தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், நெட்டூர் மாதா கோவில் தெருவில் பட்டியலின இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான சாதி வெறித் தாக்குதல், தமிழகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறையின் கோர முகத்தை அப்பட்டமாகப் பிரதிபலிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. காவல்துறை உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதும், சாதிய ஆதிக்க சக்திகளின் வெறியாட்டமுமே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த மே 29 அன்று நெட்டூர் கிராமத்தில் ஒரு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், முந்தைய நாள் இரவு மணமகனின் உறவினர்கள் ப்ளெக்ஸ் பேனர் அமைத்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர் ஒருவர் தகராறு செய்துள்ளார். ஆலங்குளம் காவல்துறைக்கு இது தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த தகவலின்படி, கடந்த 5 மாதங்களில் மட்டும் நெட்டூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது சுமார் 8 வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு முறையும் புகார் அளிக்கப்பட்டாலும், அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, கட்டப்பஞ்சாயத்து முறையில் சமாதானம் பேசிப் பிரச்சினைகளை மூடிமறைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். மே 28 அன்று நடைபெற்ற ஆரம்பகட்ட மோதலிலும், காவல்துறை வழக்கமான அலட்சியத்துடன் சமாதானம் பேசி அனுப்பி வைத்ததன் விளைவாகவே, மறுநாள் மாலை மிகக் கொடூரமான தாக்குதல் அரங்கேறியுள்ளது. மே 29-ஆம் தேதி திருமண விருந்தில் உறவினர்களும் நண்பர்களும் கூடியிருந்தபோது, 3 இருசக்கர வாகனங்களில் முகத்தை மறைத்தபடி வந்த 9 பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் வெறிக்கூச்சல் போட்டுள்ளனர். அவர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மண் தெரியாமல் வெட்டரிவாளை வீசித் தாக்கியுள்ளனர். இதில் ரமேஷ் (49), சந்தோஷ் குமார் (21), அருள்மாறன் (23), ராயப்பன் (18), ராம்குமார் (20) மற்றும் மேளக் கலைஞர் மாடசாமி (19) உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த இவர்கள் அனைவரும் முதலில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பின்புலமாக, திருமண வீட்டில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளைச் சகித்துக் கொள்ள முடியாத சாதிய மனநிலைதான் உள்ளது என பெ.சண்முகம் கடுமையாகக் கண்டித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் இத்தகைய சாதிய ஆதிக்க வன்கொடுமைகளும், சொத்துக்கள் அழிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருவதையும், காவல் நிலையத்திலேயே வழக்குகளைச் சமாதானமாக முடித்து வைப்பதால்தான் குற்றவாளிகள் எவ்வித பயமும் இன்றி இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும், அவர்களுக்கு உள்ளூரிலிருந்து ஆதரவு அளித்தவர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், கடமையில் தவறிய காவல்துறையினர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான சட்டப்படியான தீருதவி, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதேபோல், நெட்டூர் கிராமத்திற்குச் சென்ற தென்காசி மாவட்டச் செயலாளர் உச்சிமாகாளி மற்றும் கட்சி நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நீதி கிடைக்கும் வரை தாங்கள் துணை நிற்போம் என்று உறுதியளித்துள்ளனர்.

- மதுரை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் அவர்களின் பணி நிறைவு நிகழ்வு இன்று (மே.30) மதுரை தெப்பக்குளம் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல்துறை உயர் அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு உதவி ஆணையர் செல்வின் அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி, அவருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுப் பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கும் பாராட்டுக்களுக்கும் நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.1
- சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ். கோட்டை அருகே உள்ள எருமைப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மேலூர் - காரைக்குடி சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், பெரிய மாட்டுப் பிரிவிற்கு ஏழு மைல் தூரமும், சிறிய மாட்டுப் பிரிவிற்கு ஐந்து மைல் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப் பாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் சென்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தன. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். எஸ்.எஸ். கோட்டை, எருமைப்பட்டி, மேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று, இந்த மாட்டு வண்டி பந்தயத்தை உற்சாகமாக கண்டுகளித்தனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகா பகுதியில் கடும் வெயிலின் காரணமாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது சித்தரேவு ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மேலும், விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மழையாக இது அமைந்திருப்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் செங்கரையில் அமைந்துள்ள 1500 ஆண்டு பழமையான அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில், இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, ஓம் என்ற வடிவத்தில் சங்குகள் அடுக்கி வைத்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், வள்ளி, தெய்வானை மற்றும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், விபூதி, பேரிச்சம்பழம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. யாகசாலையில் வைக்கப்பட்ட சங்குகளில் உள்ள தீர்த்தங்களைக் கொண்டு 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு வண்ணப் பட்டுத் துணிகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு "அரோகரா அரோகரா" எனக் கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.1
- தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சன்னாசி (34) என்பவர், தனது மனைவி தனலட்சுமி மீது திருமண மோசடி புகார் அளித்துள்ளார். தனலட்சுமி தன்னை ஏமாற்றி, நகைகளை அபகரித்து, தற்போது வேறொருவருடன் நான்காவது திருமணம் செய்துகொண்டதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சன்னாசி குற்றம்சாட்டியுள்ளார். ஓட்டுனராகப் பணிபுரியும் சன்னாசி, 2024 ஆம் ஆண்டு தேனி அம்மாபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமியை திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக வசித்து வந்த சமயத்தில், சன்னாசி பணி நிமித்தமாக வெளியூர் சென்றபோது, தனலட்சுமி வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய சன்னாசி நகைகள் குறித்து கேட்டபோது, அவற்றை அடமானம் வைத்திருப்பதாகவும், மீட்டுத் தருவதாகவும் தனலட்சுமி கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். தனலட்சுமி வீட்டிற்கு வராமலும், நகைகளைத் திருப்பிக் கொடுக்காமலும், தனது மனைவியும் அவரது தாயாரும் தன்னை ஏமாற்றி வந்ததாகவும் சன்னாசி குறிப்பிட்டுள்ளார். நேரில் சென்று கேட்க முயன்றபோது, தனது மனைவி கோயம்புத்தூர் சென்றுவிட்டதாக அவரது தாயார் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் விசாரித்ததில், தனலட்சுமி கோயம்புத்தூரில் வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததாக சன்னாசி கூறியுள்ளார். தனக்கு முன்னால் தனலட்சுமி இரண்டு நபர்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்தும் நகைகளைப் பறித்து ஏமாற்றியுள்ளதாகவும், இப்போது தன்னிடமும் நகைகளை அபகரித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவரை நான்காவது திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் சன்னாசி புகார் தெரிவித்துள்ளார். தன்னைப்போல் வேறு யாரும் ஏமாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மோசடி செய்த தனது மனைவி மற்றும் அவரது தாயார் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் சன்னாசி கோரிக்கை விடுத்துள்ளார்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பி. அழகாபுரி கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிக்கும் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த ஒரு வெடி விபத்தில், அதன் உரிமையாளர் கருப்பையா (எ) கணேசன் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் விபத்தில் உயிரிழந்த கணேசனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.1
- ரெட்டியார்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் கனமழையால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நாளில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாகப் பால்குடம் எடுத்து வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த இந்தப் பால்குடத்தில் இருந்து பெறப்பட்ட பால், விசாக கொறடு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சண்முகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், கடவுளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட இந்தப் பாலை கோவில் நிர்வாகம் முறையாகச் சேகரிக்கவில்லை. மாறாக, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் என நம்பப்பட்ட இந்த அபிஷேகப் பாலை கோவில் நிர்வாகம் சாக்கடையில் திறந்து விட்டது. இந்த செயலால் பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தனர். விரதம் இருந்து கொண்டு வரப்பட்ட அபிஷேகப் பாலை கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு முறையாக வழங்காமல் சாக்கடையில் கலந்து விட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் கோவில் நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.1