இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு நேற்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் 307 தேர்வு மையங்களில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், சென்னையில் 43 மையங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் பங்கேற்றனர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், அத்துடன் ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆகியவற்றுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முன்னதாக, 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ம் தேதி நடைபெற்றது. 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில், வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உறுதியானதால், மத்திய அரசு அத்தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என அறிவித்தது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர். மறுதேர்வு நேற்று நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் சுமார் 5,500 மையங்களில் நடைபெற்றது. தேர்வு மையத்துக்குள் காலை 11 மணிமுதல் மதியம் 1.30 மணிக்குள் வந்த மாணவர்கள் மட்டுமே மெட்டல் டிடெக்டர் சோதனை மற்றும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டனர். அதற்குப் பிறகு வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், மதம், கலாச்சாரம் சார்ந்த ஆடைகள், நகை, பெல்ட், அதிக உயரம் கொண்ட ஷூக்கள், காலணிகள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. செல்போன், கால்குலேட்டர், புளூடூத் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக 3 மணி நேரம் நடைபெறும் தேர்வின் நேரம், நிர்வாக நடைமுறைகளால் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கூடுதலாக 15 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டது. தேர்வு மையங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதோடு, ஒருங்கிணைப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் போலீஸாரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நீட் மறுதேர்வுப் பணியில் மொத்தம் 2 லட்சம் அலுவலர்கள் பணியாற்றினர். தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு வினாத்தாள்களை பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையத்துக்கு கொண்டு சென்று தேர்வை சரியாக நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர்கள், இயற்பியல் பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், கடந்த மே மாதம் 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாளை விட இந்த மறுதேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். தேசியத் தேர்வுகள் முகமை நீட் தேர்வு முடிவுகளை 10 நாட்களுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது.

- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, 'மாணவர்களை நான் முதல்வன் என்று சொல்ல வைத்துவிட்டு, ஒரே குடும்பத்தில் இருந்து முதல்வர் வருகிறார்...' என்று குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார்.1
- சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்ட திருவிழா வருகிற ஜூன் 21 அன்று நடைபெறவுள்ளது. இந்த புனித நிகழ்வில் ஓம் நமச்சிவாய அடியார் குரூப்பு மற்றும் சிவ அடியார் குரூப்பு உள்ளிட்ட சிவ அடியார்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.2
- இரவுப் பொழுதில் இன்னிசை மற்றும் அன்பான இரவு வணக்கம் தெரிவிக்கும் விதமாக ஒரு செய்தி பகிரப்பட்டுள்ளது. இது 'good night' என்ற வாழ்த்தையும் உள்ளடக்கியது.1
- தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி இன்று தொடங்கப்பட்டது. வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள காவலர் சமுதாயக் கூடம் அருகே மரக்கன்று நடும் பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பிற அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூன் 22) மாலை ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணகிரி திசையிலிருந்து காய்கறிகளை ஏற்றி வந்த ஒரு மினி லாரி, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார், போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட கீழையூர் பகுதியில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் இன்று (ஜூன் 22) ஆனி திருமஞ்சன விழா விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கோவிலின் உட்பிரகாரத்தில் நடராஜர் உலா வரும் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடந்தேறியது.1
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22.06.2026) மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. புதூர்நாடு, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். இந்தக் குறைதீர்வு கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர், மேலும் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களை அளிக்க மக்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.1
- SKYN MEDIA LIVE சேனல் சார்பாக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.1