லால்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் நேரில் கள ஆய்வு. திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள், நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிகள் உள்ளிட்டவற்றை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். லால்குடி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள தேவையான நவீன மருத்துவ உபகரணங்களை பெற்றுத்தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.மேலும், பொதுமக்கள் உயர்தர மருத்துவ சேவையை உள்ளூரிலேயே பெறும் வகையில் CT Scan மற்றும் தேவையான நவீன ஸ்கேன் வசதிகளை லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருவது தொடர்பாக சட்டமன்றத்தில் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும், அதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மருத்துவமனை 24 மணி நேரமும் சிறப்பாக செயல்படும் வகையில் தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் அவர் உறுதியளித்தார். லால்குடி அரசு மருத்துவமனையை பொதுமக்களுக்கு அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் கிடைக்கும் வகையில் தனியார் மருத்துவமனைக்கு இணையான தரத்தில் மேம்படுத்துவதே தனது நோக்கம் என்றும் எம்எல்ஏதெரிவித்தார். ஆய்வின்போது, மருத்துவமனையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்து வருவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களை அவர் பாராட்டி, அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ பாலன்,ஒன்றியச் செயலாளர்கள் அருணகிரி, சூப்பர் நடேசன், பிச்சப்பிள்ளை, ஜெயசீலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் லால்குடி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

- முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.1
- டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும். இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது. கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- தலைமலை பட்டிஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தலைமலைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் புதிதாக எழுந்து அருள்பாலிக்க உள்ள அருள்மிகு அஷ்டபுஜமங்கள வாராஹி அம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக முடிந்தது.அதனைத் தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜைகள் நடைபெற்று சுவாமிகள் யாகம் செய்து மண்டல பூஜைகள் நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் பிரசாதம் வழங்கினர்1
- பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: மணப்பாறையில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உற்சாகமாக ஊர்வலம் நடைபெற்றது. மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், ராஜகிரி வழியாக வந்து காமராஜர் சிலையைச் சுற்றி, மணப்பாறை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது, "பேரறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக!", "டாக்டர் கலைஞரின் புகழ் ஓங்குக!", "முதலமைச்சர் தளபதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" மற்றும் "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" உள்ளிட்ட பல்வேறு கழகக் கோஷங்களைத் தொண்டர்கள் விண்ணதிர எழுப்பினர். பேருந்து நிலையத்தை அடைந்த ஊர்வலத்தினர், அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பேருந்து நிலையம் முன்புறம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்குப் பள்ளித் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டர்களுடன் இணைந்து கோஷங்களை எழுப்பினார். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.1
- புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்4
- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சாலையில் தேங்கிய மழை நீர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.1
- முசிறியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தினம் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா அதிமுகவினர். இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு கைகாட்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் நிகழ்வில். முன்னால் அமைச்சர் டிபி பூனாச்சி, முன்னால் எம்எல்ஏக்கள் மல்லிகா சின்னசாமி, செல்வராஜ், முசிறி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிறார் மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட அவைத் தலைவர் ஈஞ்சூர் ராமு, மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், நகரப் பொருளாளர் ராஜேந்திரன், பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம்ஜிஆர், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.1