ரூ.97.7 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த அமைச்சர்.. கடலூர் மாவட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ரூ.99.7 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.. மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் கடலூர் மாவட்டம். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலப்பாக்கம். திருச்சோபுரம் மற்றும் தியாகவல்லி பகுதிகளில் ரூ.99.7 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடவும். தமிழ்நாடு அரசினால் அவ்வப்போது அறிமுகப்படுத்தும் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களை சென்றடையும் வகையிலும் பல்வேறு துறைகளின் மூலம் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருச்சோபுரம் மற்றும் தியாகவல்லி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தலா ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடங்களில் இணையதள இணைப்புடன் ஊராட்சி மன்றத்தலைவர். ஊராட்சி செயலர்,கிராம நிர்வாக அலுவலர் பணி செய்வதற்கு தனித்தனியே அறை அமைக்கப்பட்டுள்ளது. வார்டு உறுப்பினர்களுக்கு மாதாந்திரக் கூட்டம் நடத்துவதற்கு ஏதுவாக கூட்டரங்கம் தனியே அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் அலுவலர்களுக்கு தனியாகவும் பொதுமக்களுக்கு தனியாகவும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒரே அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலரையும். ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலரையும் தொடர்பு கொள்ள வசதியாக உள்ளது. இணையதள வசதி இருப்பதால் பொதுமக்கள் வீட்டு வரி செலுத்துவதற்கும் பிற திட்டங்களை தெரிந்துகொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆலப்பாக்கம் ஊராட்சியில் அரசு சேவைகள் எளிதாக பொதுமக்களுக்கு கிடைக்கும் நோக்கில் ராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சேவை மையக் கட்டடம் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் இம்மையத்தின் மூலம் பதிவு செய்து பெறலாம். மேலும், தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் உள்ள இ-சேவைகள் மூலமாக சேவைகளையும் விண்ணப்பித்து பெறலாம். இதனால் பொதுமக்கள் தனியர் இ-சேவை மையங்கள் நாடி செல்வதை தவிர்க்கப்படுவதுடன். அவர்களுக்கு அரசின் சேவைகள் உடனுக்குடன் கிடைக்கும் நோக்கில் பொதுமக்கள் இருக்கும் இடத்திலேயே உடனுக்குடன் சேவைகள் வழங்கப்படுகிறது. ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.34.70 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் மாணவர்களின் கற்றல் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும். பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்தும் நோக்கிலும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு அடிப்டை கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இப்பகுதியில் தொடக்கல்வி பயிலும் மாணவர்கள் வெளியே கல்வி கற்க செல்லும் நிலை குறையும். மேலும், பேரிடர் காலங்களில் தற்காலிக முகாம் அமைக்கவும், தேர்தல் காலங்களில் வாக்குச்சாவடி மையமாகவும் வகையிலும் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் ர.அ.பிரியங்கா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.வெங்கடேசன். டி.இராமசந்திரன்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வேலைக்கு சென்று உள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது அவர்களது அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், புதிய தொகுப்பு வீடு கட்டி தர கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.1
- ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது.1
- Post by Dayanand kumar paswan1
- மதிய வணக்கம்1
- தெருவில் நாய் விரட்டுவது நமது ஊரில் மட்டும் இல்லை. எல்லா ஊரிலும் ஜப்பானில் ஒருவர் நாயை விரட்டுவதற்கு பைக்கில் பின்பக்கம் ஒரு கம்பு மாதிரி ஒரு பொருளை செட் செய்து அது பட்டன் மூலம் இயங்கும் முறையில் செய்து.1
- Post by Mr Mr. Gandhi1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1