தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் 55 ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழா சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூாயில் 55-ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவைக் கல்லூரித் தலைவர் அண. லெட்சுமணன் செட்டியார் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார். அவர்தம் தலைமையுரையில் கல்வி வள்ளல் அண்ணாமலை செட்டியார் அவர்கள் ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்பதற்காக உருவாக்கிய இக்கல்லூரி 55ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் இவ்வேளையில் இங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்வி வள்ளல் அண்ணாமலை செட்டியார் அவர்களின் வழியைப் பின்பற்றி நடக்க வேண்டும். தன்னம்பிக்கையும் குறிக்கோளும் உடையவர்களாக நீங்கள் இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் எனப் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளரும் எழுத்தாளருமான குரள் இனிது சோம. வீரப்பன் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில் பணம் கொடுத்து விட்டால் மட்டும் அது தர்மம் ஆகாது அதனை முறைப்படுத்தி நடத்துவதே தர்மம் இதனை இக்கல்லூரியின் நிறுவுநர் நன்கு அறிந்துள்ளார். ஆகவேதான் இன்றும் சிறப்போடு இக் கல்லூரி இயங்கி வருகின்றது. கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வேலைவாய்ப்பில் உச்சத்தைத் தொட வேண்டுமென்றால் கண்டிப்பாக இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில் நல்ல நட்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள், பிறரிடம் பேசும்போது தயவுசெய்து, நன்றி, மன்னித்து விடுங்கள் ஆகிய மூன்று பணிவான சொற்களைப் பயன்படுத்துங்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் மூத்தோர்கள் ஆகியோருக்கு மரியாதை கொடுங்கள், இவையெல்லாம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமானால் திருக்குறளை மட்டும் படியுங்கள் உங்கள் வாழ்வு செழிக்கும் என உரையாற்றினார். முன்னதாக கல்லூரியின் ஆட்சிக் குழுப் பொருளாளர் லெ. சேவுகன் முன்னிலை உரையாற்றினார். அவரது உரையில் மாற்றங்களை உருவாக்குவதே சிறப்பான வளர்ச்சி. ஒவ்வொருவரும் மாற்றங்களுக்கு ஏற்றது போல் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் எனப் பேசினார். கல்லூரியின் முன்னாள் முதல்வரும் தற்போதைய சுயநிதிப் பிரிவு இயக்குநருமான பேராசிரியர் சுப.அருணாசலம் முன்னிலை ஏற்றார். இவ்விழாவில் கல்லூரியின் அனைத்துத் துறைகளிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் பேராசிரியர் இரா.நாவுக்கரசு 2025 - 2026ஆம் ஆண்டிற்கான கல்லூரிச் சாதனைகளை ஆண்டறிக்கையாகச் சமர்ப்பித்தார். கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் கஸ்தூரிபா தேவசேனா வரவேற்றார். தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கண்மணி நன்றி கூறினார். பொருளியல்துறைப் பேராசிரியர் முனைவர் காயத்ரி தேவி தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்கள் முனைவர் முத்தையா, முனைவர் ஆறுமுகம், முன்னாள் விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் குமரப்பன், தேவகோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் சேவுகன் செட்டியார், ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ஜோசப் செல்வராஜ், நகரத்தார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கணேசன், சிவன் கோவில் அறங்காவலர்கள், வருமான வரி பயிற்சியாளர் துரை, முன்னாள் பொறியியல் கல்லூரி முதல்வர் வள்ளியப்பன், நாகப்பன் செட்டியார் மற்றும் நகர்ப் பிரமுகர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் டாக்டர் பிரபு வேட்பு மனு தாக்கல் செய்தார்,அதற்கு முன்னதாக த வெ க கட்சியினர் விசில் சத்தத்துடன், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்,1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகப்பிரியா இன்று மானாமதுரை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்கு முன்பு, மானாமதுரையில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மேளதாளங்களுடன், ஏர் கலப்பையை சுமந்து மற்றும் ஜல்லிக்கட்டு காளையுடன் சுமார் 5 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.1
- காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கும், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், மாமன்னர்கள் மருது சகோதரர்கள் திரு உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். *அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது* ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் 2026 தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தல் முன்னிட்டு தமிழகத்தினுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர் கட்சித் தலைவர் , தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராக அமரக்கூடிய எடப்பாடி யார் அவர்கள் என்னை திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக என்னை அறிவித்தார்கள். அறிவித்தவுடன் அவர்களை நேற்று தினம் தூத்துக்குடியில் சந்தித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் களப்பணி பற்றிகளையும், ஏழு சட்டமன்ற தொகுதி வெற்றி பெறுவது பற்றியும் ஆலோசனை வழங்கினார். இன்றைய தினம் ஆவியூரில் எனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து தற்போது காரியாபட்டியில் உள்ளேன். இந்த தொகுதியிலே பல நிலவரங்கள் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் கள நிலவரத்தை பற்றி எனக்கு நன்கு தெரியும். நான் 35 ஆண்டு காலம் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சாதாரண கூலி வேலை பார்த்து டிரைவராக இருந்து. இன்றைக்கு ஒரு சட்டப்பேரவையின் உறுப்பினராகி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும் அந்த இரண்டு ஆண்டு காலத்திலும் சாத்தூர் மக்களிடையே என்னை எப்படி பார்த்தார்கள் நான் எப்படி அவர்களிடம் நடந்து கொண்டேன் என்பது அந்த தொகுதி மக்களுக்கு தெரியும். உங்களை எதிர்த்து நிதி அமைச்சர் போட்டியிடுகிறார் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு நிதி அமைச்சர் நிற்கிறார், ஸ்டாலின் நிற்கிறார், உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்று நான் பார்க்கவில்லை. அண்ணா திமுகவில் சாதாரண தொண்டரும் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம் என்ற வரலாற்றை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மாவும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். நான் வெற்றியை வந்து. நான் எப்படி களப்பணி ஆற்றுவேன் என்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். நீங்கள் ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள், உள்ளத்தைப் பார்த்து எடை போடாதீர்கள், உயரத்தைப் பார்த்து எடை போடாதீர்கள், நான் களத்தில் மோதணும் நினைத்தால் வெற்றி ஒன்று இலக்காகதான் இருக்கும். நான் எல்லாத்தையும் சந்தித்து எல்லாத்தையும் பார்த்து எல்லாரிடமும் ஆலோசனை நடத்தி விட்டு தொகுதி நிலவரம் அனைத்தும் எனக்கு தெரியும் 1996 -ல் ஐயா தங்கபாண்டியன் அவர்கள் வேட்பாளராக இருக்கும்போது, அண்ணாச்சி சுந்தரபாண்டியன் அவர்கள் இருக்கும்போது இந்த தொகுதியும் எனது கால் படாத இடங்கள் கிடையாது. எதுவென்றாலும் நான் ஓப்பனாக பேசுவேன், எதிலும் நேர்மையாக இருப்பேன், யாரை எதிர்த்தாலும் நேர்மையாக தான் எதிர்ப்பேன், யாரை ஆதரித்தாலும் நேர்மையாக தான் ஆதரிப்பேன், திருச்சுழி சட்டமன்றத் தொகுதி அதிமுக தொண்டர்கள் உண்மையிலேயே எந்தவித பிரதிபலனும் அடையவில்லை ஒரு சில பேர் அவர்களுடைய சுய லாபத்திற்காக 24 ஆண்டுகள் இந்த கட்சியை வந்து பாழாக்கி பந்தகாடாக்கி வைத்துள்ளார்கள். நான் முன்னாள் நிர்வாகிகள் அனைவருடன் பேசி திருச்சுழி தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு தேவையானது செய்வேன். ஒரு சில புல்லுருவிகள் இருந்து கட்சியை வாலாக்கனும் , பாலக்கனும் என்று நினைக்கிறார்கள் நான் அதை விடவே மாட்டேன் அதற்கு ஒரு முடிவு காலம் கட்டி தான் இந்த திருச்சுழி தொகுதியில் இருந்து வெளியேறுவேன்.1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள் தனது தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை இன்று (மார்ச் .30) மாலை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்வில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 4ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.1
- மதுரை: திமுக ஐடி விங் இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளது. அந்த வீடியோவின் கீழ் வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பதிவேற்றம் செய்துள்ள இந்த வீடியோவிற்கு கீழே வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. அதை அப்படியே வாசகர்களுக்கு ஒரு செய்தியாளர் என்ற அடிப்படையில் தந்துள்ளேன். கூடுதல் விவரங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் முகநூல் பக்கத்தில் காணலாம்.1
- அறந்தாங்கி தொகுதியில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி அறந்தை தொகுதிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு அனைத்து காவி சொந்தங்களும் பாஜக கூட்டணி அறந்தைதொகுதியை பாஜக கைப்பற்றும்.. வெற்றிவேல் வீரவேல்10
- இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி(190) வேட்புமனு தாக்கல் தொடங்கியது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நாகலெட்சுமி திருமாறன் வாடிப்பட்டியில் கட்சியினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர் பிறகு ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி கயல்விழி, தாயார் அண்ணமாளுடன் வந்து சார் ஆட்சியர் ஆயூஸ் வெங்கட் வர்ஸிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, வேலையில்லாதவனுக்கு நான்காயிரம் கொடுப்பவன் நல்ல தலைவன் இல்லை என்றும், வேலை கொடுப்பவனே தலைவன். அவன்தான் சிறந்த ஆட்சியாளர் என்றவர், டாஸ்மார்க் கடையை திறந்து வைத்து விட்டு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இப்படி சாத்தியம். மதுக்கடை வருமானத்தை வைத்து கொடுமையான ஆட்சி நடைபெறுவதை எப்படி சகித்து கொண்டு இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார். ஏற்கனவே 10.5 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில் மேலும் இலவச திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் மேலும் பல லட்சம் கோடி கடன் வாங்கும் நிலை ஏற்படும் என குற்றம் சாட்டியவர், ஒவ்வொரு ஆண்டும் மக்களை வெள்ளத்தில் மிதக்கவிட்டு வெள்ள நிவாரணம் கொடுப்பது நல்ல ஆட்சி இல்லை. வெள்ள பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பது தான் நல்லாட்சி என கூறியவர், ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்த போது இலவசங்களை மக்கள் விரும்பவில்லை என்று கூறிவிட்டு இப்போது திருப்பி இலவச திட்டங்களை அறிவிப்பதாக என குற்றம் சாட்டினார். ஸ்டாலின் 23 கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பது பயத்தினால் அவர்களிடம் நேர்மை துளி அளவும் இல்லை. ஐயா ராமதாஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். சாட்டை துரைமுருகன் ஐய்யாவை விமர்சனம் செய்ததை நான் கண்டித்தேன் என்றவர், நாடாளுமன்ற உறுப்பிரான திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் நிற்பது ஏற்புடையது அல்ல என்றார். தொடர்ந்து ஓட்டுக்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் மற்றும் பாஜக கொண்டு வந்ததாக குற்றம் சாட்டியவர், திட்டத்தால் எந்த ஒரு பலனும் இல்லை என்றவர், தனது கிராமத்தில் உள்ள அனைவரும் 100 நாள் திட்டத்திற்கு சென்று விட்டதால் தனியாக இருப்பதால் எனது தாயும் 100 நாள் வேலைக்கு சென்றதாகவும், அங்கு சென்று வேலை செய்யாமல் அமர்ந்து இருந்ததாகவும் கூறினார், இத்திட்டம் மூலம் நட்டு வைத்த மரங்கள் எத்தனை, சீரமைத்த சாலைகள் எத்தனை, தூர்வாரிய குளங்கள் எத்தனை என கேள்வி சீமான் எழுப்பினார்.1