விருதுநகர் மாவட்டம் குறு, சிறு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் புதிய ஒப்பந்தப்பணிகளை பெற்றிடும் வகையில் தனியார் துறை விற்பனையளார் மேம்பாட்டுக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறு, சிறு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் புதிய ஒப்பந்தப்பணிகளை பெற்றிடும் வகையில் தனியார் துறை விற்பனையளார் மேம்பாட்டுக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி திரு.நாராயணன் அப்பு அவர்கள் முன்னிலையில் இன்று (27.08.2026 ) தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் கண்காட்சியினை தொடங்கி வைத்து தெரிவித்ததாவது, தமிழகத்தில் விருதுநகர் மாவட்டமானது பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்தி திறன் கொண்ட மாவட்டமாக திகழ்கிறது. இங்கு பட்டாசு தொழில், சிறுதானியம் உற்பத்தி, ஆடை தயாரிப்பு, விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இருப்பினும் புவியியல் ரீதியாகவும், தமிழகத்தின் பிற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் ஆகியவை பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக உள்ள பொறியியல் கல்லூரிகள், கலை கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் காரணமாக அதிக எண்ணிக்கையிலானோர் கல்வி மற்றும் தொழில் கல்வி பயின்றுள்ளதனால் மனித வளமிக்க மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மனித வளத்தினை தேர்ந்தெடுப்பதிலும், கல்வி பயின்றுள்ள வேலை நாடுநர்களுக்கு பணி கிடைப்பதிலும் ஒருவித இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்காக தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு சரியான சந்தை வாய்ப்புகளும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களும் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது என தொழில் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் பல்வேறு சூழ்நிலைகளில் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அதேபோல், இந்திய அரசு சேவை துறைகளுக்கு தேவையான உதிரி பாகங்களை புதிய தொழில் முனைவோர்கள், குறு, சிறு வணிக நிறுவனங்களில் இருந்து பெறுவதில் தகவல் தொடர்பு இடைவெளி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அரசின் சேவைத்துறைகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள், பணியாளர்கள், சேவைப்பணிகள் போன்றவற்றில் குறு, சிறு நிறுவனங்களும் பங்கேற்று ஒப்பந்தங்களைப் பெறும் வகையில் இந்த இணைப்புக் கண்காட்சி இன்று (27.08.2026) மற்றும் நாளையும் (28.08.2026) நடைபெறுகிறது. இதன் மூலம் விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திப் திறனை பயன்படுத்தி சேவைத்துறைகளில் தேவை மற்றும் விதிமுறைகளை அறிந்து புதிய ஒப்பந்தங்களைப் பெற்று பயன்பெற வேண்டும். இதன் மூலம் புதிய பணி வாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். இதனை நல்ல முறையில் குறு, சிறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இக்கண்காட்சியில் அரசு மற்றும் பொதுத்துறையைச் சேர்ந்த 40 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க திட்டம், டான்சி மத்திய காலனி பயிற்சி மையம், தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகம், காதி கிராம தொழில் வாரியம், உணவுப் பாதுகாப்பு கழகம், ஒருங்கிணைந்த ஜவுளி மேம்பாட்டு மையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், மத்திய இரயில்வே, இந்திய அஞ்சல் துறை, அரசு இ-வணிக (GEM), கல்பாக்கம் அனல் மின்நிலையம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்திய கனரக வாகன உற்பத்தி தொழிற்சலை போன்ற நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் சிப்பி பொது மேலாளர் திரு.அன்புராஜ், என்.எல்.சி முதன்மை செயல் அலுவலர் திரு.அரவிந்த் ராஜா, என்.பி.சி.எல் இயக்குநர் திரு.அசோக் பாட்டியா, குறு, சிறு தொழில் நிறுவனம் இணை இயக்குநர் திரு.தயாளன், தமிழ்நாடு தொழில் மையம் பொது மேலாளர் திரு.கண்ணன், உதவி இயக்குநர் திரு.கிரண் தேவ், சடுலூரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் குறு, சிறு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் புதிய ஒப்பந்தப்பணிகளை பெற்றிடும் வகையில் தனியார் துறை விற்பனையளார் மேம்பாட்டுக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறு, சிறு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் புதிய ஒப்பந்தப்பணிகளை பெற்றிடும் வகையில் தனியார் துறை விற்பனையளார் மேம்பாட்டுக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி திரு.நாராயணன் அப்பு அவர்கள் முன்னிலையில் இன்று (27.08.2026 ) தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் கண்காட்சியினை தொடங்கி வைத்து தெரிவித்ததாவது, தமிழகத்தில் விருதுநகர் மாவட்டமானது பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்தி திறன் கொண்ட மாவட்டமாக திகழ்கிறது. இங்கு பட்டாசு தொழில், சிறுதானியம் உற்பத்தி, ஆடை தயாரிப்பு, விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்கள்
நிறைந்த மாவட்டமாக உள்ளது. இருப்பினும் புவியியல் ரீதியாகவும், தமிழகத்தின் பிற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் ஆகியவை பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக உள்ள பொறியியல் கல்லூரிகள், கலை கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் காரணமாக அதிக எண்ணிக்கையிலானோர் கல்வி மற்றும் தொழில் கல்வி பயின்றுள்ளதனால் மனித வளமிக்க மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மனித வளத்தினை தேர்ந்தெடுப்பதிலும், கல்வி பயின்றுள்ள வேலை நாடுநர்களுக்கு பணி கிடைப்பதிலும் ஒருவித இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்காக தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு சரியான சந்தை வாய்ப்புகளும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களும் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது என தொழில் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் பல்வேறு சூழ்நிலைகளில் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அதேபோல், இந்திய அரசு சேவை துறைகளுக்கு தேவையான
உதிரி பாகங்களை புதிய தொழில் முனைவோர்கள், குறு, சிறு வணிக நிறுவனங்களில் இருந்து பெறுவதில் தகவல் தொடர்பு இடைவெளி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அரசின் சேவைத்துறைகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள், பணியாளர்கள், சேவைப்பணிகள் போன்றவற்றில் குறு, சிறு நிறுவனங்களும் பங்கேற்று ஒப்பந்தங்களைப் பெறும் வகையில் இந்த இணைப்புக் கண்காட்சி இன்று (27.08.2026) மற்றும் நாளையும் (28.08.2026) நடைபெறுகிறது. இதன் மூலம் விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திப் திறனை பயன்படுத்தி சேவைத்துறைகளில் தேவை மற்றும் விதிமுறைகளை அறிந்து புதிய ஒப்பந்தங்களைப் பெற்று பயன்பெற வேண்டும். இதன் மூலம் புதிய பணி வாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். இதனை நல்ல முறையில் குறு, சிறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இக்கண்காட்சியில் அரசு மற்றும் பொதுத்துறையைச் சேர்ந்த 40 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு தொழில் முனைவோர்
மேம்பாடு மற்றும் புத்தாக்க திட்டம், டான்சி மத்திய காலனி பயிற்சி மையம், தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகம், காதி கிராம தொழில் வாரியம், உணவுப் பாதுகாப்பு கழகம், ஒருங்கிணைந்த ஜவுளி மேம்பாட்டு மையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், மத்திய இரயில்வே, இந்திய அஞ்சல் துறை, அரசு இ-வணிக (GEM), கல்பாக்கம் அனல் மின்நிலையம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்திய கனரக வாகன உற்பத்தி தொழிற்சலை போன்ற நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் சிப்பி பொது மேலாளர் திரு.அன்புராஜ், என்.எல்.சி முதன்மை செயல் அலுவலர் திரு.அரவிந்த் ராஜா, என்.பி.சி.எல் இயக்குநர் திரு.அசோக் பாட்டியா, குறு, சிறு தொழில் நிறுவனம் இணை இயக்குநர் திரு.தயாளன், தமிழ்நாடு தொழில் மையம் பொது மேலாளர் திரு.கண்ணன், உதவி இயக்குநர் திரு.கிரண் தேவ், சடுலூரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர்களின் பதிலுரையை முதலில் வழங்குவது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் காட்டுவது போன்றது : தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதம் சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தார். மேலும், முதன்முறையாக 9 மணி 43 நிமிடங்கள் தொடர்ந்து அவை நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார். எனினும், அவை நேரத்தை கருத்தில்கொண்டு, அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர்கள் இனி முதலில் அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர், அதனைத் தொடர்ந்து பதிலுரை வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு பதிலளித்த திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். தவெகவின் க்ளைமாக்ஸை அனைவரும் நிச்சயமாகப் பார்ப்போம். உங்களுடைய க்ளைமாக்ஸையும் கட்டாயம் காத்திருந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இன்று காலையிலிருந்தே எதை முதலில் சொல்வது, எதை பின்னால் சொல்வது என்பதில் தொடர்ந்து மாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள். காலையில் வந்தவுடனே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்லட்டும்; அதற்குப் பிறகு நீங்கள் பேசுங்கள் என்று சொன்னீர்கள். இப்போது அறிவிப்புகளை எல்லாம் முன்னதாக வெளியிட்டுவிட்டு, பின்னர் அதுகுறித்து பேசுங்கள் என்கிறீர்கள். மொத்தத்தில் பேரவைத் தலைவர் படுத்துக்கட்டும், போர்த்திக்கலாம்; போர்த்திவிட்டும் படுத்துக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டாரா என்பதை நான் அறிய விரும்புகிறேன் என நகைச்சுவையாகக் கூறினார்.1
- மயிலம் அடுத்த பெரமண்டூரில்தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேமுதிக மாவட்ட கழக செயலாளர் எல் வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக மயிலம் வடக்கு ஒன்றியம் பெரமண்டுர் கிராமத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது ஒன்றிய அவைத் தலைவர் டி. சி. முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்த்தின் திரு உருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் இதனை தொடர்ந்து ஒன்றிய கழகச் செயலாளர் ஆர் பி முருகன் கட்சி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி பாலு மகேந்திரன் ஒன்றிய பொருளாளர் பொய்யாது ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் முருகேசன் சங்கர் ராஜேஷ் குபேந்திரன் தாடி முருகன் பாரதி அன்பு ரோஸ் தங்கராஜ் மிருதுளா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்1
- கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை ஆரோக்கியமான குழந்தை பிறப்பு முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட 28 வார கர்ப்பிணிக்கு, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சவாலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். 28 வயதான கர்ப்பிணிக்கு தொடர்ந்து கடுமையான முதுகுத்தண்டு வலி ஏற்பட்டதுடன், நடப்பதில் சிரமமும் மார்புக்குக் கீழ் உணர்விழப்பும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளில் முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நரம்புகளுக்கு அதிக அழுத்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதுகுத்தண்டுவடத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் Decompressive Laminectomy அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க வேண்டும் மற்றும் 28 வார கர்ப்பம் என்பதால் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது தாயின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் சிகிச்சை அளிப்பதுடன், வயிற்றில் இருந்த கருவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது. பரிசோதனைகளில் T1–T2 பகுதியில் முதுகுத்தண்டு பாதிப்பு, முதுகுத்தண்டில் கூன் விழுந்தது போன்ற மாற்றம் மற்றும் நரம்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது ‘பாட்ஸ் ஸ்பைன்’ எனப்படும் முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். C3–T4 பகுதியில் சிக்கலான அறுவைசிகிச்சையை தொடர்ந்து முதுகுத்தண்டுவடத்தை நிலைநிறுத்தும் வகையில் C3–T4 பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல மணி நேரம் நோயாளியை குப்புறப் படுக்க வேண்டியிருந்ததால், தாய் மற்றும் கருவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளின் போது கருவை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் மீண்டும் நன்றாக நடக்கத் தொடங்கினார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், பின்னர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை துறைத்தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் கே. செல்வகுமரன், முதுநிலை நிபுணர் டாக்டர் கே. எம். கவில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். இது மதுரையில் மருத்துவத் துறையின் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது.1
- மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை *மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை* மதுரை மாவட்டம் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 28 வார கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை செய்து சாதனை. மேலும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார் என்பது கூடுதல் சிறப்பு. கிட்டத்தட்ட ஓராண்டாக கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த 28 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு முதுகுத்தண்டுவட காசநோய் உருவானதால் நடப்பதில் சிரமமும், மார்புக்குக் கீழே உணர்ச்சியிழப்பும் ஏற்பட்டுருத்தது. முதுகுத்தண்டுவட அழுத்ததை குறைப்பதற்கான சிகிச்சையையும், திசு நீக்கம் மற்றும் நோயாளியின் சொந்த எலும்புகளைக் கொண்டு முதுகுத்தண்டை நிலைநிறுத்தும் ஒட்டு மொத்த அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. அதே நேரத்தில் கர்ப்பத்திலுள்ள கருவுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாதவாறு உரிய சிகிச்சை அளித்து தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் செல்வமுத்துக் குமரன் கூறினார். உடன் முதுநிலை நிபுணர் மருத்துவர் செந்தில்குமார், இணை நிபுணர் மருத்துவர் கவீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.1
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது துறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது! மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. தூறலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலையிலிருந்து அதிக வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத் தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்1
- காரியாபட்டி பகுதிகளில் தீவிர வாகன சோதனை – 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்; ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் காரியாபட்டி காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் காரியாபட்டி பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வாகனங்களின் RC, FC, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது முறையான ஆவணங்கள் இன்றியும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் இயக்கப்பட்ட செப்டிக் டேங்க் வாகனம், தண்ணீர் வாகனம், டாடா ஏசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், விதிமீறல் செய்த வாகனங்களுக்கு சுமார் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருப்பதுடன், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்துடன் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வாகன சோதனைகள் நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். தீவிர வாகன சோதனை காரணமாக காரியாபட்டி பகுதியில் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.1