logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகராட்சி புறநகர் மாவட்ட 14வது வார்டு செயலாளர் வாசன் தலைமையில், தமிழக வெற்றி கழகத்தினர் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்தனர். இந்த பூஜை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் நடத்தப்பட்டது. சிறப்பு பூஜையைத் தொடர்ந்து, கோவில் வளாகப் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளர் சதீஷ், 14வது வார்டு துணை செயலாளர் பரத், 14வது வார்டு இணைச்செயலாளர் மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் வைரவன், கருத்தபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

2 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
2 hrs ago
e5939db9-c465-4a1a-9fb1-f322482a9dfe
11aaa339-a02f-4169-ac97-34f2412b7a71

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகராட்சி புறநகர் மாவட்ட 14வது வார்டு செயலாளர் வாசன் தலைமையில், தமிழக வெற்றி கழகத்தினர் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்தனர். இந்த பூஜை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் நடத்தப்பட்டது. சிறப்பு பூஜையைத் தொடர்ந்து, கோவில் வளாகப் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளர் சதீஷ், 14வது வார்டு துணை செயலாளர் பரத், 14வது வார்டு இணைச்செயலாளர் மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் வைரவன், கருத்தபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • வரும் 2026ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயல் வீரர்கள் கூட்டம் சென்னை மேல்மருவத்தூர் அருகே மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, கட்சியின் தலைவர் மற்றும் இளம் புரட்சியாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பூவை M. ஜெகன் மூர்த்தியார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அழைக்கப்பட்டு, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில், கட்சி வளர்ச்சிப் பணி குறித்து நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இறுதியில், மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய செயலாளர், மாநில அணி நிர்வாகிகள், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் D. ருசேந்திரகுமார் ஆகியோர் கட்சி வளர்ச்சிப் பணி குறித்து விளக்க உரையாற்றினர். மாநில செயலாளர்கள் அ. தெ. சேகர் மற்றும் பரணி P. மாரி ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். குறிப்பாக, தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொருளாளர் மு. மணிகண்டன் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
    2
    வரும் 2026ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயல் வீரர்கள் கூட்டம் சென்னை மேல்மருவத்தூர் அருகே மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, கட்சியின் தலைவர் மற்றும் இளம் புரட்சியாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பூவை M. ஜெகன் மூர்த்தியார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அழைக்கப்பட்டு, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்தில், கட்சி வளர்ச்சிப் பணி குறித்து நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இறுதியில், மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய செயலாளர், மாநில அணி நிர்வாகிகள், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் D. ருசேந்திரகுமார் ஆகியோர் கட்சி வளர்ச்சிப் பணி குறித்து விளக்க உரையாற்றினர். மாநில செயலாளர்கள் அ. தெ. சேகர் மற்றும் பரணி P. மாரி ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். குறிப்பாக, தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொருளாளர் மு. மணிகண்டன் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விருதுநகர் மத்திய மாவட்ட கழகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சாத்தூரில் 108 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் கூடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர். இந்நிகழ்ச்சியை விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் தொடங்கி வைத்தார். பேருந்து நிலையம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பால்குடங்கள், சாத்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, உலக நன்மைக்காகவும், தமிழக முதல்வர் விஜய் நீண்ட நாள் நலமுடன் வாழவும், தமிழகம் அனைத்து துறைகளிலும் மேன்மை அடையவும் வேண்டி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார். கோவிலுக்கு வந்த அமைச்சருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து வந்த மகளிர் அணியினர், குழவை இட்டு “அரோகரா” கோஷத்துடன் அருள்மிகு சுப்ரமணிய சுவாமியை வணங்கினர். இந்நிகழ்வில் தமிழக கட்சி கழகம் விருதுநகர் மத்திய மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், சாத்தூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.
    1
    தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விருதுநகர் மத்திய மாவட்ட கழகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சாத்தூரில் 108 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் கூடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர். இந்நிகழ்ச்சியை விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் தொடங்கி வைத்தார்.

பேருந்து நிலையம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பால்குடங்கள், சாத்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, உலக நன்மைக்காகவும், தமிழக முதல்வர் விஜய் நீண்ட நாள் நலமுடன் வாழவும், தமிழகம் அனைத்து துறைகளிலும் மேன்மை அடையவும் வேண்டி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார். கோவிலுக்கு வந்த அமைச்சருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து வந்த மகளிர் அணியினர், குழவை இட்டு “அரோகரா” கோஷத்துடன் அருள்மிகு சுப்ரமணிய சுவாமியை வணங்கினர். இந்நிகழ்வில் தமிழக கட்சி கழகம் விருதுநகர் மத்திய மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், சாத்தூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.
    user_K. Arun pandian
    K. Arun pandian
    Photographer Sattur, Virudhunagar•
    2 hrs ago
  • தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகியான பரன்குன்றாபுரம் என் டி எஸ் சார்லஸ் தலைமை தாங்கினார். விழாவில், கடந்த 2025-2026 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், டி டி டி ஏ நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மொத்தமாக 520 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி என் டி எஸ் சார்லஸ் வாழ்த்திப் பேசினார். இந்த நிகழ்வில் தவெக ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்பிவி கதிர்வேல், துணை செயலாளர் சுரேஷ், இணை செயலாளர் லூர்துசாமி, உதயகுமார், ரேக்லேண்ட், ஒன்றிய துணை செயலாளர் ஆரோக்கிய லிவின்யா, கிளை நிர்வாகிகள் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
    1
    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகியான பரன்குன்றாபுரம் என் டி எஸ் சார்லஸ் தலைமை தாங்கினார்.

விழாவில், கடந்த 2025-2026 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், டி டி டி ஏ நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மொத்தமாக 520 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி என் டி எஸ் சார்லஸ் வாழ்த்திப் பேசினார்.

இந்த நிகழ்வில் தவெக ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்பிவி கதிர்வேல், துணை செயலாளர் சுரேஷ், இணை செயலாளர் லூர்துசாமி, உதயகுமார், ரேக்லேண்ட், ஒன்றிய துணை செயலாளர் ஆரோக்கிய லிவின்யா, கிளை நிர்வாகிகள் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற போரில் வீர தீரத்துடன் சண்டையிட்டார். வாய் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்ட போதிலும், அவர் காயத்தைப் பொருட்படுத்தாமல் போரிட்டு 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று தனது சக வீரர்களைக் காப்பாற்றினார். அவரது இந்த வீர தீர செயலைப் பாராட்டி, இந்திய நாட்டின் உயரிய விருதான 'கீர்த்தி சக்கரா' விருதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு வழங்கினார். இந்த உயரிய விருதைப் பெற்றதைத் தொடர்ந்து, தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு மற்றும் பாராட்டு விழாக்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில், முன்னாள் படை வீரர் நல சங்கம் மற்றும் தர்மாபுரி ஊர் பொதுமக்கள் சார்பில் ராணுவ வீரருக்கு ஒரு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு விழாவில், தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை ஆடிய ஊர் பொதுமக்கள், ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு மாலை அணிவித்து வரவேற்றனர். முன்னாள் ராணுவ வீரர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து, வீர தீர செயலுக்காக நாட்டின் உயரிய விருதான 'கீர்த்தி சக்கரா' விருது பெற்ற அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
    1
    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற போரில் வீர தீரத்துடன் சண்டையிட்டார். வாய் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்ட போதிலும், அவர் காயத்தைப் பொருட்படுத்தாமல் போரிட்டு 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று தனது சக வீரர்களைக் காப்பாற்றினார். அவரது இந்த வீர தீர செயலைப் பாராட்டி, இந்திய நாட்டின் உயரிய விருதான 'கீர்த்தி சக்கரா' விருதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு வழங்கினார்.

இந்த உயரிய விருதைப் பெற்றதைத் தொடர்ந்து, தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு மற்றும் பாராட்டு விழாக்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில், முன்னாள் படை வீரர் நல சங்கம் மற்றும் தர்மாபுரி ஊர் பொதுமக்கள் சார்பில் ராணுவ வீரருக்கு ஒரு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு விழாவில், தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை ஆடிய ஊர் பொதுமக்கள், ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு மாலை அணிவித்து வரவேற்றனர். முன்னாள் ராணுவ வீரர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து, வீர தீர செயலுக்காக நாட்டின் உயரிய விருதான 'கீர்த்தி சக்கரா' விருது பெற்ற அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஏர்போர்ட் சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பலத்த சூறாவளி காற்று வீசியதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காற்றின் வேகம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்த காரணத்தால், பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். திடீரென ஏற்பட்ட இந்த சூறாவளி காற்று காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஏர்போர்ட் சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பலத்த சூறாவளி காற்று வீசியதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காற்றின் வேகம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்த காரணத்தால், பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். திடீரென ஏற்பட்ட இந்த சூறாவளி காற்று காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.