logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றுத்துடன் துவக்கம் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதைதொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து மேளதாளத்துடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து அம்மன் காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. வருகிற 5-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதைதொடர்ந்து பொங்கல் வழிபாடு நடை பெறுகிறது. தொடர்ந்து 6-ந்தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல் பகுதிகளில் இருந்துசிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் போலீசார் செய்து வருகின்றனர்

8 hrs ago
user_Batcha
Batcha
செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
8 hrs ago
8b009995-9420-4515-892b-a9350c46e120

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றுத்துடன் துவக்கம் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதைதொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து மேளதாளத்துடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள்

989cbd07-2c17-4081-8461-dda9c2d8339e

மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து அம்மன் காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. வருகிற 5-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதைதொடர்ந்து பொங்கல் வழிபாடு நடை பெறுகிறது. தொடர்ந்து 6-ந்தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல் பகுதிகளில் இருந்துசிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் போலீசார் செய்து வருகின்றனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விராலிமலை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி
    1
    இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விராலிமலை தொகுதியில் போட்டியிடும் 
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் முதல் ஆளாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி. தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியினருடன் வருகை தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்பாளர் அருணகிரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
    1
    மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் முதல் ஆளாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி.
தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் 
மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியினருடன்  வருகை தந்த 
வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்பாளர் அருணகிரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கிழக்கு தொகுதியில் நான் பணியாற்றிய விதத்தை மக்கள் அறிவார்கள். நிச்சயமாக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்களை எதிர்த்து யார் நின்றாலும் கவலையில்லை. விஜய் 2 தொகுதியில் போட்டியிடுகிறார் என்றால் அவர் தெம்பும், திராணியும் அற்றவர் என தெரிவித்தார் எனவும் அறிவாலயத்தை தேவாலயம் கைவிடாது எனவும் விஜயை நிச்சயமாக டெபாசிட் இழக்க வைப்போம்" என தெரிவித்தார்
    1
    திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கிழக்கு தொகுதியில் நான் பணியாற்றிய விதத்தை மக்கள் அறிவார்கள். நிச்சயமாக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்களை எதிர்த்து யார் நின்றாலும் கவலையில்லை. விஜய் 2 தொகுதியில் போட்டியிடுகிறார் என்றால் அவர் தெம்பும், திராணியும் அற்றவர் என தெரிவித்தார் எனவும் அறிவாலயத்தை தேவாலயம் கைவிடாது எனவும் விஜயை நிச்சயமாக டெபாசிட் இழக்க வைப்போம்" என தெரிவித்தார்
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • Post by K.S. PERIYASAMY
    1
    Post by K.S. PERIYASAMY
    user_K.S. PERIYASAMY
    K.S. PERIYASAMY
    ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நதியா தமிழ்செல்வன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தமிழகத்தில் களம் காணும் திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, நாதக, தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நதியா தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இவர் கந்தர்வக்கோட்டை வெள்ளை முனியன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து மேள தாள முழக்கத்தோடு ஊர்வலமாக புறப்பட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முதல் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற  முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நதியா தமிழ்செல்வன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்த சட்டமன்ற
தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. 
தமிழகத்தில் களம் காணும் திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, நாதக, தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நதியா தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இவர் 
கந்தர்வக்கோட்டை வெள்ளை முனியன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து மேள தாள முழக்கத்தோடு ஊர்வலமாக புறப்பட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முதல் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • அறந்தாங்கி தொகுதியில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி அறந்தை தொகுதிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு அனைத்து காவி சொந்தங்களும் பாஜக கூட்டணி அறந்தைதொகுதியை பாஜக கைப்பற்றும்.. வெற்றிவேல் வீரவேல்
    10
    அறந்தாங்கி தொகுதியில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி அறந்தை தொகுதிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு அனைத்து காவி சொந்தங்களும் பாஜக கூட்டணி அறந்தைதொகுதியை பாஜக கைப்பற்றும்.. வெற்றிவேல் வீரவேல்
    user_Ramakrishn Ramakrishna
    Ramakrishn Ramakrishna
    அறந்தாங்கி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் டாக்டர் பிரபு வேட்பு மனு தாக்கல் செய்தார்,அதற்கு முன்னதாக த வெ க கட்சியினர் விசில் சத்தத்துடன், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்,
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில்  காரைக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் டாக்டர் பிரபு வேட்பு மனு தாக்கல் செய்தார்,அதற்கு முன்னதாக த வெ க கட்சியினர் விசில் சத்தத்துடன், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்,
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந் தேதி நடக்கிறது வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது இந்த நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்தியலெட்சுமி தேர்தல் நடத்தும் அலுவலர் கோகுல்சிங்கிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் முன்னதாக இலுப்பூர் பகுதியில் மாட்டு வண்டியில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார்
    1
    தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந் தேதி நடக்கிறது வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடக்கிறது. 
இந்த தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது இந்த நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்தியலெட்சுமி தேர்தல் நடத்தும் அலுவலர் கோகுல்சிங்கிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் 
முன்னதாக இலுப்பூர் பகுதியில் மாட்டு வண்டியில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.