ராமரை பற்றி அவதூறு கூறிய வைரமுத்து!! பாஜக கண்டனம்!! திகைத்தல் என்ற சொல்லுக்குக்கூட பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என சிலர் அழைப்பது வியப்புக்குரியது.* *கடவுளான ராமர் பற்றிய அவதுாறு பேசிய வைரமுத்துவுக்கு பா.ஜ., கண்டனம்* "சென்னை கம்பன் விழாவில், ஹிந்துக்களின் தெய்வமான ராமரை புத்தி சுவாதீனமில்லாதவர் என குறிப்பிட்டு பேசிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும், " என, தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சென்னையில் சமீபத்தில் ஆழ்வார் ஆய்வு மய்யம் சார்பில், கவிஞர் வைர முத்துவுக்கு கம்பன் விருது அளிக்கப்பட்டது. அப்போது பேசிய வைரமுத்து, ஹிந்து கடவுளான ராமர் குறித்து தவறான கருத்துக்களை கூறியுள்ளார். 'திகைத்தனை போலும் செய்கை' என கம்பரின் வரிகளை குறிப்பிட்டு பேசிய வைரமுத்து, 'திகைத்தல் என்ற வார்த்தைக்கு, புத்தி சுவாதீனமற்றவர் என்று பொருள். அதனால், புத்தி சுவாதீனமின்றி வாலியை கொன்று விட்டார் ராமர் என கூறி, ராமன் என்ற குற்றவாளியை காப்பாற்ற கம்பர் முயன்றிருக் கிறார். இந்திய தண்டனைவியல் சட்டம் 84ன்படி, புத்திசுவாதீனம் அற்றவர் செய்கிற குற்றத்துக்கு தண்டனை இல்லை' என்று கூறியுள்ளார். திகைத்தல் என்ற சொல்லுக்கு புத்திசுவாதீனம் அற்றவர் என்ற பொருளை, புத்தியுள்ள யாரும் சொல்ல மாட்டார்கள். திகைத்தல் என்றால், வியப்படைதல், தடுமாறுதல், மயங்குதல் என்றே பொருள். வேண்டுமென்றே ராமரை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற வன்மத்தோடு வைரமுத்து அவதூறாக பேசியுள்ளார். திகைத்தல் என்ற சொல்லுக்குக்கூட பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என சிலர் அழைப்பது திகைப்புக்குரியது. சோழ மாமன்னர்களின் முன்னோர் ராமர் என சோழர்கால செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அதனால், ராமரை திட்டமிட்டு விமர்சித்த வைரமுத்து, தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். இவ்வாறு அஸ்வத்தாமன் கூறியுள்ளார்.
ராமரை பற்றி அவதூறு கூறிய வைரமுத்து!! பாஜக கண்டனம்!! திகைத்தல் என்ற சொல்லுக்குக்கூட பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என சிலர் அழைப்பது வியப்புக்குரியது.* *கடவுளான ராமர் பற்றிய அவதுாறு பேசிய வைரமுத்துவுக்கு பா.ஜ., கண்டனம்* "சென்னை கம்பன் விழாவில், ஹிந்துக்களின் தெய்வமான ராமரை புத்தி சுவாதீனமில்லாதவர் என குறிப்பிட்டு பேசிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும், " என, தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சென்னையில் சமீபத்தில் ஆழ்வார் ஆய்வு மய்யம் சார்பில், கவிஞர் வைர முத்துவுக்கு கம்பன் விருது அளிக்கப்பட்டது. அப்போது பேசிய வைரமுத்து, ஹிந்து கடவுளான ராமர் குறித்து தவறான கருத்துக்களை கூறியுள்ளார். 'திகைத்தனை போலும் செய்கை' என கம்பரின் வரிகளை குறிப்பிட்டு பேசிய வைரமுத்து, 'திகைத்தல் என்ற வார்த்தைக்கு, புத்தி சுவாதீனமற்றவர் என்று பொருள்.
அதனால், புத்தி சுவாதீனமின்றி வாலியை கொன்று விட்டார் ராமர் என கூறி, ராமன் என்ற குற்றவாளியை காப்பாற்ற கம்பர் முயன்றிருக் கிறார். இந்திய தண்டனைவியல் சட்டம் 84ன்படி, புத்திசுவாதீனம் அற்றவர் செய்கிற குற்றத்துக்கு தண்டனை இல்லை' என்று கூறியுள்ளார். திகைத்தல் என்ற சொல்லுக்கு புத்திசுவாதீனம் அற்றவர் என்ற பொருளை, புத்தியுள்ள யாரும் சொல்ல மாட்டார்கள். திகைத்தல் என்றால், வியப்படைதல், தடுமாறுதல், மயங்குதல் என்றே பொருள். வேண்டுமென்றே ராமரை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற வன்மத்தோடு வைரமுத்து அவதூறாக பேசியுள்ளார். திகைத்தல் என்ற சொல்லுக்குக்கூட பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என சிலர் அழைப்பது திகைப்புக்குரியது. சோழ மாமன்னர்களின் முன்னோர் ராமர் என சோழர்கால செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அதனால், ராமரை திட்டமிட்டு விமர்சித்த வைரமுத்து, தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். இவ்வாறு அஸ்வத்தாமன் கூறியுள்ளார்.
- வீரன் அழகு முத்துகோன் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் இரட்டை மாட்டு வண்டி போட்டி.1
- *வணக்கம் கழக உடன்பிறப்புகளே* 🖤❤️1
- Post by N balu Nbalu1
- திருச்செந்தூர் திருநெல்வேலி நெடுஞ்சாலை ஆழ்வார்திருநகரி பேரூராட்சி திருக்கோளூர் ஊராட்சி கக்கன் ஜி நகர் அருகில் எட்டு மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது. அரசு அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி அவ்வழியாக பயணிக்கின்றனர்.இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க தேசிய முற்போக்கு திராவிட கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.1
- Post by டேவிட் அந்தோனி1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அருள்முருகன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது இந்த விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் அவர்களுக்கு முன்னாள் பீமாண்ட பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் விழாக்குழுவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.1
- Romance🤩1
- கோவையில் உள்ள செம்மொழி பூங்காவா இது பாருங்கள்.1
- *பெருந்தலைவர் காமராஜர் அவர்களை பற்றி அவதூர் பரப்பிய முத்தார் அவனை கைது செய்யாமல் அவனுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் நாடார் சமுதாயத்தின் ஒரு வாக்குகளும் கிடைக்காது என்று பெருந்தலைவர் மக்கள் சங்கம் நிறுவனத் தலைவர் S. P. மாரியப்பன் நாடார்1