logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மணப்பாறை புனித லூா்து அன்னை தேவாலய திருவிழா மணப்பாறையில் பிரசித்திபெற்ற புனித லூா்து அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 86-ஆவது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு தேவாலயம் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆலயத்திருவிழாவை முன்னிட்டு, நவநாள் வழிபாட்டு நிகழ்ச்சிகள் கடந்த வாரம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 10-ஆம் நாளும், நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேராலயத்தில் திருச்சி கிராப்பட்டி மறைவட்டம், புனித குழந்தைதெரசாள் ஆலய பங்குதந்தை மறைவட்ட முதல்வா் விக்டா் இமானுவேல், மணப்பாறை மறைவட்ட முதல்வா் பங்குதந்தை தாமஸ் ஞானதுரை, பங்கு தந்தை மரிய அருள்ராஜா, பங்குதந்தை சகாய ஆண்டோராஜ் ஆகியோா் பங்கேற்ற சிறப்பு திருப்பலி நடத்தி புனித லூா்து அன்னை ஆயரால் புனிதப்படுத்தப்பட்டது. பின்னா், வாணவேடிக்கைகள், இசைவாத்தியங்கள் முழங்க திருத்தேரில் புனித லூா்து அன்னை தோ் பவனி நடைபெற்றது. திருத்தோ் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

9 hrs ago
user_Usha arun News
Usha arun News
Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
9 hrs ago
73371f98-7fe5-45f1-8abc-0f9abe5d5bf6

மணப்பாறை புனித லூா்து அன்னை தேவாலய திருவிழா மணப்பாறையில் பிரசித்திபெற்ற புனித லூா்து அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 86-ஆவது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு தேவாலயம் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆலயத்திருவிழாவை முன்னிட்டு, நவநாள் வழிபாட்டு நிகழ்ச்சிகள் கடந்த வாரம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 10-ஆம் நாளும், நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேராலயத்தில் திருச்சி கிராப்பட்டி மறைவட்டம், புனித குழந்தைதெரசாள் ஆலய பங்குதந்தை மறைவட்ட முதல்வா் விக்டா் இமானுவேல், மணப்பாறை மறைவட்ட முதல்வா் பங்குதந்தை தாமஸ் ஞானதுரை, பங்கு தந்தை மரிய அருள்ராஜா, பங்குதந்தை சகாய ஆண்டோராஜ் ஆகியோா் பங்கேற்ற சிறப்பு திருப்பலி நடத்தி புனித லூா்து அன்னை ஆயரால் புனிதப்படுத்தப்பட்டது. பின்னா், வாணவேடிக்கைகள், இசைவாத்தியங்கள் முழங்க திருத்தேரில் புனித லூா்து அன்னை தோ் பவனி நடைபெற்றது. திருத்தோ் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் தனியார் இடத்தில் சிலர் வேட்டையாடியதாக கூறப்படும் நிலையில் வீட்டில் இருந்த 3 பேரை வனத்துறையினர் பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட வனத்துறை வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் பன்னாங்கொம்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் காவியா மற்றும் வனத்துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வனத்துறையினர் பிடித்த 3 பேரையும் விடுவித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போலீசார் வனத்துறை வாகனத்தை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் 3 மணி நேரம் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
    1
    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியில் தனியார் இடத்தில் சிலர் வேட்டையாடியதாக கூறப்படும் நிலையில் வீட்டில் இருந்த 3 பேரை வனத்துறையினர் பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட வனத்துறை வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் பன்னாங்கொம்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் காவியா மற்றும் வனத்துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வனத்துறையினர் பிடித்த 3 பேரையும் விடுவித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போலீசார் வனத்துறை வாகனத்தை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் 3 மணி நேரம் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • அன்னவால் அருகே 3 வைக்கோல் போர்கள் தீயில் எரிந்து நாசமானாது தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீபரவாமல் அனைத்தனர். அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் இளங்கோவன், லெட்சுமி, வசந்தா, இவர்களுக்கு சொந்தமான வைக்கோல் போர்கள் ஊரிற்குள் மைய பகுதியில் அடுத்தடுத்து உள்ளது இந்த 3 வைக்கோல் போர்களும் அடுத்தடுத்து திடிரென தீ பிடித்தது. இதில் மலமலவென பிடித்த தீயினால் 3 வைக்கோல் போர்களும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு  நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்புதுறை வீரர்கள் போராடி மேலும் தீபரவாமல் தீயை அனைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
    1
    அன்னவால் அருகே 3 வைக்கோல் போர்கள் தீயில் எரிந்து நாசமானாது தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீபரவாமல்  அனைத்தனர். 
அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியை  சேர்ந்தவர்கள் இளங்கோவன், லெட்சுமி, வசந்தா, இவர்களுக்கு சொந்தமான வைக்கோல் போர்கள் ஊரிற்குள் மைய பகுதியில் அடுத்தடுத்து உள்ளது இந்த 3 வைக்கோல் போர்களும் அடுத்தடுத்து  திடிரென தீ பிடித்தது. இதில்  மலமலவென பிடித்த தீயினால் 3 வைக்கோல் போர்களும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. 
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு  நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர்  தீயணைப்புதுறை வீரர்கள் போராடி மேலும் தீபரவாமல் தீயை அனைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • *குளித்தலை அருகே மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழா முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்* கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் நிகிழ்ச்சியான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேரோடும் நான்கு முக்கிய வீதி வழியாக சென்று தேர் நிலைக்கு வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் வாழைப்பழம் கொண்டு அபிஷேகம் செய்து அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    *குளித்தலை அருகே மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழா முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்*
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் நிகிழ்ச்சியான 
தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேரோடும் நான்கு முக்கிய வீதி வழியாக சென்று தேர் நிலைக்கு வந்தது. 
வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் வாழைப்பழம் கொண்டு அபிஷேகம் செய்து அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    53 min ago
  • இடையாத்தூர் கிராமம் ஜல்லிக்கட்டு விழா
    2
    இடையாத்தூர் கிராமம்  ஜல்லிக்கட்டு விழா
    user_Ponnalagu Vijay Tvk
    Ponnalagu Vijay Tvk
    Voice of people பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில்  கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது 
சுமார் 4 கோடியே 45 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு 
நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு   பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
நிலக்கோட்டை அரசு மகளிர்  கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ  தலைமை வகித்தார்.
மேலும் இவ்விழாவில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான  சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு,
கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
    user_Abbas Abbas
    Abbas Abbas
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது
    1
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள்  விழா குழுவினர்  வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் தீமிதி விழா !! கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கை மாருளாளி வினோதினி தலைமையில் அங்காள பரமேஸ்வரி கோவில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் கரகம் பாலித்து, விரதம் இருந்த பக்தர்கள் அலகுகுத்தியும், தீமிதித்தும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். திருநங்கைகள் வழிபடும் இக்கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் தீமிதி விழா !!
கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கை மாருளாளி வினோதினி தலைமையில் அங்காள பரமேஸ்வரி கோவில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் கரகம் பாலித்து, விரதம் இருந்த பக்தர்கள் அலகுகுத்தியும், தீமிதித்தும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். திருநங்கைகள் வழிபடும் இக்கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_Boo news
    Boo news
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சி தெத்தூர் அருகே உள்ள மான் பாஞ்சான்பட்டியில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் பாம்பு ஒன்று உலா வந்ததுள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் - அதிர்ச்சி அடைந்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன் மலை பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் விடுவித்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சி தெத்தூர் அருகே உள்ள மான் பாஞ்சான்பட்டியில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் பாம்பு ஒன்று உலா வந்ததுள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் - அதிர்ச்சி அடைந்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன் மலை பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் விடுவித்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.