logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் குப்பைகளை நான்கு வகையாக பிரித்து வழங்க ஆணையர் உத்தரவு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளையும் கட்டாயம் நான்கு வகையாக பிரிக்க வேண்டும் உணவுப் பொருட்கள் காய்கறி மற்றும் பழக்கழிவுகள் ஆகிய மக்கும் குப்பைகளை ஒன்றாகவும் பிளாஸ்டிக் கண்ணாடி மற்றும் உலோகம் சார்ந்த பொருட்கள் உள்ளிட்ட மக்காத குப்பைகளை ஒன்றாகவும் பிரிக்க வேண்டும் ஆபத்தான மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த வீட்டு உபயோக ரசாயன கழிவுகளை தனியாகவும் பயன்படுத்தப்படாத செல்போன்கள் மின்கலங்கள் மற்றும் பழுதான மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட மின்னணு கழிவுகளை தனியாகவும் பிரிக்க வேண்டும் தரம் பிரிக்கப்பட்ட இந்த குப்பைகளை வீடுகளுக்கு தேடி வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் முறையாக வழங்க வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார்

46 min ago
user_Sabarees
Sabarees
அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
46 min ago
e522e40d-ddf5-461c-92ff-75db1deef25d

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் குப்பைகளை நான்கு வகையாக பிரித்து வழங்க ஆணையர் உத்தரவு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளையும் கட்டாயம் நான்கு வகையாக பிரிக்க வேண்டும் உணவுப் பொருட்கள் காய்கறி மற்றும் பழக்கழிவுகள் ஆகிய மக்கும் குப்பைகளை ஒன்றாகவும் பிளாஸ்டிக் கண்ணாடி மற்றும் உலோகம் சார்ந்த பொருட்கள் உள்ளிட்ட மக்காத குப்பைகளை ஒன்றாகவும் பிரிக்க வேண்டும் ஆபத்தான மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த வீட்டு உபயோக ரசாயன கழிவுகளை தனியாகவும் பயன்படுத்தப்படாத செல்போன்கள் மின்கலங்கள் மற்றும் பழுதான மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட மின்னணு கழிவுகளை தனியாகவும் பிரிக்க வேண்டும் தரம் பிரிக்கப்பட்ட இந்த குப்பைகளை வீடுகளுக்கு தேடி வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் முறையாக வழங்க வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • விழிப்புணர்வு பதிவு அனைவரும் பாருங்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகிறேன்.
    1
    விழிப்புணர்வு பதிவு அனைவரும் பாருங்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகிறேன்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    54 min ago
  • தூத்துக்குடி வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க புத்தகக் கண்காட்சி தூத்துக்குடியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களின் வாசிப்புத் திறனை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது. 25 அரங்குலுடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தக கண்காட்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் தொடங்கி வைத்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். 11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அரசியல் இலக்கியம் கதைகள் கவிதைகள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன இந்த புத்தக கண்காட்சியின் போது பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
    1
    தூத்துக்குடி  வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க புத்தகக் கண்காட்சி 
தூத்துக்குடியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களின் வாசிப்புத் திறனை அதிகப்படுத்தும் வகையில்  தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது.
25 அரங்குலுடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தக கண்காட்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் தொடங்கி வைத்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர்.
11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அரசியல் இலக்கியம் கதைகள் கவிதைகள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன இந்த புத்தக கண்காட்சியின் போது பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • *தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பொய்கை ஊராட்சி கோலாண்டனூர் 7,வது வார்டு ஊராட்சி அலுவலகத்திற்கு கீழ்புரம் ஒரு‌‌ வருடத்திற்கு முன் போடப்பட்ட புதிய சிமிண்ட் சாலையில் வாறுகாலில் அமைக்காததால் வீடுகளில் உபயோகப்படுத்தும் கழிவுநீரை பைப்பு மூலம் பொது தெரிவில் விடுவதனால் சாலை பழுதாகுவதோடு சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள், மற்றும் புளுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற விசக்காய்சல் பரவி வருவதாகவும் மேலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்க்கு விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்ட நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    *தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பொய்கை ஊராட்சி கோலாண்டனூர் 7,வது வார்டு ஊராட்சி அலுவலகத்திற்கு கீழ்புரம் ஒரு‌‌ வருடத்திற்கு முன் போடப்பட்ட புதிய சிமிண்ட் சாலையில் வாறுகாலில் அமைக்காததால் வீடுகளில் உபயோகப்படுத்தும் கழிவுநீரை பைப்பு மூலம் பொது தெரிவில் விடுவதனால் சாலை பழுதாகுவதோடு சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள், மற்றும் புளுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற விசக்காய்சல் பரவி வருவதாகவும் மேலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்க்கு விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்ட நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • திருச்செந்தூர் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ. 1.51 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மீன்வளத்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாம்பரையில் கடம்பா குளம் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை உள்ளது. இங்கு உரிமம் புதுப்பித்தல், மீன் பங்கு வைத்தல் உள்ளிட்டவை நடந்து வருகிறது. இங்கு தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பால்துரை தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.அதனை தொடர்ந்து திருச்செந்தூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரண்டராமன், உதவி ஆய்வாளர் சேந்தராஜன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்து விசாரணை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கணக்கில் வராத லஞ்ச பணமா என்று விசாரணை நடத்தினர்.
    1
    திருச்செந்தூர் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ. 1.51 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மீன்வளத்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாம்பரையில் கடம்பா குளம் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை உள்ளது. இங்கு உரிமம் புதுப்பித்தல், மீன் பங்கு வைத்தல் உள்ளிட்டவை நடந்து வருகிறது. இங்கு தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பால்துரை தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.அதனை தொடர்ந்து திருச்செந்தூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரண்டராமன், உதவி ஆய்வாளர் சேந்தராஜன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்து விசாரணை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கணக்கில் வராத லஞ்ச பணமா என்று விசாரணை நடத்தினர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK
    1
    RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse,
RR AARI WORK
    user_RR AARI WORK
    RR AARI WORK
    Tailor சிவகாசி, விருதுநகர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் இன்று மதியத்திற்கு மேல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன்(கிராம ஊராட்சி),உஷா(வட்டார ஊராட்சி) ஆகியோர் அறைகள் மற்றும் மேலாளர்,உதவியாளர்கள் ஆகிய அறைகளில் சோதனை நடத்தினார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் மகேஷ்வரனிடம் இருந்த ரூபாய் 3000 பணம் ரெக்க மாக கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் மகேஷ்வரன் வங்கி கணக்கிற்கு Gpay மூலம் 4 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
    1
    சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் இன்று மதியத்திற்கு மேல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன்(கிராம ஊராட்சி),உஷா(வட்டார ஊராட்சி) ஆகியோர் அறைகள் மற்றும் மேலாளர்,உதவியாளர்கள் ஆகிய அறைகளில் சோதனை நடத்தினார்கள்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் மகேஷ்வரனிடம் 
இருந்த ரூபாய் 3000 பணம் ரெக்க மாக கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் மகேஷ்வரன் வங்கி கணக்கிற்கு  Gpay மூலம் 4 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    14 min ago
  • மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தண்ணீருக்கு தவிக்கும் கிராம மக்கள் ஒட்டப்பிடாரம் தாலுகாவை சேர்ந்தது மாப்பிள்ளை யூரனி.. இங்கு தற்போது குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பைப் லைன் புதியதாக பதிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் தற்போது அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது அதுபோக மங்களக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து மாப்பிள்ளை யூரணிக்கு வரும் குடிநீர் பைப் லைன் 18 லட்சம் தண்ணீர் வரக் கூடிய அளவுக்கு தான் பைப்லைன் பதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது கடந்த திமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் மாப்பிள்ளையூரனிபஞ்சாயத்தில் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கு பஞ்சாயத்து மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதால் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்துக்கு தேவையான 95 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது தற்போது அந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தனைக்கும் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜா அவர் அமைச்சராகவும் உள்ளார் ஆனால் இதுவரை மாப்பிள்னளயூரனிபஞ்சாயத்தில் வந்து மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மதன் ராஜா வந்து இதுவரை மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை நாங்கள் குடிநீர் பிரச்சனையில் திண்டாடி வருகிறோம் என்ற ஒரு குற்றச்சாட்டும் வருகிறது இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெண்களிடம் கேட்டபோது சொன்ன ஒரே பதில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது . என்றனர்.
    1
    மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தண்ணீருக்கு தவிக்கும் கிராம மக்கள்
ஒட்டப்பிடாரம் தாலுகாவை சேர்ந்தது  மாப்பிள்ளை யூரனி.. இங்கு தற்போது  குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பைப் லைன் புதியதாக பதிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் தற்போது அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது அதுபோக மங்களக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து மாப்பிள்ளை யூரணிக்கு வரும் குடிநீர் பைப் லைன் 18 லட்சம் தண்ணீர் வரக் கூடிய அளவுக்கு தான் பைப்லைன் பதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது கடந்த திமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் மாப்பிள்ளையூரனிபஞ்சாயத்தில் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கு பஞ்சாயத்து மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதால் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்துக்கு தேவையான 95 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது தற்போது அந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தனைக்கும் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜா அவர் அமைச்சராகவும் உள்ளார் ஆனால் இதுவரை மாப்பிள்னளயூரனிபஞ்சாயத்தில் வந்து மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மதன் ராஜா வந்து இதுவரை மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை நாங்கள் குடிநீர் பிரச்சனையில் திண்டாடி வருகிறோம் என்ற ஒரு குற்றச்சாட்டும் வருகிறது இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெண்களிடம் கேட்டபோது சொன்ன ஒரே பதில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது . என்றனர்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதாகவும், அந்த வழியாக செல்லும் பெண்களை சிலர் கிண்டல் செய்வதாகவும் புகார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 87 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் ஒரு கட்டிடத்தை அன்றைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் தேவையற்ற சரக்கு வாகனங்கள் டூரிஸ்ட் வேன்கள் போன்ற வாகனங்களை நிறுத்துவதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் எனவும் அத்துமீறி இப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாகவும் மேலும் அங்கு சிலர் பெண்களை கேலி செய்வதாகவும் அருப்புக்கோட்டை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்களும் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பள்ளி முன்பு அதுவும் பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கியமான பகுதியில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டு இருக்கும் இது போன்ற வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், இந்து நாடார் நடுநிலை பள்ளி முன்பு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சரக்கு வாகனங்களை தேவையில்லாத வகையில் நிறுத்துகின்றனர். மேலும் இங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு இருக்கும் சிலர் இவ்வழியாக நடந்து செல்லும் பெண்களை கேலி செய்கின்றனர். இது தொடர்பாக இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என பலமுறை அரசு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுபோன்று புகார் அளித்தால் சிலர் நாங்கள் பத்திரிக்கையாளர்கள் எனக்கூறி பள்ளிக்குள் வந்து மிரட்டுகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து இங்கு வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதாகவும், அந்த வழியாக செல்லும் பெண்களை சிலர் கிண்டல் செய்வதாகவும் புகார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 87 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 
அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். 
இந்தப் பள்ளியின் ஒரு கட்டிடத்தை அன்றைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்துள்ளார். 
இந்நிலையில் இந்த பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் தேவையற்ற சரக்கு வாகனங்கள் டூரிஸ்ட் வேன்கள் போன்ற வாகனங்களை நிறுத்துவதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் எனவும் அத்துமீறி இப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாகவும் மேலும் அங்கு சிலர் பெண்களை கேலி செய்வதாகவும் அருப்புக்கோட்டை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்களும் புகார் தெரிவித்தனர். 
மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பள்ளி முன்பு அதுவும் பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கியமான பகுதியில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டு இருக்கும் இது போன்ற வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், 
இந்து நாடார் நடுநிலை பள்ளி முன்பு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சரக்கு வாகனங்களை தேவையில்லாத வகையில் நிறுத்துகின்றனர். மேலும் இங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு இருக்கும் சிலர் இவ்வழியாக நடந்து செல்லும் பெண்களை கேலி செய்கின்றனர். இது தொடர்பாக இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என பலமுறை அரசு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுபோன்று புகார் அளித்தால் சிலர் நாங்கள் பத்திரிக்கையாளர்கள் எனக்கூறி பள்ளிக்குள் வந்து மிரட்டுகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து இங்கு வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    16 min ago
  • ஆபத்தான ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக 3 பேர் கைது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பியதாக 3 இளைஞர்களை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) மற்றும் ஆவியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (23) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காரியாபட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முத்துராமன், ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    1
    ஆபத்தான ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக 3 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் 
காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பியதாக 3 இளைஞர்களை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) மற்றும் ஆவியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (23) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.
இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காரியாபட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முத்துராமன், ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    user_குமார்
    குமார்
    Firefighter Kariapatti, Virudhunagar•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.