எழுமின், விழிமின். இலக்கை அடையும் வரை ஓயாது உழைமின் - இந்த வீர முழக்கத்தை வழங்கிய சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். இவருக்கு இவரது பெற்றோர் இட்ட பெயர் நரேந்திரநாத். இவரது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர் இவரது பெற்றோரிடம் சொன்னாராம், இவன் ஒன்று நாட்டை ஆளும் மாமன்னனாவான், அல்லது உலக வாழ்க்கையைத் துறந்து சன்னியாசியாவான் என்று. சிறு வயதிலிருந்தே தியானசித்தராகவும் அதிபுத்திசாலியாகவும் விளங்கிய நரேந்திரர் தனது பதினெட்டாம் வயதில் இராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த பிறகு ஆன்மீக வாழ்க்கையில் ஒரு தெளிவான பாதையைக் கண்டடைந்தார். 1886 ஆம் வருடம் இராமகிருஷ்ண பரமஹம்சரின் மறைவுக்குப் பிறகு நரேந்திரர் துறவறம் பூண்டு சுவாமி விவேகானந்தர் என்ற பெயரை ஏற்றார். பிறகு நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது முப்பதாம் வயதில் அமெரிக்கா சென்று சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு இந்து சமயத்தின் சார்பில் சொற்பொழிவுகளாற்றினார். அவற்றிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலை நாடுகளில் வேதாந்தமும் யோகமும் அறிமுகமாவதற்கு விவேகானந்தர் பெரும் பங்காற்றினார் என்று சொன்னால் அது மிகையல்ல. தலைமுறை தலைமுறையாக இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழும் சுவாமி விவேகானந்தர் அவர்களுடைய பிறந்த தினமான ஜனவரி 12, தேசிய இளைஞர் தினம் என்ற பெயரில் வருடாவருடம் கொண்டாடப்படும் என்று 1984ஆம் வருடம் இந்திய அரசாங்கம் அறிவித்து, அதன்படியே 1985 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

- ஆன்மிகத்தில் மீனுக்கு சிறப்பான இடம் உள்ளது. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரமும் ஒன்றாகும். கோவில் குளத்து மீன்களுக்குப் பொறி போடுவது, நமக்கு கோடான கோடி நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. முன்னோர்கள் குளம் வெட்டி குளத்தில் மீன்களையும் வளர்த்து பின் பொறிகளை உணவாக போடும் பழக்கத்தையும் உண்டாக்கினார்கள். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி மீன்களுக்கு பொறி அளிக்கும் காணொளி1
- *இன்று 12/1/26 திண்டுக்கல் மாவட்ட திமுக தலைமை கழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் I.P.ஆரின் பிறந்த நாள் விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா, விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது*1
- ஆத்தூர்: அய்யம்பாளையத்தல் இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகள் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது, இதில் மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கோவை, தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன பரிசுகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில் குமார் வழங்கினார்1
- திண்டுக்கல் 12/01/26 வானிலை மேகமூட்டத்துடன் லேசான வெப்பத்துடன் 11.50க்கு மலை பெய்யத் தொடங்கியது சுமார் அரை மணி நேரம் அளவான மலை பெய்தது1
- வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து மகாலட்சுமிபுரம் ஐயர் மடம் குறும்பபட்டி இந்த பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தின் மின் மாற்றி பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்மாற்றியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ML வேடசந்தூர் ஒன்றிய குழு சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகிறது1
- தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெள்ளம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது டைப் ஒன்றாம் தேதி பொங்கல் மற்றும் மறுநாள் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு அதிக அளவில் பொதுமக்கள் வீடு மற்றும் மாற்றுத்தழுவத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை வெள்ளம் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாலும் அதற்காக விவசாயிகள் வெள்ளம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்1
- *மணப்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்.* *அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்.* திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கண்ணுடையான்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகில் உள்ள கள்ளிப்பட்டி, மாதம் பட்டி, பூசாரிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இப்பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயிலும் 427 மாணவ, மாணவிகளுக்கு ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தங்கள் ஊர்களில் இருந்து பள்ளிக்கு நடந்து வந்து சென்றதாகவும், தற்போது தமிழக அரசு மிதிவண்டி கொடுத்துள்ளதால் இனி பள்ளிக்கு வருவதில் உள்ள சிரமங்கள் குறையும் எனவும் மிதிவண்டி கொடுத்த தமிழக அரசுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். விழாவில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மணன், தகவல் தொழில் நுட்ப அணி ஶ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடியரசு, கைக்குடி சாமி, மலம்பட்டி சந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி ஶ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்குமார், கிளைச்செயலாளர் இளையராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.1
- ஒட்டன்சத்திரம்: கபாடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய A''கிரேடு கபாடி போட்டி நடைபெற்றது,இதில் பல மாநில அளவிலான ஆண்கள்,பெண்கள் கபாடி அணிகள் கலந்துகொண்டன, 8..1..26.முதல் 11..1..26 வரை 4நாட்கள் நடைபெற்றது இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெண்கள் பிரிவில்,சக்தி பில்டர்ஸ் ,அந்தியூர் ஈரோடு அணியும் ஒட்டன்சத்திரம் SMTஅணியும் விளையாடினர், சக்தி பில்டர் வெற்றிபெற்றது,ஆண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் சென்னை இன்கம் டேக்ஸ் அணியும் பாம்பே பெட்ரேலியம் மோதின ஆட்டத்தில் பாம்பே பெட்ரோலிய அணி வெற்றிபெற்றது, முதல் பரிசாக இரு அணிகளுக்கும் தல பத்து லட்சமும் ,பரிசுக்கோப்பையும் ,இரண்டாவதாக அணிகளுக்கு தல ஏழூ லட்சமும்,பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டது,மேலும் 3வது,4வதுகாக அணிகளுக்கு தல நான்கு லட்சம் வழங்கப்பட்டது, சிறந்த விராருக்கும்,சிறந்த விராங்கனைக்கும்,சிறப்பு பரிசாக இரண்டு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது,நிகழ்ச்சியில் உணவத்துறை அமைச்சர் சக்கரபாணி அமைச்சர் பெரியசாமி, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கின்ர்2