logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

* திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரம் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது

4 hrs ago
user_Natarajan Pitchaimani
Natarajan Pitchaimani
Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
4 hrs ago

* திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரம் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டான அருகில் தனியார் பேருந்தும்,காரும் மோதி விபத்து
    1
    திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டான அருகில் தனியார் பேருந்தும்,காரும் மோதி விபத்து
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்த கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்யப்பட்டதை கண்டித்து - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை, பிப்.18-  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்து புதனன்று மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உரிமைத்தொகையை உயர்த்துதல், வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட  சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஜான்ஸிராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கண்டன உரையாக, ஜெ. லெனின் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் டி. குமரவேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    3
    சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்த கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்யப்பட்டதை கண்டித்து - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை, பிப்.18- 
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்து புதனன்று மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உரிமைத்தொகையை உயர்த்துதல், வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 
சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஜான்ஸிராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
கண்டன உரையாக, ஜெ. லெனின் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர்
டி. குமரவேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    50 min ago
  • Post by Saba Saba
    1
    Post by Saba Saba
    user_Saba Saba
    Saba Saba
    மதுரை தெற்கு, மதுரை, தமிழ்நாடு•
    16 min ago
  • முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசின் கடந்த தேர்தல் வாக்குறுதி 313ன் படி, காலமுறை ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இன்று 15 வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் 500க்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் கைது செய்தனர்
    1
    முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசின் கடந்த தேர்தல் வாக்குறுதி 313ன் படி, காலமுறை ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இன்று 15 வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் 500க்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் கைது செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    39 min ago
  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மெயின் பாதை பூட்டப்பட்டதால் பரபரப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயின் பாதையினை அடைத்து தடுப்பு வேலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
    3
    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மெயின் பாதை பூட்டப்பட்டதால் பரபரப்பு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்  உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயின் பாதையினை அடைத்து தடுப்பு வேலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
    user_CPS
    CPS
    Local News Reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானாவில் இன்று காரும் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ இல்லை. ஆனாலும் இந்த விபத்தில் காரணமாக போக்குவரத்து நெரிசல் நீண்ட நேரம் ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.
    1
    திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானாவில் இன்று காரும் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ இல்லை. ஆனாலும் இந்த விபத்தில் காரணமாக போக்குவரத்து நெரிசல் நீண்ட நேரம் ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    3
    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம்
மதுரை, பிப்.17-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • பெரியகுளத்தில் பட்டப் பகலில் டீக்கடையில் இருந்த செல்போனை இளைஞர் திருடிச் சென்றுள்ளனர் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையிடம் புகார் பெரியகுளம் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை பகுதியில் குமரேசன் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார் இவரது கடையில் சத்யா என்ற பெண் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் கடையில் உள்பகுதியில் அவரது செல்போனை வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் பட்ட பகலில் டீக்கடையில் அதிக அளவில் கூட்டங்கள் இருக்கும் போது கடைக்கு உள்ளே இருந்த செல்போனை அங்கு வந்த ஒரு இளைஞர் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேக வேகமாக தப்பி சென்றுள்ளார் மேலும் சிறிது நேரம் கழித்து சத்தியா செல்போனை வைத்த இடத்தில் பார்த்த போது செல்போனை காணவில்லை என தேடிப் பார்த்தபோது செல்போன் கிடைக்கவில்லை மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சியை வைத்து பார்க்கும் போது இளைஞர் ஒருவர் செல்போனை திருடி செல்வது தேடி வந்ததே தொடர்ந்து இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையிடம் சத்யா சிசிடிவி காட்சிகளை வைத்து புகார் அளித்துள்ளார் மேலும் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் கஞ்சா மற்றும் மது போதைக்காக பணம் தேவைப்படுவதால் இளைஞர்கள் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் முறையாக நடவடிக்கை மேற்கொள்ளாததால் தொடர்ந்து பெரிய குளம் மற்றும் அதை சுற்றுவட்டாரப் பகுதியில் திருட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மது மற்றும் போதைக்காக தொடர்ந்து இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர்
    1
    பெரியகுளத்தில் பட்டப் பகலில் டீக்கடையில் இருந்த செல்போனை இளைஞர் திருடிச் சென்றுள்ளனர் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையிடம் புகார்
பெரியகுளம் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை பகுதியில் குமரேசன் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்
இவரது கடையில் சத்யா என்ற பெண் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் கடையில் உள்பகுதியில் அவரது செல்போனை வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் பட்ட பகலில் டீக்கடையில் அதிக அளவில் கூட்டங்கள் இருக்கும் போது கடைக்கு உள்ளே இருந்த செல்போனை அங்கு வந்த ஒரு இளைஞர் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேக வேகமாக தப்பி சென்றுள்ளார்
மேலும் சிறிது நேரம் கழித்து சத்தியா செல்போனை வைத்த இடத்தில் பார்த்த போது செல்போனை காணவில்லை என தேடிப் பார்த்தபோது செல்போன் கிடைக்கவில்லை மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சியை வைத்து பார்க்கும் போது இளைஞர் ஒருவர் செல்போனை திருடி செல்வது தேடி வந்ததே தொடர்ந்து இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையிடம் சத்யா சிசிடிவி காட்சிகளை வைத்து புகார் அளித்துள்ளார்
மேலும் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் கஞ்சா மற்றும் மது போதைக்காக பணம் தேவைப்படுவதால் இளைஞர்கள் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் முறையாக நடவடிக்கை மேற்கொள்ளாததால் தொடர்ந்து பெரிய குளம் மற்றும் அதை சுற்றுவட்டாரப் பகுதியில் திருட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மது மற்றும் போதைக்காக தொடர்ந்து இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    45 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.