சட்டமன்ற உறுப்பினர்களாக விஜய், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு மதுரை.. தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில், முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். முதல்வர் விஜய் கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்து எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். தவெக உறுப்பினர்கள் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து வந்திருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று வந்த நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனித்தனி குழுக்களாக வந்தனர். சி.வி.சண்முகம் அவைக்கு வந்தும் பதவியேற்பில் பங்கேற்கவில்லை. முன்னதாக, நேற்று ‘ஆண்டவன் அறிய’ எனப் பதவியேற்ற முதல்வர் விஜய், இன்று ‘உளமாற உறுதி ஏற்கிறேன்’ எனக் கூறி பதவியேற்றார். சான்றிதழை எடுத்து வராததால் அமைச்சர் கீர்த்தனா இன்று பதவியேற்கவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்களாக விஜய், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு மதுரை.. தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில், முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். முதல்வர் விஜய் கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்து எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். தவெக உறுப்பினர்கள் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து வந்திருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,
ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று வந்த நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனித்தனி குழுக்களாக வந்தனர். சி.வி.சண்முகம் அவைக்கு வந்தும் பதவியேற்பில் பங்கேற்கவில்லை. முன்னதாக, நேற்று ‘ஆண்டவன் அறிய’ எனப் பதவியேற்ற முதல்வர் விஜய், இன்று ‘உளமாற உறுதி ஏற்கிறேன்’ எனக் கூறி பதவியேற்றார். சான்றிதழை எடுத்து வராததால் அமைச்சர் கீர்த்தனா இன்று பதவியேற்கவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தார்.
- TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.1
- தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு துவங்கிய மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - அதிகாரிகள் செல்போன் பார்க்கும் அவலம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2 மாதங்களுக்கு பின்பு இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மனுக்களாக அளிக்க வந்தவர்களுக்கு போதுமான இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை மேலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு சில அதிகாரிகள் செல்போன் பார்த்து கொண்டும், செல்போன் பேசிக் கொண்டும் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.2
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதை வரவேற்று இனிப்புகள் வழங்கி, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் வென்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.1
- மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்க்கும் நாளில் அலுவலர்களின் அலட்சியம். நீண்ட நாட்களுக்கு பின்பாக நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் அலுவலர்கள் அனைவரும் செல்போனை பயன்படுத்தியவாறு மக்கள் குறைதீர்க்கும் நாளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள் அதிர்ச்சியில் மக்கள்1
- சான்றிதழை மறந்து வந்த அமைச்சர் கீர்த்தனா! சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க பேரவை செயலாளர் அனுமதி மறுப்பு! உறுதிமொழி எடுப்பதற்காக அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் பேரவையில் அழைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏ'வாக வெற்றி பெற்றதற்கான தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பின்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க பேரவை செயலாளர் சீனிவாசன் அனுமதி மறுப்பு. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் சட்டப்பேரவை செயலாளர் இடம் ஒப்படைத்ததும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்.1