மதுரை மத்திய சிறையின் உதவி ஜெயிலர் பாலகுருசாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து ஆவேசமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை எந்ற்படுத்தியுள்ளது. பாலகுருசாமி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ததையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலே உள்ளது செய்தி. சரி இதற்குப் பின்னர் என்ன நடக்குமென்று நினைக்கிறீர்கள்? சிறைத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி செய்த சமூக விரோதச் செயலை பொது வெளியில் வைத்து ஒரு பெண் அம்பலப்படுத்திவிட்டார். நமக்குத் தெரிந்தது இந்த ஒரு சிறைத்துறை அதிகாரி செய்த தவறுமட்டும்தானே? இதைப்போன்று எத்தனை எத்தனை சிறைத் துறை அதிகாரிகள் சிறையிலுள்ள விசாரணைக் கைதிகளிடமும் தண்டனைக் கைதிகளிடமும் சொல்லமுடியாத கொடூரங்களைச் செய்தார்கள் செய்கின்றார்கள் என்று தெரியுமா? இனிமேல்தான் இருக்கிறது இந்தப் பெண்ணின் தகப்பனாருக்கும் இந்தப் பெண்ணிற்கும் இவரின் குடும்பத்தாருக்கும் நடத்தப்படவுள்ள கொடுமைகள். ஏனென்றால் காவல்துறையைப் பொறுத்தவரைக்கும் பொதுவெளியில் ஒரு காவலரைப் பற்றிய உண்மைகள் வெளியில் தெரிந்துவிட்டாலே அதனை வெளியில் சொன்ன நபர்களைக் காணாமலேயே செய்துவிடுவார்கள். ஆனால் இங்கு சிறைத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியின் உண்மை முகம் வெளியுலகிற்குத் தெரிந்துவிட்டது. எனவே சிறைச்சாலையின் மீதும் சிறைத்துறை அதிகாரிகள் மீதும் பயமில்லாமல் போய்விடும் என்ற எண்ணத்தில் அந்த பயத்தை பொதுமக்கள் மத்தியில் எப்போதுமே அனாலாக எரிந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் கொடூரமாக நடவடிக்கை எடுப்பார்கள். இன்னும் சில நாட்களில் சிறையிலுள்ள இந்தப் பெண்ணின் தகப்பனார் மர்மமான முறையில் மரணிக்கலாம். இந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தாரும் காணாமல் ஆக்கப்படலாம் அல்லது தவறான தொழில் செய்பவர்கள் என்றோ அல்லது இவரின் தகப்பனாரின் வழக்கில் பொய்யாகவே சேர்க்கப்பட்டு சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி சாகடிக்கப்படலாம் அல்லது பைத்தியம் என்று பட்டம் கட்டுவார்கள்.... இப்படியாக கண்டிப்பாக நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்.