logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மதர்சமூக சேவை நிறுவனத்திற்கு பாராட்டு சான்றிதழை இயக்குனர் கென்னடியிடம் கலெக்டர்இளம் பகவத் வழங்கி பாராட்டினார் தூத்துக்குடி தமிழர்களின் தேசிய மரமாக கருதப்படும் பனைமரம் 5 கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்துள்ளது. தற்போது சுமார் ஒரு கோடிக்கும் குறைவான பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இதனால் கடற்கரையில் மண்ணரீப்பு, புயல், சூறாவளி போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாக்க, மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க தாமிரபரணி ஆற்றங்கரை உட்பட நீர்நிலைகளின் கரைகள் உடையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து ஒரு கோடி பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள். தற்போது வரை சுமார் 76 லட்சம் பனைமர விதைகளை விதைத்துள்ளார்கள். சில இடங்களில் விதைக்கப்பட்டு வளர்ந்து வரும் பனைமர கன்றுகளை (வடலி) பராமரித்து வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கும், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கும், இளைஞர் மன்றங்களை சார்ந்த இளைஞர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் பனை பாதுகாப்பு மற்றும் பனைப் பொருட்களின் மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கு, கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மதர் சமூக சேவை நிறுவனத்தின் விழிப்புணர்வால் தமிழகத்தில் மக்களிடத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு மக்களிடத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 2025-2026 ஒரு ஆண்டில் ஆண்டில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம், கடம்பா குளம் மறுகால் ஓடை, கடற்கரைப் பகுதிகளிலும் , குளம் ஏரி போன்ற நீர் நீர் நிலைகளின் கரையோரங்களில் 5,00,000 பனை மர விதைகள் விதைக்கப்பட்டுள்ளது. இச் சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் விதமாக சான்றித வழங்கும் விழா கலெக்டா் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார். மாவட்ட உதவி வன அலுவலர் முனியப்பன் முன்னிலை வகித்தார். கலெக்டா் இளம்பகவத் மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குனர் கென்னடி சேவையை பாராட்டி சான்றிதழையும், பரிசினையும் வழங்கினாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் பயிற்சி புவனேஷ்ராம், துணை ஆட்சியர் பயிற்சி மகேந்திரன் லீடு டிரஸ்ட் இயக்குனர் பானுமதி உட்பட பல அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்..

2 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
2 hrs ago
b5d1c12b-4e51-462b-b44d-ab186f349684

மதர்சமூக சேவை நிறுவனத்திற்கு பாராட்டு சான்றிதழை இயக்குனர் கென்னடியிடம் கலெக்டர்இளம் பகவத் வழங்கி பாராட்டினார் தூத்துக்குடி தமிழர்களின் தேசிய மரமாக கருதப்படும் பனைமரம் 5 கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்துள்ளது. தற்போது சுமார் ஒரு கோடிக்கும் குறைவான பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இதனால் கடற்கரையில் மண்ணரீப்பு, புயல், சூறாவளி போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாக்க, மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க தாமிரபரணி ஆற்றங்கரை உட்பட நீர்நிலைகளின் கரைகள் உடையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து ஒரு கோடி பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள். தற்போது வரை சுமார் 76 லட்சம் பனைமர விதைகளை விதைத்துள்ளார்கள். சில இடங்களில் விதைக்கப்பட்டு வளர்ந்து வரும் பனைமர கன்றுகளை (வடலி) பராமரித்து வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கும், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கும், இளைஞர் மன்றங்களை சார்ந்த இளைஞர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் பனை பாதுகாப்பு மற்றும் பனைப் பொருட்களின் மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கு, கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மதர் சமூக சேவை நிறுவனத்தின் விழிப்புணர்வால் தமிழகத்தில் மக்களிடத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு மக்களிடத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 2025-2026 ஒரு ஆண்டில் ஆண்டில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம், கடம்பா குளம் மறுகால் ஓடை, கடற்கரைப் பகுதிகளிலும் , குளம் ஏரி போன்ற நீர் நீர் நிலைகளின் கரையோரங்களில் 5,00,000 பனை மர விதைகள் விதைக்கப்பட்டுள்ளது. இச் சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் விதமாக சான்றித வழங்கும் விழா கலெக்டா் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை தாங்கினார். மாவட்ட உதவி வன அலுவலர் முனியப்பன் முன்னிலை வகித்தார். கலெக்டா் இளம்பகவத் மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குனர் கென்னடி சேவையை பாராட்டி சான்றிதழையும், பரிசினையும் வழங்கினாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் பயிற்சி புவனேஷ்ராம், துணை ஆட்சியர் பயிற்சி மகேந்திரன் லீடு டிரஸ்ட் இயக்குனர் பானுமதி உட்பட பல அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்..

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி: மாநகராட்சி பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் பக்கிள் ஓடையில் கேரி பைகளையும் குப்பைகளையும் நேரிடையாகவும் சாக்குபைகளில் உள்ளே வைத்து மறைமுகமாகவும் போடுவதை தவிர்க்க வேண்டும் மேயர் ஜெகன் வேண்டுகோள். மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட மேயர் பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் தொடர்ந்து பேசிய அவர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மேம்படுத்தி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது திருவிளக்குகள் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் புதிதாக 278 சாலைகள் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது வரும் மே மாதத்திற்குள்ளாக இந்த பணிகள் நிறைவடையும் மாநகராட்சி வக்கீல் ஓடையில் பொதுமக்கள் கேரி பை உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது ஆனால் தற்பொழுது அவற்றை சிறிய சாக்கு பைகளில் வைத்து கேரிப்பை உள்ளே வைத்து போடுகின்றனர் இதை தவிர்க்க வேண்டும் பத்தில்வோடையானது வரும் காலத்தில் மழை பெய்தால் மட்டும் மலை வெள்ள நீர் செல்வதற்காக வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது மற்ற நேரங்களில் பாதாள சாக்கடை மூலமாக மட்டுமே கழிவுநீர் வெளியேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவே பொதுமக்கள் முழுமையான உண்மையான ஒத்துழைப்பை தர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியங்கா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்
    1
    தூத்துக்குடி: மாநகராட்சி பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் பக்கிள் ஓடையில் கேரி பைகளையும் குப்பைகளையும் நேரிடையாகவும் சாக்குபைகளில் உள்ளே வைத்து மறைமுகமாகவும் போடுவதை தவிர்க்க வேண்டும் மேயர் ஜெகன் வேண்டுகோள்.
மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட மேயர் பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் தொடர்ந்து பேசிய அவர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மேம்படுத்தி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது திருவிளக்குகள் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்
புதிதாக 278 சாலைகள் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது வரும் மே மாதத்திற்குள்ளாக இந்த பணிகள் நிறைவடையும் மாநகராட்சி வக்கீல் ஓடையில் பொதுமக்கள் கேரி பை உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது ஆனால் தற்பொழுது அவற்றை சிறிய சாக்கு பைகளில் வைத்து கேரிப்பை உள்ளே வைத்து போடுகின்றனர் இதை தவிர்க்க வேண்டும் பத்தில்வோடையானது வரும் காலத்தில் மழை பெய்தால் மட்டும் மலை வெள்ள நீர் செல்வதற்காக வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது மற்ற நேரங்களில் பாதாள சாக்கடை மூலமாக மட்டுமே கழிவுநீர் வெளியேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவே பொதுமக்கள் முழுமையான உண்மையான ஒத்துழைப்பை தர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியங்கா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்
    user_Jaya Studio
    Jaya Studio
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 min ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    22 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு வட்டக்கோவில் அருகே கடந்த 50 ஆண்டுகளாக இருந்த எம்ஜிஆர் பயணிகள் நிழற்குடையை மாநகராட்சி அதிரிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதாக முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த 1965ல் எம்ஜிஆர் மன்றம் என்று ஆரம்பிக்கப்பட்டு எம்ஜிஆர் பஸ் ஸ்டாப் ஆக மாற்றப்பட்டது. இதன் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் பத்திரம் போட முயற்சித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தேன். இந்த நிலையில் இங்கிருந்த பேருந்து நிறுத்தத்தையும், அருகில் இருந்த காமராஜர் சிலையையும் மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. இந்த பகுதி திமுக கவுன்சிலர் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை இடித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதிமுக சார்பில போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
    1
    தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு வட்டக்கோவில் அருகே கடந்த 50 ஆண்டுகளாக இருந்த எம்ஜிஆர் பயணிகள் நிழற்குடையை மாநகராட்சி அதிரிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதாக முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறுகையில்,  மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த 1965ல் எம்ஜிஆர் மன்றம் என்று ஆரம்பிக்கப்பட்டு எம்ஜிஆர் பஸ் ஸ்டாப் ஆக மாற்றப்பட்டது. இதன் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் பத்திரம் போட முயற்சித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தேன். 
இந்த நிலையில் இங்கிருந்த பேருந்து நிறுத்தத்தையும், அருகில் இருந்த காமராஜர் சிலையையும் மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. இந்த பகுதி திமுக கவுன்சிலர் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகள்  நிழற்குடையை இடித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதிமுக சார்பில போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • சுரண்டையில் இருந்து மதுரைக்கும் மதுரையில் இருந்து சுரண்டைக்கும் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    சுரண்டையில் இருந்து மதுரைக்கும் மதுரையில் இருந்து சுரண்டைக்கும் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • Post by Saba Saba
    1
    Post by Saba Saba
    user_Saba Saba
    Saba Saba
    மதுரை தெற்கு, மதுரை, தமிழ்நாடு•
    16 min ago
  • சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.
    1
    சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட   பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும்
அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்த கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்யப்பட்டதை கண்டித்து - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை, பிப்.18-  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்து புதனன்று மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உரிமைத்தொகையை உயர்த்துதல், வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட  சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஜான்ஸிராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கண்டன உரையாக, ஜெ. லெனின் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் டி. குமரவேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    3
    சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்த கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்யப்பட்டதை கண்டித்து - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை, பிப்.18- 
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்து புதனன்று மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உரிமைத்தொகையை உயர்த்துதல், வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 
சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஜான்ஸிராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
கண்டன உரையாக, ஜெ. லெனின் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர்
டி. குமரவேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    50 min ago
  • தூத்துக்குடி: கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில். ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நிகழாண்டுக்கான தவக்காலம் இன்று சாம்பல் புதனாக கடைபிடிக்கப்பட்டு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து. தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை. செல்வன் பெர்னாண்டோ நிறைவேற்றினார். பின்னர் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது. இதே போல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா தேவாலயம், திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம், யூதா ததேயூ ஆலயம், மிக்கேல் அதிதூதர் தேவாலயம், சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள், சாம்பல் புதன் பிரார்த்தனைகள் நடைபெற்றன இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் திருச்சிலுவை வழிபாடு நடைபெறுகிறது. மேலும் தவக்கால திருப்பயணம், தியானம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 29ஆம் தேதி குருதோலை ஞாயிறு அதனைத் தொடர்ந்து. ஏப்ரல் 02-04-26ஆம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் சடங்கும், அடுத்த நாள் புனித வெள்ளி இயேசு சிலுவையில் அறையப்பட்டதை தியானிக்கும் புனித வெள்ளி சிலுவைப்பாதை சடங்குகளும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும். ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 05-04-26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் தேவ ஆலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
    1
    தூத்துக்குடி: கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில். ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால திருநாளாக கடைபிடித்து வருகின்றனர்.  அதன்படி நிகழாண்டுக்கான தவக்காலம் இன்று சாம்பல் புதனாக கடைபிடிக்கப்பட்டு  தொடங்கியது.  
அதனைத் தொடர்ந்து. தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை. செல்வன் பெர்னாண்டோ நிறைவேற்றினார். பின்னர் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது. 
இதே போல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா தேவாலயம், திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம், யூதா ததேயூ ஆலயம், மிக்கேல் அதிதூதர் தேவாலயம், சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள், சாம்பல் புதன் பிரார்த்தனைகள் நடைபெற்றன
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில்  திருச்சிலுவை வழிபாடு நடைபெறுகிறது. மேலும் தவக்கால திருப்பயணம், தியானம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 29ஆம் தேதி குருதோலை ஞாயிறு அதனைத் தொடர்ந்து. ஏப்ரல் 02-04-26ஆம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் சடங்கும், 
அடுத்த நாள் புனித வெள்ளி இயேசு சிலுவையில் அறையப்பட்டதை தியானிக்கும் புனித வெள்ளி சிலுவைப்பாதை சடங்குகளும் நடைபெறுகிறது. 
முக்கிய நிகழ்ச்சியான இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும். ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 05-04-26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும்  மாணவ- மாணவிகள் ஏராளமானோர் தேவ ஆலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
    user_Jaya Studio
    Jaya Studio
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.