்மனுவை பெற்றுக்கொண்டநாடாளுமன்ற உறுப்பினர் சுதாமா பிரசாத் MP ரயில்வே நிர்வாக குழுவிலும், நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதி அளித்துள்ளார்.
- புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணியில் இருந்து தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது, லாரியை அதன் டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் மன்னார் குடியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பஸ் டிரைவர் சிக்கி கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்2
- ஜல்லிக்கட்டு காளைக்கு சிறப்பு பூஜை! புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் தொடங்கியுள்ள நிலையில் அந்த காளைக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்று மாலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டு படையல் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான காளை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கப்ட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் ஆலயத்தில் இன்று மார்கழி மாதத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் எஸ். காமாட்சிபுரம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இருந்து 200 பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜையானது குழந்தைகளின் கல்வி, மங்களம் பெருகவும், ஆரோக்கியம், செல்வம் பெருகும் . தீமைகள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். தீபத்தை ஏற்றி முதலில் கணபதி பூஜை பின்னர் குலதெய்வம், முருகப்பெருமானை மனதால் நினைத்து வழிபட்டார்கள். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் பாதாள செம்பு முருகன் திருக்கோவில் சார்பாக இந்த வருடத்திற்கான காலண்டர் மற்றும் முருகனின் புகைப்படம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.1
- தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது1
- திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 9 பேர் கைது திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் பிரதீப் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி(35), தர்மராஜ்(52), சேவியர்ஆல்பர்ட்(22), மணிகண்டன்(19) யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ்(60), ஜான்பீட்டர்(42), மைக்கேல்ராஜ்(31), மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ்(54), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின்(23) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.3
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக குண்டடம் ஒன்றியம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதன் பின்னர் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்1
- பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர் நெம்மகோட்டை நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை சார்பில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.3000 ரொக்கத்தொகை வழங்கினார்.1