Shuru
Apke Nagar Ki App…
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முத்தரசி வேட்பு மனு தாக்கல் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் முத்தரசி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுக, அதிமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இதன் மூலம் நாம் தமிழர் கட்சியினர் இந்தத் தேர்தலுக்கு முழுமையாகத் தயாராகிவிட்டனர்.
CHANDRA SEKAR AYYANAR
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முத்தரசி வேட்பு மனு தாக்கல் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் முத்தரசி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுக, அதிமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இதன் மூலம் நாம் தமிழர் கட்சியினர் இந்தத் தேர்தலுக்கு முழுமையாகத் தயாராகிவிட்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி(190) வேட்புமனு தாக்கல் தொடங்கியது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நாகலெட்சுமி திருமாறன் வாடிப்பட்டியில் கட்சியினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர் பிறகு ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்1
- தங்கையைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்ட அண்ணன் படுகொலை - உறவினர்கள் சாலை மறியல். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில், பள்ளி செல்லும் தனது தங்கையைக் கேலி செய்தவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (28). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சூர்யாவின் தங்கை அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறார். பள்ளிக்குச் செல்லும் போது சில சிறுவர்கள் தனது தங்கையைக் கேலி செய்ததாகத் தெரிகிறது. இது குறித்துப் பள்ளிக்குச் சென்ற சூர்யா, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டித்துள்ளார். இந்த மோதல் காரணமாக, இன்று ஊரின் மையப்பகுதியான கனரா வங்கி அருகே சூர்யா மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இத்தகவல் அறிந்து விரைந்து வந்த சின்னமனூர் காவல்துறையினர், சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, சூர்யாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சின்னமனூர் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து எங்கள் முன் நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சின்னமனூர் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள் தனது தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை இன்று (மார்ச் .30) மாலை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்வில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 4ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.1
- மதுரை: திமுக ஐடி விங் இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளது. அந்த வீடியோவின் கீழ் வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பதிவேற்றம் செய்துள்ள இந்த வீடியோவிற்கு கீழே வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. அதை அப்படியே வாசகர்களுக்கு ஒரு செய்தியாளர் என்ற அடிப்படையில் தந்துள்ளேன். கூடுதல் விவரங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் முகநூல் பக்கத்தில் காணலாம்.1
- மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் முதல் ஆளாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி. தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருணகிரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியினருடன் வருகை தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் வேட்பாளர் அருணகிரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.1
- திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கிழக்கு தொகுதியில் நான் பணியாற்றிய விதத்தை மக்கள் அறிவார்கள். நிச்சயமாக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்களை எதிர்த்து யார் நின்றாலும் கவலையில்லை. விஜய் 2 தொகுதியில் போட்டியிடுகிறார் என்றால் அவர் தெம்பும், திராணியும் அற்றவர் என தெரிவித்தார் எனவும் அறிவாலயத்தை தேவாலயம் கைவிடாது எனவும் விஜயை நிச்சயமாக டெபாசிட் இழக்க வைப்போம்" என தெரிவித்தார்1
- *ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆண்டிப்பட்டியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ள மகாராஜன் தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கும், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த இருவருக்கும் ஆண்டிபட்டி நகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது தொடர்ந்து ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு கலர் பலூன்களை கட்டி வேட்பாளர்களிடம் தொண்டர்கள் ஆர்வமாக கொடுக்க அதனை வாங்கிய வேட்பாளர்கள் மேலே பறக்க விட்டனர் இதையடுத்து தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்ப உற்சாக வெள்ளத்தில் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.1
- இன்று வாடிப்பட்டியில் அ.இ.அ.தி.மு.க.நகர் சார்பாக அருணா காம்பளக்சில் காலை பத்து மணிக்கு சட்டமன்ற வேட்பாளர் மாணிக்கம் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பதினெட்டு வார்டு செயலாளர்களும் மற்றும். நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1