Shuru
Apke Nagar Ki App…
சிவகங்கை விசிக மாவட்ட செயலாளர்கள் தேர்வு விசிக சாா்பில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும், ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து அக்கட்சியின் தலைவா் திருமாவளவன் அறிவித்துள்ளாா். அதன்படி சிவகங்கை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக வழ.பா.வெற்றிவிஜயன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக வழ.வே.பாலையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Santhosh Kumar V
சிவகங்கை விசிக மாவட்ட செயலாளர்கள் தேர்வு விசிக சாா்பில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும், ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து அக்கட்சியின் தலைவா் திருமாவளவன் அறிவித்துள்ளாா். அதன்படி சிவகங்கை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக வழ.பா.வெற்றிவிஜயன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக வழ.வே.பாலையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பொன்னமராவதி: புதிய பேருந்தை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்னமராவதி அருகே உள்ள எம்.உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளுக்கு போதிய பேருந்து வசதி இல்லாமல் அப்போது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் அரசுக்கும், அமைச்சர் ரகுபதியிடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று அமைச்சர் ரகுபதி புதிய பேருந்து வழித்தடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.1
- *திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு தேனியில் பழமை வாய்ந்த சிவ சக்தி விநாயகர் திருக்கோயிலில் ஆண்டாள் நகர்வள புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலமாக சென்றனர்* தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று ஆண்டாளுக்கு நான்காம் ஆண்டு திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக கோயில் வளாகத்தில் வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்திருந்த ஆண்டாளுக்கு ஆபரணங்கள் அணிவித்து கிரீடம் வைத்து வண்ணமலர் மாலைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஆண்டாளுக்கு தீபம் காட்டப்பட்டு கற்பூரம் சுற்றி புறப்பாடு தொடங்கியது பக்தர்கள் சப்பரத்தை இழுத்துச் செல்ல பெண்கள் சீர் வரிசைகளுடன் திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலம் சென்றனர் தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆண்டாளை வழிநடக பக்தர்கள் தரிசனம் செய்தனர் பின்னர் அல்லிநகரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று புறப்பாடு நிறைவு பெற்றது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசனம் செய்து சென்றனர்1
- தென்காசி மாவட்டம் கள்ளம்புளி ஆர்விஎஸ் மகளிர் சுய உதவி குழு நியாய விலை கடையில் தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு பெற 3வது வார்டு பொதுமக்களுக்கு டோக்கன் வழங்காமல் குறிப்பிட்ட சில பொருட்களை மட்டும் தான் கிடைக்கும் என கூறியதாக தெரிகிறது இதனால் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது1
- தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு நான் குற்றாலம் வருவாய் கிராமம் காசிமேஜர்புரத்தில் வசித்து வருகின்றேன்...எனது வீட்டின் தென் பக்கத்தில் வசிக்க கூடிய திரு.சு.வள்ளிநாயகம் என்பார்கள் அடிக்கடி இடையூறு செய்யும் வண்ணமாக செயல்படுகிறார்.கடந்த 10 வருடமாக .99653 70820. அவதூறாக பேசுவது.காசிமேஜர்புரத்தில் முக்கிய சமுதாய நாட்டாமை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல வழிகளில் எங்கள் குடும்பத்தினை இடையூறு செய்து வருகிறார் .இன்று மதியம் என்னே அவமாரியதை செய்யும் போது எனது விட்டின் CCTV வில் பதிவில் இருக்கிறது..இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் இதன் மூலம் எனது மனுவினை பதிவு செய்கிறேன்..1
- நான்கு மாதங்களாக ரேஷன் பொருள் கிடைக்க வில்லையென நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் புலம்பல்... அதிகாரிகள் கருணை காட்ட கோரிக்கை1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் பகுதியில் அமைந்துள்ள புனித கபிரியேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கோலப்போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று வித விதமான கோலங்கள் போட்டு அசத்தினர். ஒவ்வொரு கோலமும் சிறந்தது என கூறும் அளவிற்கு மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.. இறுதியில் நடுவர்கள் சிறந்த கோலங்களை முடிவு செய்து ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா மூன்று பரிசுகள் வீதம் தலைமை ஆசிரியை சிஸ்டர் அடைக்கலமேரி வழங்கினார்கள். மேலும் கோலப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை சென்னையில் ஜன.8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அறந்தாங்கி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பொங்கல் தொகுப்பு உள்ளிட்டவற்றை அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் திமுகவில் இணைந்த தவெகவினர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தவெக தெற்கு ஒன்றிய செயலாளர் பால்பாண்டி தலைமையில் 37 நிர்வாகிகள் 300 உறுப்பினர்கள் சித்தரேவு ஊராட்சியில் இருந்து கொடைக்கானல் திமுக கீழ் மலை தெற்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் மூலமாக 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக வந்து திண்டுக்கல் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளரும் ஆத்தூர் சட்டமன்றத் உறுப்பினர் ஐ பெரியசாமி மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் வாழ்த்துக்களை தெராவித்தனர்1
- தேவதானப்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் கூடாரவல்லி முன்னிட்டு பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் மார்கழி மாதம் 27ஆம் தேதி கூடாரவல்லி முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் பெண்கள் வாழை இலையில் வளையல் மஞ்சள் குங்குமம் மற்றும் குத்துவிளக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு குடும்ப பிரச்சினைகள், மாணவர்களின் கல்வி, தொழில், விவசாயம் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பத்ரகாளியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரணைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் அதன்பின்பு இந்து நாடார் உறவின்முறை சமுதாயம் சார்பாக திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண் பக்தர்களுக்கு அன்பளிப்பு மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்1