தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் தலைவரும் நிர்வாக இயக்குனருமான டி.ஆறுமுகம் தாயார் த.நாகரத்தினம் அம்மாள் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாபநாசம் லயன்ஸ் சங்கம், தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. பாபநாசம் லயன்ஸ் சங்கத் தலைவர் வி.ஜெகதீசன் தலைமை வகித்தார். இதில் பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் தலைவரும் நிர்வாக இயக்குனருமான டி.ஆறுமுகம் , பேராசிரியை டி.மலர்க்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க வட்டார தலைவர் எஸ்.முத்தமிழ்செல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார். இம்முகாமில் உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், மற்றும் கண்புரை நோய் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் ஆர்.சம்பந்தம், வி.செல்வராஜன், ஏ.பாண்டியன், எஸ்.செங்குட்டுவன், டி.செந்தில்,கே.பிரபாகரன், லயன்ஸ் சங்க பொருளாளர் எம் .கணேசன் பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் கண்சிகிச்சை முகாம் மாவட்ட தலைவர் ஜி.செந்தில் ,மற்றும் பாபநாசம் அட்சயம் லயன்ஸ் சங்கம், கபிஸ்தலம் லயன்ஸ் சங்கம், வேலு நாச்சியார் லயன்ஸ் சங்கம் கலந்து கொண்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர். முடிவில் லயன்ஸ் சங்க செயலாளர் வி.என். சிக்கந்தர் பாட்சா நன்றி கூறினார்.