செயின் பறிப்பில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கைது கன்னியாகுமரியில் நடைப்பயிற்சி சென்றவர்களிடம் செயின் பறித்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளிகளை பெங்களூரில் வைத்து கைது செய்து அதிரடி கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மகாதானபுரம் நெடுஞ்சாலையில் நடைப்பயிற்சியை சென்று கொண்டிருந்த மகாதானபுரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மனைவி மங்கலம்(56) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி ராஜலட்சுமி(62) ஆகியோரிடம் 9.5 பவுன் திருட்டு போயிருந்தது. இது குறித்த புகார் சம்பந்தமாக கன்னியாகுமரி காவல் நிலைய குற்ற எண் 82/2026 U/S 304 BNS பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS* அவர்களின் உத்தரவின்படி கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் திரு சுந்தரராஜ பெருமாள் அவர்கள் தலைமையிலான போலீசார் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர் அதிகமான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான விசாரணை செய்யப்பட்டது.இந்நிலையில் இக்குற்றத்தில் ஈடுபட்ட 1. கிருஷ்ணகிரி ஓசூர் பகுதியை சேர்ந்த வேலு குட்டி என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன் (51) 2. கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் அருண்குமார் (38) 3. ஓசூர் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் எஸ்வந்த் குமார் (23) ஆகியோர் என்பது தெரிய வந்தது. விசாரணையில் மேற்படி குற்றவாளிகள் பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளவர்கள் என்பதும் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருட்டுப் போன முழு நகைகளும் திருடுவதற்கு பயன்படுத்திய ஒரு நான்கு சக்கர வாகனமும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக பணியாற்றி குற்றவாளி கைது செய்து நகைகளை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

- கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் காவல்துறை தடுப்பை மீறி கடலில் குதித்த போதை ஆசாமி. * மக்கள் அதிகம் கூடி இருந்த மாலை நேரத்தில் கடலில் உள்ளே சென்ற நபரால் அரைமணிநேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது, * கடலோர காவல்துறை சார்ந்த வீரர்களுக்கு போக்கு காட்டிய நபர் வட மாநிலத்தை சார்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. * போராடி கரைக்கு கொண்டு வந்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தனர்.1
- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சாலையில் தனியார் மருத்துவமனை முன்பாக இரவு நேரங்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் தருகின்றன. இவை சாலையின் நடுவே ஒன்றோடு ஒன்று சண்டையை இடுவதால் இருசக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் அறிமுக கூட்டம் நடந்தது இதில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் அறிமுகப்படுத்தி பேசினார்1
- கயத்தாறு யூனியனைச் சேர்ந்த செட்டி குறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் அருள்மிகு வரணவீராச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்தில் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவைச் இணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன் செட்டி குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.4
- வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்2
- இரண்டாவதாக திமுக பற்றி கண்டன தெரிவித்த பாஜக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ1
- ஜே ஜெயலலிதா vs கருணாநிதி #politics #publicintrest #publicresponse #dmk #admk #tamilnadupolitics1
- நெல்லை மாவட்டம் முக்கூடலில் இன்று மாலை சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. பலத்த சூறை காற்றில் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் உழவர் சந்தை மேற் கூறை காற்றில் பறந்தது. பகலில் பலத்த வெயிலில் வாடிய மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது1