லண்டனில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி, காவல் துறையின் பாதுகாப்பு அறிவுறுத்தலால் திடீரென ரத்து லண்டனில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி, காவல் துறையின் பாதுகாப்பு அறிவுறுத்தலால் திடீரென ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி, லண்டன் காவல் துறையின் பாதுகாப்பு அறிவுறுத்தலால் திடீரென ரத்து செய்யப்பட்டது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஜோசப் விஜய் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். லண்டன் சென்றுள்ள அவர், தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். முதலமைச்சர் தங்கியிருக்கும் தகவலையறிந்த லண்டன் வாழ் தமிழ் மக்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களும் அவரைக் காண்பதற்காக ஹோட்டல் எதிரே உள்ள வீதிகளில் திரண்டனர். "TVK... TVK..." என முழக்கமிட்டபடி பெரும் திரளாக மக்கள் கூடினர். முதலமைச்சர் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே லண்டன் பிரிட்ஜ் ரயில் நிலையமும், முக்கிய மருத்துவமனை ஒன்றும் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பான போக்குவரத்துக்கும், அவசர ஊர்திகளின் இயக்கத்திற்கும் இடையூறு ஏற்பட்டதாகக் கூறி, அங்கிருந்தவர்களைக் கலைந்து செல்லுமாறு லண்டன் காவல் துறையினர் மைக் மூலம் அறிவுறுத்தினர். சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான தர்மராஜ் ஐ.பி.எஸ்., லண்டன் போலீசாருடன் இணைந்து, "அனுமதி மறுக்கப்பட்டதால் அனைவரும் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியீடு ஒன்று வெளியிடப்பட்டது. அதில்: முதலமைச்சர் ஜோசப் விஜய்யைக் காண லண்டன் வாழ் தமிழ் உறவுகள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருப்பதை அறிகிறோம். எனினும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் லண்டன் மாநகரக் காவல்துறையின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, தலைவரைச் சந்திக்கும் சூழல் தற்போது இயலாமல் போயுள்ளது. எனவே, அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் வாசலிலோ அல்லது அவர் செல்லும் வழிகளிலோ பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தை 14 வது வார்டு வட்டச்செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து,நடராஜன், கண்ணன், பாலகுமார்,செல்வம்,கோவில் பிள்ளை, மகளிரணிகள் மாரிச்செல்வி, பாக்யலக்ஷ்மி,பூ இசக்கி,பத்மா, கனிஷா,கனிகா மற்றும் இளைஞரணி சிவா,விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ்,தினேஷ்,பிரிதிவி, சஞ்ஜித் உடன் இருந்தனர்கள்.2
- எட்டயபுரம் பாரதியார் கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.1
- ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு1
- தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.2
- திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.1
- சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள். சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் போயிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.1