Shuru
Apke Nagar Ki App…
சின்னமனூர் நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்: சின்னமனூர் உழவர் சந்தையில் (ஜன.11) கத்தரி ரூ.15, தக்காளி ரூ.34/32, வெண்டை ரூ.60, அவரை ரூ.30, கொத்தவரை ரூ.40, சுரை ரூ.10, புடலை ரூ.20, பீர்க்கை ரூ.48, பூசணி ரூ.20-12, மிளகாய் ரூ.42, சேனை ரூ.30, கருணை ரூ.40, உள்ளி ரூ.45, பல்லாரி ரூ.32, பீட்ரூட் ரூ.20, நூல்கோல் ரூ.25, முள்ளங்கி ரூ.16/14, பீன்ஸ் ரூ.64-50, கோஸ் ரூ.25, கேரட் ரூ.44, எலுமிச்சை ரூ.40, உருளை ரூ.44/28, சௌசௌ ரூ.18 க்கு விற்கப்படுகிறது.
Theni Godwin
சின்னமனூர் நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்: சின்னமனூர் உழவர் சந்தையில் (ஜன.11) கத்தரி ரூ.15, தக்காளி ரூ.34/32, வெண்டை ரூ.60, அவரை ரூ.30, கொத்தவரை ரூ.40, சுரை ரூ.10, புடலை ரூ.20, பீர்க்கை ரூ.48, பூசணி ரூ.20-12, மிளகாய் ரூ.42, சேனை ரூ.30, கருணை ரூ.40, உள்ளி ரூ.45, பல்லாரி ரூ.32, பீட்ரூட் ரூ.20, நூல்கோல் ரூ.25, முள்ளங்கி ரூ.16/14, பீன்ஸ் ரூ.64-50, கோஸ் ரூ.25, கேரட் ரூ.44, எலுமிச்சை ரூ.40, உருளை ரூ.44/28, சௌசௌ ரூ.18 க்கு விற்கப்படுகிறது.
More news from தமிழ்நாடு and nearby areas
- நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டி நிறைந்து வழிந்து ஓடும் சோத்துப்பாறை அணை. அணை நிறைந்து மீண்டும் குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடந்த 20 நாட்களாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 125 அடியாக குறைந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 123 அடியிலிருந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி அணைக்கு வரும் நீர் அப்படியே வழிந்து ஓடுகிறது. தற்பொழுது அணையின் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியாக உள்ள நிலையில் அனைத்து நீர் வரத்து 25 கனஅடியாகவும் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 25 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடி உள்ளது. மீண்டும் அணைக்கு நீர் வரத்து தொடங்கி சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அணையிலிருந்து நீர் வழிந்தோடி கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- ஆத்தூர்: அய்யம்பாளையத்தல் இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகள் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது, இதில் மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கோவை, தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன பரிசுகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில் குமார் வழங்கினார்1
- திண்டுக்கல் 12/01/26 வானிலை மேகமூட்டத்துடன் லேசான வெப்பத்துடன் 11.50க்கு மலை பெய்யத் தொடங்கியது சுமார் அரை மணி நேரம் அளவான மலை பெய்தது1
- வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து மகாலட்சுமிபுரம் ஐயர் மடம் குறும்பபட்டி இந்த பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தின் மின் மாற்றி பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்மாற்றியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ML வேடசந்தூர் ஒன்றிய குழு சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகிறது1
- தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் இன்று காட்டுயானைகள் கூட்டமாக வந்தது அதனை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சத்தமிட்டு விரட்டினர்1
- திருப்பூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து1
- அசாத்திய திறமையை பாருங்கள்.1
- தேனி அருகே பிறந்த பச்சிளம் குழந்தையை தொப்புள் கொடியோடு சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள். தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டிகௌமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது தேனி புறவழி சாலையில் இருந்து வீரபாண்டி கோவிலுக்கு செல்லும் சாலையில் சுமார் 10 மீட்டர் தொலைவில் பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியோடு கிடப்பதை அவ்வழியாக சாலையில் சென்ற நபர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலையில் பச்சிளம் குழந்தையை வீசி சென்றவர்கள் யார் என்ற விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1