Shuru
Apke Nagar Ki App…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி புறநகர் மாவட்டம், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் திங்கட்கிழமை (22-6-2026) அன்னதானம் வழங்கப்பட்டது. மாநகர வடக்கு பகுதி செயலாளர் M. கணேஷ் தலைமையில், மாவட்ட மாணவர் அணி இணை அமைப்பாளர் சதீஷ் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அன்னதானத்தில் சிக்கன் பிரியாணி, அவித்த முட்டை மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பகுதி இணை செயலாளர் S. வேல் முருகன், பகுதி துணை செயலாளர் ராஜா, பகுதி துணை செயலாளர் மாரி, 14வது வார்டு செயலாளர் வாசன், பகுதி செயற்குழு உறுப்பினர்கள் S. அன்னபூரணி, E. அருணா தேவி, V. அன்னலட்சுமி மற்றும் மல்லிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மா.சுடலைமணி
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி புறநகர் மாவட்டம், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் திங்கட்கிழமை (22-6-2026) அன்னதானம் வழங்கப்பட்டது. மாநகர வடக்கு பகுதி செயலாளர் M. கணேஷ் தலைமையில், மாவட்ட மாணவர் அணி இணை அமைப்பாளர் சதீஷ் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அன்னதானத்தில் சிக்கன் பிரியாணி, அவித்த முட்டை மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பகுதி இணை செயலாளர் S. வேல் முருகன், பகுதி துணை செயலாளர் ராஜா, பகுதி துணை செயலாளர் மாரி, 14வது வார்டு செயலாளர் வாசன், பகுதி செயற்குழு உறுப்பினர்கள் S. அன்னபூரணி, E. அருணா தேவி, V. அன்னலட்சுமி மற்றும் மல்லிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழக வெற்றி கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜயின் பிறந்தநாளையொட்டி, கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலையம் முன்பாக, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் திரளாகக் கூடி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, புதியம்புத்தூர் ஆர் சி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சுமார் 15,000 ரூபாய் மதிப்புள்ள செஸ், கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நகர செயலாளர் அன்பரசன், ஒன்றிய பொருளாளர் சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் சக்தி கிருஷ்ணமூர்த்தி, நகர பொருளாளர் செந்தில் குமார், கணேஷ், இணைச் செயலாளர் வினோத், பொன்சேகர், பாரத், கமல் மற்றும் மகளிர் அணி வனிதா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.1
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் காரும் சாலையோர ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோவில்பட்டி பசுவந்தனை சாலையைச் சேர்ந்த மகாராஜன், மார்க்கெட்டில் கடை நடத்தி வருபவர். இவர் மதுரையில் டைல்ஸ் வாங்குவதற்காக புதுக் கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் காரில் இலுப்பையூரணி ரெயில்வே சுரங்க பாலம் வழியாக மெயின் ரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த சாலையோர ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகாராஜனும் அவரது நண்பரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் கிராமத்தில், தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தமிழக வெற்றி கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த மருத்துவ முகாமிற்கு விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் தலைமை தாங்கினார். சாத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தங்கமுனியராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில், பல்வேறு நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கினர். அத்துடன், தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டன. சமத்துவபுரம், முள்ளிச்செவல், பெருமாள்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு மருத்துவ உதவிகளைப் பெற்றனர். மருத்துவக் குழுவினர் அளித்த தகவலின்படி, 300க்கும் மேற்பட்ட பயனாளிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.1
- தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகியான பரன்குன்றாபுரம் என் டி எஸ் சார்லஸ் தலைமை தாங்கினார். விழாவில், கடந்த 2025-2026 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், டி டி டி ஏ நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மொத்தமாக 520 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி என் டி எஸ் சார்லஸ் வாழ்த்திப் பேசினார். இந்த நிகழ்வில் தவெக ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்பிவி கதிர்வேல், துணை செயலாளர் சுரேஷ், இணை செயலாளர் லூர்துசாமி, உதயகுமார், ரேக்லேண்ட், ஒன்றிய துணை செயலாளர் ஆரோக்கிய லிவின்யா, கிளை நிர்வாகிகள் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.1
- மதுரை ஐராவதநல்லூர் வேலன் தெரு பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர், தனது வீட்டின் அறைக்குள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, கதவைத் திறக்க முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டார். அவரை மீட்க குடும்பத்தினர் மற்றும் அருகிலிருந்தவர்களால் முடியவில்லை. இதையடுத்து, அனுப்பானடி தீயணைப்பு நிலைய தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இயந்திரங்கள் மற்றும் கடப்பாறை உள்ளிட்ட மீட்பு உபகரணங்களின் உதவியுடன் கதவைத் திறந்து, சிக்கியிருந்த அப்பெண்ணை எந்தவித காயமும் இன்றி பத்திரமாக மீட்டனர்.1
- மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த ஜூன் 1ஆம் தேதி பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகாஷ், வெறும் 20 நாட்களிலேயே சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இதேபோல், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கடந்த ஜூன் 18ஆம் தேதி பொறுப்பேற்ற நிஷாந்த் கிருஷ்ணா, மூன்று நாட்களிலேயே மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த நிர்வாக மாற்றங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன. 2014ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்ச் அதிகாரியான ஆகாஷ், தென்காசி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்ற அவருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். புதிய ஆட்சியர், மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலப் பணிகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.1
- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கத் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அவர் கோரிக்கைகள் குறித்து விளக்கினார். முன்னதாக, பயிர் கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்ததால், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.1
- தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள கட்சியினரும் ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரை சிந்தாமணி பகுதியில் தவெக மாவட்டச் செயலாளர் மருதுபாண்டி தலைமையில் கட்சித் தொண்டர்கள் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்டுகள் மற்றும் இனிப்புகளை விநியோகித்தனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அங்கமாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரளாக பங்கேற்று பிறந்தநாள் நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.1
- திருவாடானையில் திங்கட்கிழமைகளில் வாரந்தோறும் ஒருமுறை நடைபெறும் வாரச்சந்தை இன்று செயல்படுகிறது. இந்தச் சந்தையில் அனைத்து வகையான காய்கறிகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன.1