logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மணப்பாறையில் வேட்டைக்கு செல்ல தடுத்ததால் பொதுமக்கள் சாலை மறியல் மணப்பாறையை அடுத்துள்ள பொய்கைப்பட்டி அருகே உள்ள வனப் பகுதியில் மகா சிவ ராத்திரியை முன்னிட்டு அப்பகுதி இளைஞா்கள் சிலா் வேட்டைக்கு செல்ல முயன்றனர் . இதையறிந்து அங்கு சென்ற மணப்பாறை வனத் துறையினா், அவா்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் பொய்கைப்பட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வனச்சரகா் மகேஸ்வரன் மற்றும் போலீஸாா் வன விலங்குகளை வேட்டையாடுவது சட்ட விரோதமானது எனக் கூறி அனுப்பி வைத்தனா்.

11 hrs ago
user_Usha arun News
Usha arun News
Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
11 hrs ago
a8ec4c10-2c8e-4a97-a5b0-ebcd5f9f4436
aeeecc0d-fb61-4d01-b155-391db9e1e29d
a3e09b06-f3f8-4868-9711-3eb36459641d
53628ecd-895d-4d4b-b98b-74f98346812d

மணப்பாறையில் வேட்டைக்கு செல்ல தடுத்ததால் பொதுமக்கள் சாலை மறியல் மணப்பாறையை அடுத்துள்ள பொய்கைப்பட்டி அருகே உள்ள வனப் பகுதியில் மகா சிவ ராத்திரியை முன்னிட்டு அப்பகுதி இளைஞா்கள் சிலா் வேட்டைக்கு செல்ல முயன்றனர் . இதையறிந்து அங்கு சென்ற மணப்பாறை வனத் துறையினா், அவா்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் பொய்கைப்பட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வனச்சரகா் மகேஸ்வரன் மற்றும் போலீஸாா் வன விலங்குகளை வேட்டையாடுவது சட்ட விரோதமானது எனக் கூறி அனுப்பி வைத்தனா்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மணப்பாறை குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால், தூக்கத்தை தொலைத்த மக்கள். மணப்பாறையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் இருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலை பட்டி பகுதியில் ஒழுங்குமுறை கூடத்தின் குடோன் உள்ளது. இங்கு அரிசி, உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. குடோனில் உணவு தானியங்களுக்கு வண்டுகள் மற்றும் பூச்சிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மருந்து தெளித்து பராமரிப்பது வழக்கம். இந்த வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்க மறந்துவிட்டதால் வண்டுகள், பூச்சிகள் அதிகமாக உருவாகி குடோனில் இருக்கும் உணவு தானியங்களை நாசம் செய்வதோடு, அருகில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன. குறிப்பாக மாலை 5 மணியிலிருந்து குடோனில் இருந்து அதிகளவில் வண்டுகள் வெளியேறி, வீடுகளுக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்து வருகின்றன. குடோனுக்கு அருகே உள்ள பூமாலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வண்டுகளால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து பகுதிவாசிகள் கூறும்போது,வீடுகளில் வைத்துள்ள குடிநீர், உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட இடங்களில் வண்டுகள் வந்து விழுகின்றன. எங்களை கடித்தும் துன்புறுத்துகின்றன. இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவிக்கிறோம். இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களில் வண்டுகள் விழுந்து கண்களுக்கு கேடு விளைவிப்பதோடு, விபத்துகள் ஏற்படவும் காரணமாகின்றன. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் வண்டுகள் உருவாகாமல் இருக்க முறையான வழிமுறைகளை கையாள வேண்டும். மாவட்ட நிர்வாகம் தான் எங்களை காக்க வேண்டும்” என்று பகுதிவாசிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    மணப்பாறை குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால், தூக்கத்தை தொலைத்த மக்கள்.
மணப்பாறையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் இருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலை பட்டி பகுதியில் ஒழுங்குமுறை கூடத்தின் குடோன் உள்ளது. இங்கு அரிசி,  உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. குடோனில் உணவு தானியங்களுக்கு வண்டுகள் மற்றும் பூச்சிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மருந்து தெளித்து பராமரிப்பது வழக்கம். இந்த வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்க மறந்துவிட்டதால் வண்டுகள், பூச்சிகள் அதிகமாக உருவாகி குடோனில் இருக்கும் உணவு தானியங்களை நாசம் செய்வதோடு, அருகில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.
குறிப்பாக மாலை 5 மணியிலிருந்து குடோனில் இருந்து அதிகளவில் வண்டுகள் வெளியேறி, வீடுகளுக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்து வருகின்றன. குடோனுக்கு அருகே உள்ள பூமாலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வண்டுகளால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இது குறித்து பகுதிவாசிகள் கூறும்போது,வீடுகளில் வைத்துள்ள குடிநீர், உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட இடங்களில் வண்டுகள் வந்து விழுகின்றன. எங்களை கடித்தும் துன்புறுத்துகின்றன.
இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவிக்கிறோம். இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களில் வண்டுகள் விழுந்து கண்களுக்கு கேடு விளைவிப்பதோடு, விபத்துகள் ஏற்படவும் காரணமாகின்றன. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் வண்டுகள் உருவாகாமல் இருக்க முறையான வழிமுறைகளை கையாள வேண்டும். மாவட்ட நிர்வாகம் தான் எங்களை காக்க வேண்டும்” என்று பகுதிவாசிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    பத்திரிகையாளர் மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    37 min ago
  • திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் தனியார் இடத்தில் சிலர் வேட்டையாடியதாக கூறப்படும் நிலையில் வீட்டில் இருந்த 3 பேரை வனத்துறையினர் பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட வனத்துறை வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் பன்னாங்கொம்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் காவியா மற்றும் வனத்துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வனத்துறையினர் பிடித்த 3 பேரையும் விடுவித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போலீசார் வனத்துறை வாகனத்தை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் 3 மணி நேரம் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
    1
    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் தனியார் இடத்தில் சிலர் வேட்டையாடியதாக கூறப்படும் நிலையில் வீட்டில் இருந்த 3 பேரை வனத்துறையினர் பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட வனத்துறை வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் பன்னாங்கொம்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் காவியா மற்றும் வனத்துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வனத்துறையினர் பிடித்த 3 பேரையும் விடுவித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போலீசார் வனத்துறை வாகனத்தை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் 3 மணி நேரம் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • *குளித்தலை அருகே மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழா முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்* கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் நிகிழ்ச்சியான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேரோடும் நான்கு முக்கிய வீதி வழியாக சென்று தேர் நிலைக்கு வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் வாழைப்பழம் கொண்டு அபிஷேகம் செய்து அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    *குளித்தலை அருகே மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழா முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்*
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் நிகிழ்ச்சியான 
தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேரோடும் நான்கு முக்கிய வீதி வழியாக சென்று தேர் நிலைக்கு வந்தது. 
வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் வாழைப்பழம் கொண்டு அபிஷேகம் செய்து அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    2 hrs ago
  • இடையாத்தூர் கிராமம் ஜல்லிக்கட்டு விழா
    2
    இடையாத்தூர் கிராமம்  ஜல்லிக்கட்டு விழா
    user_Ponnalagu Vijay Tvk
    Ponnalagu Vijay Tvk
    Voice of people பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டான அருகில் தனியார் பேருந்தும்,காரும் மோதி விபத்து
    1
    திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டான அருகில் தனியார் பேருந்தும்,காரும் மோதி விபத்து
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில்  கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது 
சுமார் 4 கோடியே 45 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு 
நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு   பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
நிலக்கோட்டை அரசு மகளிர்  கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ  தலைமை வகித்தார்.
மேலும் இவ்விழாவில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான  சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு,
கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
    user_Abbas Abbas
    Abbas Abbas
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது
    1
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள்  விழா குழுவினர்  வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சி தெத்தூர் அருகே உள்ள மான் பாஞ்சான்பட்டியில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் பாம்பு ஒன்று உலா வந்ததுள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் - அதிர்ச்சி அடைந்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன் மலை பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் விடுவித்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சி தெத்தூர் அருகே உள்ள மான் பாஞ்சான்பட்டியில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் பாம்பு ஒன்று உலா வந்ததுள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் - அதிர்ச்சி அடைந்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன் மலை பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் விடுவித்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.