logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு அரசின் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 6 இலட்சத்து 75 ஆயிரத்து 24 வீட்டு மின் நுகர்வோர்கள் பயனடைந்து வருகின்றனர்- மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாடு அரசு மூலம் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் 2026 மே 10 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 200 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் சுமார் 4,47,087 நுகர்வோர் இனி மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மொத்தமாக 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் 6,75,024 நுகர்வோர் இந்த திட்டத்தின் பலனைப் பெற்று வருகின்றனர். 501 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு வழக்கம்போல 100 யூனிட் இலவச மின்சாரச் சலுகை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி 100 யூனிட் வரை பயன்படுத்தும் 2,50,608 நபர்களும், 101 முதல் 200 யூனிட் வரைபயன்படுத்தும் 1,96,479 நபர்களும் முழுமையாக மின் கட்டண விலக்கைப் பெறுகின்றனர். மேலும், 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் 1,97,185 நபர்களும், 401 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும் 30,752 நபர்களும் 200 யூனிட் இலவச மின்சாரச் சலுகைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அதிக அளவில் பயனடைந்து, குடும்பங்களின் மின்கட்டணச் சுமை குறைந்து அத்தியாவசிய செலவுகளுக்கு கூடுதல் சேமிப்பை பயன்படுத்த இத்திட்டம் உறுதுணையாக உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தால் தங்களது மின்சுமை குறைந்துள்ளதாகவும், சேமிக்கப்படும் தொகையை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடிவதாகவும் தெரிவித்து, மாவட்டத்தின் பல்வேறு தரப்பினர் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

16 hrs ago
user_குமார்
குமார்
Kariapatti, Virudhunagar•
16 hrs ago

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு அரசின் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 6 இலட்சத்து 75 ஆயிரத்து 24 வீட்டு மின் நுகர்வோர்கள் பயனடைந்து வருகின்றனர்- மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாடு அரசு மூலம் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் 2026 மே 10 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 200 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் சுமார் 4,47,087 நுகர்வோர் இனி மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மொத்தமாக 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் 6,75,024 நுகர்வோர் இந்த திட்டத்தின் பலனைப் பெற்று வருகின்றனர். 501 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு வழக்கம்போல 100 யூனிட் இலவச மின்சாரச் சலுகை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி 100 யூனிட் வரை பயன்படுத்தும் 2,50,608 நபர்களும், 101 முதல் 200 யூனிட் வரைபயன்படுத்தும் 1,96,479 நபர்களும் முழுமையாக மின் கட்டண விலக்கைப் பெறுகின்றனர். மேலும், 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் 1,97,185 நபர்களும், 401 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும் 30,752 நபர்களும் 200 யூனிட் இலவச மின்சாரச் சலுகைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அதிக அளவில் பயனடைந்து, குடும்பங்களின் மின்கட்டணச் சுமை குறைந்து அத்தியாவசிய செலவுகளுக்கு கூடுதல் சேமிப்பை பயன்படுத்த இத்திட்டம் உறுதுணையாக உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தால் தங்களது மின்சுமை குறைந்துள்ளதாகவும், சேமிக்கப்படும் தொகையை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடிவதாகவும் தெரிவித்து, மாவட்டத்தின் பல்வேறு தரப்பினர் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் *விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...* விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்
    1
    பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
*விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த  விருதுநகர்  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...*
விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார்  500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்
    user_Jeyaram
    Jeyaram
    சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார்‌. உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    1
    புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ 
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி  மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார்‌. உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    3 hrs ago
  • தேவகோட்டை அருகே கோவில் திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆவரங்காடு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த புனித ஆடி மாதத்தில், உலக நன்மை மற்றும் அனைவரின் நலனை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.உலக அமைதி, நல்வாழ்வு, மற்றும் அனைவரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும், சமுதாய நன்மைக்காகவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.
    1
    தேவகோட்டை அருகே கோவில் திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது. 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆவரங்காடு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த புனித ஆடி மாதத்தில், உலக நன்மை மற்றும் அனைவரின் நலனை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.உலக அமைதி, நல்வாழ்வு, மற்றும் அனைவரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும், சமுதாய நன்மைக்காகவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    51 min ago
  • ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே பெய்த கனமழையால் அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால் மிகவும் சேதம் அடைந்துள்ளது மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி அருவிக்கு மீறி செல்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
    1
    ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை

தேனி மாவட்டம்  ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ்  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி   அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை  தடை விதித்துள்ளது. 
தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு  மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. 
மேகமலை  ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள்  சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  
ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். 
நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 
ஏற்கனவே பெய்த  கனமழையால்  அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால்   மிகவும் சேதம் அடைந்துள்ளது 
மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. 
இந்நிலையில் தொடர் மழையால்  வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான  பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி  அருவிக்கு மீறி செல்வோர் மீது  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • ஸ்ரீராமர் ஆலயத்தில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர் சிங்கம்புணரி அண்ணா நகரில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர். நல்ல மழை, நோயற்ற வாழ்வு, மாங்கல்ய பலம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றிற்காக விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்தனர். குங்கும அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி பூஜைக்குப் பிறகு அன்னை சீதாதேவிக்கும் மூலவர்களுக்கும் மகாதீபாரத்தி காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    ஸ்ரீராமர் ஆலயத்தில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர்
சிங்கம்புணரி அண்ணா நகரில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர். நல்ல மழை, நோயற்ற வாழ்வு, மாங்கல்ய பலம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றிற்காக விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்தனர். குங்கும அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி பூஜைக்குப் பிறகு அன்னை சீதாதேவிக்கும் மூலவர்களுக்கும் மகாதீபாரத்தி காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் *விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' கண்டன ஆர்ப்பாட்டம்!* விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி, 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' சார்பில் அரசு மருத்துவமனை முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் மருத்துவமனையின் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பராமரிக்கத் தேவைக்கேற்ப தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்த வேண்டும். விபத்துகளில் காயமடைபவர்களுக்கு விரைவாகத் தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் 'தலைக்காய சிகிச்சை பிரிவை' உடனே தொடங்க வேண்டும். மருத்துவமனை உணவகத்தில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளின் அதிகப்படியான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' அமைப்பின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
    1
    அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
*விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' கண்டன ஆர்ப்பாட்டம்!*
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி, 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' சார்பில் அரசு மருத்துவமனை முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் மருத்துவமனையின் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பராமரிக்கத் தேவைக்கேற்ப தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்த வேண்டும். விபத்துகளில் காயமடைபவர்களுக்கு விரைவாகத் தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் 'தலைக்காய சிகிச்சை பிரிவை' உடனே தொடங்க வேண்டும்.
மருத்துவமனை உணவகத்தில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளின் அதிகப்படியான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' அமைப்பின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
    user_Jeyaram
    Jeyaram
    சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    1 day ago
  • *மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* *தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு* *மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* *தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விசிகவினர் அப்பகுதியில் கொடி மரம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விசிக கொடி கம்பம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடி கம்பம் நடப்பட்டதாகவும், இதற்கு விசிக மற்றும் பொது மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இரு கொடி மரங்களையும் அகற்றுவது என வருவாய்த்துறையினர் முடிவு செய்து இன்று நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கொடி மரம் அகற்ற வந்த நிலையில் கொடி மரத்தை அகற்ற அப்பகுதி விசிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விசிகவினர் போலீசாரிடமிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விசிக நிர்வாகியை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி செல்ல முயன்ற போது அவரின் சட்டை கிழிந்ததாக கூறப்படுகிறது, இதில் போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயக்கமடைந்தார், பின்னர் கொடிமரம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்த விசிகவினர் பொது மக்கள் என 94 பேரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து ஆண்டிபட்டி பங்களா பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்துள்ளனர். தவெக கூட்டணி கட்சியான விசிக கொடி கம்பம் அகற்றுவது தொடர்பாக விசிக போலீசாரிடமிடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    *மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* 
*தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு*

*மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* 
*தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு*
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விசிகவினர் அப்பகுதியில் கொடி மரம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விசிக கொடி கம்பம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடி கம்பம் நடப்பட்டதாகவும், இதற்கு விசிக மற்றும் பொது மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது 
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் இரு கொடி மரங்களையும் அகற்றுவது என வருவாய்த்துறையினர் முடிவு செய்து
இன்று நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கொடி மரம் அகற்ற வந்த நிலையில் கொடி மரத்தை அகற்ற அப்பகுதி விசிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் விசிகவினர் போலீசாரிடமிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது விசிக நிர்வாகியை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி செல்ல முயன்ற போது அவரின் சட்டை கிழிந்ததாக கூறப்படுகிறது, இதில் போராட்டத்தின் போது   பெண் ஒருவர் மயக்கமடைந்தார்,
பின்னர் கொடிமரம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்த விசிகவினர் பொது மக்கள் என 94 பேரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து ஆண்டிபட்டி பங்களா பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்துள்ளனர்.
தவெக கூட்டணி கட்சியான விசிக கொடி கம்பம் அகற்றுவது தொடர்பாக விசிக போலீசாரிடமிடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_R.VIJAYA KUMAR
    R.VIJAYA KUMAR
    Salesperson மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.