Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், அய்யலூர் வேங்கனூர் முதல் வடுகபட்டி வரை எரியோடு செல்லும் தார் சாலை புதுப்பிக்கும் பணி, கடந்த சட்டசபைத் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், ஜல்லிகள் கொட்டப்பட்டு அரைகுறையாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே, சாலைப்பணியை உடனடியாக மீண்டும் துவங்கிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sangili.v
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், அய்யலூர் வேங்கனூர் முதல் வடுகபட்டி வரை எரியோடு செல்லும் தார் சாலை புதுப்பிக்கும் பணி, கடந்த சட்டசபைத் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், ஜல்லிகள் கொட்டப்பட்டு அரைகுறையாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே, சாலைப்பணியை உடனடியாக மீண்டும் துவங்கிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிங்கம்புணரி அருகே முறையூரில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலின் ஆனி திருமஞ்சன பெருவிழா இன்று (ஜூன் 20) கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இந்த விழாவின் தொடக்கமாக, ரிஷப கொடியுடன் ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடைபெற்றன. சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, ஜூன் 27 அன்று திருக்கல்யாணம் மற்றும் ஜூன் 28 அன்று திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் முக்கிய குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல ஆயிரம் லிட்டர் கணக்கில் குடிநீர் உந்துதலுடன் வெளியேறி, பாரதி நகரில் உள்ள தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடி வீணாகி வருகிறது. ஏற்கனவே, தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீரின்றி சிரமப்படும் இச்சூழலில், குடிநீர் இவ்வாறு வீணாவது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சாலையில் தேங்கும் இந்த குடிநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதியில் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயைச் சரிசெய்து, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.1
- மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து, இன்று தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த மாநில அளவிலான போராட்டத்தின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.1
- தேனி மாவட்டத்தில் ஒரு புதிய தகவல் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.1
- முக்கண்ணாமலைப்பட்டியில் அன்னவாசல் காவல்துறையினர் நடை ரோந்துப் பணியிலும், விழிப்புணர்வுப் பணியிலும் ஈடுபட்டனர்.1
- தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (ஜூன் 19) இரவு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு தங்கத்தேர் வழிபாடு நடைபெற்றது. தவெக நிர்வாகிகள் சசி முருகன் மற்றும் ரேஷன் கடை கார்த்திக் ஆகியோரின் ஏற்பாட்டில் நடந்த இந்த வழிபாட்டில், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரினை இழுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.1
- தேனி மாவட்டம், தேனி தமிழக வெற்றி கழகம் சார்பாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி அலுவலகம் எதிரே ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்ச்சியை தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மருத்துவமனையில், 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மருத்துவமனை தலைமை மருத்துவர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் பிரியங்கா பங்கேற்றார். டாக்டர் பிரியங்கா, யோகாசனப் பயிற்சி நினைவுத்திறனை மேம்படுத்தும், மனதை உற்சாகமாக வைத்திருக்க உதவும், கவனச்சிதறல் ஏற்படாது, உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் என பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு யோகாசனப் பயிற்சிகளை செய்து காட்டி, சிகிச்சை முறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், நோய்களுக்குத் தகுந்த உணவு முறைகள், அக்குபஞ்சர் மற்றும் அரோமா தெரபி பற்றியும், உடம்பில் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பல வகையான மூலிகை பொடிகள் வழங்கப்படும் எனவும் விளக்கமளித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.3
- திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், மாநகராட்சிக்கு அருகிலுள்ள பொதுப்பாதைகளில் கட்-அவுட்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, மல்டர் பாலம் அருகில் மற்றும் மாநகராட்சி குடிநீர் வசதிக்கு அருகிலுள்ள பொதுப் பாதைகளில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை பொதுமக்களின் நடமாட்டத்திற்கு சிரமத்தை உண்டாக்குகிறது. மாநகராட்சித் துறை மிக அருகிலேயே இருக்கும் நிலையிலும், இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றன. எனவே, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் இந்த பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.3