கடலூர், மாண்புமிகு அமைச்சர்கள் மாணவ,மாணவிளுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று காணொளி காட்சி வாயிலாக கம்மியம்பேட்டை புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு* நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர்கள் முன்னிலையில் பள்ளி மாணவமாணவிளுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, தேசிய குடற்புழு நீக்க தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் . சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலையில் வழங்கி தொடங்கி வைத்தனர். மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது. போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்பதே தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய நோக்கமாகும். போதைப் பழக்கத்திற்கு எதிராக பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மது அருத்துதலுக்கு மக்கள் அடிமையாகாமல் இருக்கவும். மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்,போலி மதுபாணம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி. பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி,நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்' என்ற போதைப் பழக்கத்திற்கு எதிரா உறுதிமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக சமூக விழிப்புணர்வு வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் போதைப் பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஒரு பகுதியாக போதைப் பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் பகுதியில் சட்டவிரோதமான முறையில் போலி மதுபானங்கள். போதைப்பொருட்கள், புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்தல். விற்பனை செய்தல் போன்ற நிகழ்வு குறித்து உங்கள் கவனத்திற்கு தெரியவந்தால் ஆசிரியர், தலைமையாசிரியர்,காவல் துறையினர், ஆகியோர்களுக்கு தங்கள் பெயரைக்கூட குறிப்பிடாமல் தகவல் தெரிவிக்கலாம் என மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் போதைப் பழக்கத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்டையிலே இன்றைய தினம் போதைப் பொருள் இல்லா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் நல்ல முறையில் கல்வி பயின்று எதிர்காலத்தில் உயர்பதவிகளை அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் புதுமைப்பெண் திட்டம். தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வியில் நல்ல மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதும் என்று எண்ணமல் அவர்களுக்கு கலாச்சாரம். ஒழுக்கம் முதலிய நற்பண்புகளையும் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். மேலும் குழந்தைகள் யாருடன் பழுகுகிறார்கள் என்பது குறித்தும், அவர்கள் அன்றாட நடவடிக்கைகளையும் கண்காணித்திட வேண்டும். போதைப் பழக்கத்திற்கு ஆட்படாமல் இருக்க நல்ல அறிவுரைகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும். உங்கள் குழந்தையின் எதிர்காலம் நீங்கள் அவர்களை வளர்க்கும் வளர்ப்பினை பொறுத்தே அமையும். போதைப் பழக்கத்திற்கு எதிராக அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் துணை நிற்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் தங்கள் வாழ்வை மேம்படுத்திட வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவு இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிப்படைவதை தடுக்கும் நோக்கில் மாவட்டத்தில் அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள். பெண்கள் என மொத்தம் 914,851 நபர்களுக்கு இன்றைய தினம் குடற்புழு நீக்க மாத்திரைகள் (அல்பெண்ட்சோல்) வழங்கப்படவுள்ளது என மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணைமேயர் பா.தாமரைச்செல்வன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்,மாநகராட்சி ஆணையாளர் மரு.அனு மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பொற்கொடி உதவி ஆணையாளர் (கலால்) சண்முகவள்ளி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

- Post by Manoj Sriveerapathiran1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சி மஹாலட்சுமிபுரத்தில் கடந்த 15 வருடமாக குடிதண்ணீர் இன்றி சிரமம் அடைந்து வந்தனர் அங்கு மேல் நிலைத் தொட்டி கட்டுவதற்கும் இடமில்லை தற்போது புதியதாக போடப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவில் காவிரி கூட்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டி பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்தத் தொட்டி பணியை விரைந்து முடித்து பொது மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.1
- Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்1
- இரவின் மடியில்.1
- Post by Santhosh Santhosh3
- Romance ❤️🫶1
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1