கடையில் அமர்ந்து தேனீர் சாப்பிட்ட துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் கடைமடை ரெயில்வே கேட் அருகே டீ கடையில் அமர்ந்து தேனீர் சாப்பிட்ட துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காலை அரூர், மற்றும் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பறப்புரையில் ஈடுபட்டார் இதனை யடுத்து கடத்தூரிலிருந்து பாலக்கோடு செல்லும் வழியில் கடைமடை ரயில்வே கேட் பகுதியில் ரயில் செல்வதற்காக ரயில்வே கேட் போடப்பட்டதால் 20 நிமிடங்கள் அருகே இருந்த தேனீர் கடையில் அமர்ந்து வேட்பாளர்களுடன்தேனீர் பருகினார் இதைதொடர்ந்து அங்கு காத்திருந்த அரசு பேருந்தில் ஏரி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் பெண்கள், ஆண்கள் சிலர் துணை முதல்வருடன் செல்பி எடுத்து கொண்டனர் இதையடுத்து ரயில்வே பாதையை கடந்து சென்று தனது பிரச்சார வாகனத்தில் ஏரி பாலக்கோட்டிற்கு சென்றார் துணை முதல்வருடன் பாப்பிரெட்டிபட்டி வேட்பாளர் P. பழநியப்பன், பாலக்கோடு வேட்பாளர். DNV செந்தில்குமார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்
கடையில் அமர்ந்து தேனீர் சாப்பிட்ட துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் கடைமடை ரெயில்வே கேட் அருகே டீ கடையில் அமர்ந்து தேனீர் சாப்பிட்ட துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காலை அரூர், மற்றும் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பறப்புரையில் ஈடுபட்டார் இதனை யடுத்து கடத்தூரிலிருந்து பாலக்கோடு செல்லும் வழியில் கடைமடை ரயில்வே கேட் பகுதியில் ரயில் செல்வதற்காக ரயில்வே கேட் போடப்பட்டதால் 20 நிமிடங்கள் அருகே இருந்த தேனீர் கடையில் அமர்ந்து வேட்பாளர்களுடன்தேனீர் பருகினார் இதைதொடர்ந்து அங்கு காத்திருந்த அரசு பேருந்தில் ஏரி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் பெண்கள், ஆண்கள் சிலர் துணை முதல்வருடன் செல்பி எடுத்து கொண்டனர் இதையடுத்து ரயில்வே பாதையை கடந்து சென்று தனது பிரச்சார வாகனத்தில் ஏரி பாலக்கோட்டிற்கு சென்றார் துணை முதல்வருடன் பாப்பிரெட்டிபட்டி வேட்பாளர் P. பழநியப்பன், பாலக்கோடு வேட்பாளர். DNV செந்தில்குமார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்
- பத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி மக்கள் அடித்து விரட்ட வேண்டும் - அரூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை. தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்: திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நம்பர் ஒன் மாநிலமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து.இது தொடர வேண்டும். மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் விட்டு விடக்கூடாது, பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் போட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமிச்சாவை கூட வாட விரட்டி இருக்கிறோம், இந்த தேர்தலில் மோடியையும் அமிச்சாவையும் ஓட ஓட விரட்ட வேண்டும், ஜாடிக்கேத்த மூடி என பழமொழி இருப்பதாகவும் அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி என இருக்கிறார், மொரட்டு பக்தர் போல மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துபத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி அடித்து விரட்ட வேண்டும் என மக்களிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.1
- சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 2,444 வாக்காளர்களில், மாலை 6:15 மணி வரை 2,160 பேர் வாக்களித்தனர். வாக்குப்பெட்டிகள் மாவட்ட நீதிபதி சுமதியிடம் ஒப்படைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் ஐயப்பமணி, சரவணன் உள்ளிட்டோர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.1
- கிருஷ்ணகிரி வடக்கு ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சி, பழைய பேட்டை மற்றும் லைன் கொல்லை ஆகிய பகுதிகளில், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்அசோக்குமார் அவர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.1
- காவேரிப்பட்டணம் அருகே பட்ட பகலில் கல்லுரி பேருந்தை வழி மறித்து மாணவியை கடத்த முயற்சி. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டிணம் அருகே தனியார் கல்லூரி பேருந்தை வழி மறித்து மது போதையில் பட்ட பகலில் மாணவியை கடத்த முயற்சி செய்து சக மாணவிகள் தடுத்ததால் மது போதையில் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ ஆதாரம் கசிந்ததையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்க துரை அவர்கள் உத்தரவின் பேரில் வீடியோவை ஆதாரமாக வைத்து காவல் துறை அதிகாரிகள் வலை வீசி தேடியதில் வீடியோவில் உள்ள நபர்கள் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி பகுதியை சேர்ந்த சர்க்கரை மகன் தங்கராஜ் என்பது தெரிய வந்தது உடன் கூட்டாளிகள் மூன்று பேரை காவேரிப்பட்டிணம் காவல் நிலைய போலீஸ்சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையின் துரித நடவடிக்கையால் உடனடியாக கல்லூரி பேருந்தை வழி மறித்து மாணவியை தாக்கிய போதை ஆசாமிகளை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- சேலம் அம்மாபேட்டை ராமலிங்க சுவாமி தெருவில், 43 ஆம் ஆண்டு காவிரி திருவிழா இன்று அப்பகுதியில் விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பால் காவடி மற்றும் மயில் காவடி எடுத்து சுப்பிரமணியர் கோவிலில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் கோவில் தலைவர் ஜெயமணி, சௌந்தரராஜன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.1
- எடப்பாடி அருகே சித்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்... 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தூர் பகுதியில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினி விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடம் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... இதனைத் தொடர்ந்து சீமான் தலைமையிலான ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதி அளித்தார். மேலும் வீடு வீடாக சென்று இல்லத்தரசிகளிடம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்றும் முடியும் என்று கூறி வாக்கு சேகரித்தார்...1
- Post by Vinayagam Vinayagam1
- தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பேச்சு - திமுகவால் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கான பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரால் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தர்மபுரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 5 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பிரச்சார திட்டங்கள், வாக்காளர் தொடர்பு முறைகள், பூத் வாரியாக அமைப்பு வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் பெருகி உள்ளது என்றும், தருமபுரி மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள், இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்க்காக தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைப்போம் என்றும் அப்போது தருமபுரி மாவட்டத்தின் அணைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1