Shuru
Apke Nagar Ki App…
நீண்ட நாட்களுக்குப் பின் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் நீண்ட நாட்களாக நீர்வரத்து இல்லாத காரணத்தினால் வெறிச்சோடி காணப்பட்ட அருவியில் கடந்த 2 தினங்களாக மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் கும்பக்கரை அருவி நீர் வரத்து பகுதியில் பெய்த கன மழை காரணமாக அருவிக்கு நீர் வரத்து வர துவங்கியது அதுவும் ஆர்ப்பரித்து அருவியில் நீர் கொட்டியது இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது
SARAVANAN K
நீண்ட நாட்களுக்குப் பின் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் நீண்ட நாட்களாக நீர்வரத்து இல்லாத காரணத்தினால் வெறிச்சோடி காணப்பட்ட அருவியில் கடந்த 2 தினங்களாக மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் கும்பக்கரை அருவி நீர் வரத்து பகுதியில் பெய்த கன மழை காரணமாக அருவிக்கு நீர் வரத்து வர துவங்கியது அதுவும் ஆர்ப்பரித்து அருவியில் நீர் கொட்டியது இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது
More news from தமிழ்நாடு and nearby areas
- கம்பம் அருகே கூடலூரில் மோடியின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட பாஜக சார்பில் கேக் வெட்டி அறுசுவை உணவு வழங்கி கொண்டாடினர் கூடலூர் அருகே தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடி அறுசுவை உணவு வழங்கி மகிழ்ந்தனர். இன்று இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பாரதப் பபிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை பாரதியார் ஜனதா கட்சியினர் நடத்தி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவரஜா ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் விழாவில் பிரதமர் மோடியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வளர்ச்சி பணிகளையும் நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி இனிப்புகளை வழங்கி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்தளித்து மகிழ்ந்தனர். தேனி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது . பேட்டி: ராஜபாண்டி தேனி மாவட்ட தலைவர் பாரதிய ஜனதா கட்சி2
- *தேனியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் திடீரென வெடித்ததால் பரபரப்பு - சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்* *மாற்று பேருந்து மூலம் ஸ்டெப்னி எடுத்து வரப்பட்டு மாற்றும் பணியில் ஈடுபட்ட ஓட்டுநர்* தேனி மாவட்டம் தேனியில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு சென்ற அரசுப் பேருந்து அங்கிருந்து பயணிகளுடன் தேனி புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது தேனி பங்களாமேடு பகுதியில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது, இதனை அடுத்து சாதுரியமாக செயல்பட்ட பேருந்தின் ஓட்டுனர் பேருந்து சாலை ஓரத்தில் நிறுத்தியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனை அடுத்து பயணிகள் மாற்று பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பேருந்தில் ஸ்டெப்னி டயர் இல்லாததால் மாற்று பேருந்தின் மூலம் ஸ்டெப்னி எடுத்துவரப்பட்டு பேருந்தில் டயரை சரி செய்யும் பணியில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஈடுபட்டனர். தேனியில் இருந்து மூணாறுக்கு மலைப்பாதை மற்றும் கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகளில் செல்லும் இந்த பேருந்தில் முறையாக பராமரிப்பு இல்லாததால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இங்கு நடந்ததை போன்று மலைப்பாதையில் நடந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும் எனவும் இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதை சமூக ஆர்வலர்களின் கோரிக்கை மற்றும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.1
- தேனி மாவட்டம் முழுவதும் மழை... வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு... அணை நீர்மட்டமும் 41 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி தேனி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக இதுவரை 5 மாவட்டங்களின் நீர்ஆதாரமாக விளங்கும் வைகை அணை முன் எப்போதும் இல்லாத அளவில் அடியோடு வறண்டது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் திறக்கப்படும் முதல்போக பாசனத்திற்கான தண்ணீர் இதுவரையில் திறக்கப்படவே இல்லை. அதே நேரம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் மூலம் வைகை அணை சீராக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து பல மாதங்களுக்கு பிறகு அதிகரித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 260 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 608 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோல 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டமும் 41 அடியாக உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வருகிற 21ந்தேதி வரையில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இனிவரும் நாட்களில் வைகை அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேனி மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவது 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.1
- ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 23 சிலைகள் ராமகிருஷ்ணபுரம் ஆனந்த விநாயகர் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து பேருந்து நிலையம், ஆத்து கடை தெரு, சின்ன கடை பஜார், ஆண்டாள் கோவில் ரத வீதிகள், மணிக்கூண்டு, பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருவண்ணாமலை கோனேரி குளம் கண்மாயில் விஜர்சனம் செய்யப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு விருதுநகர் எஸ்பி கவுதம் கோயல் தலைமையில் டிஎஸ்பி பாலசுந்தரம் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.1
- மதுரையில் இன்று தெற்கு மாரட்வீதியில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்குட நன்னீராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது இதில் TVK கட்சியைச்சேர்ந்த .M.M கோபிசன் MLA. அவர்கள் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் மிகச்சிறப்பு செய்தனர்1
- மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் விஸ்வநாதன், ரமேஷ், பெருமாள் குமார் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலை சுற்றி நின்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் கூறும் பொழுது கரகோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று இரவு நான்கு மாசி வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெறவுள்ளது.1
- மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாமகா கும்பாபிஷேக வைபவம், சிறப்புப் பூஜைகளை முடித்து, கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர். வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது 7 புண்ணிய தீர்த்தங்கள் கங்கையில் இருந்து எடுத்துவரப்பட்டு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்களின் இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.1
- க.விலக்கு GHல் சிகிச்சைக்கு வருவோரிடம் பணம் வசூல் செய்பவர் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தேனி கலெக்டர் அறிவிப்பு தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் தேனி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர் அவ்வாறு சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளிடம் அன்புள்ள ஊழியர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு மூன்று நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இந்த குழுவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்பவர்கள் மீது புகார் அளிக்கலாம் என தேனி கலெக்டர் டாக்டர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்1