Shuru
Apke Nagar Ki App…
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது, 42 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 2,100 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஆலங்குளத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
S.Maria selvam
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது, 42 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 2,100 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஆலங்குளத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளம் ஊராட்சி பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதால், அந்த நீரை குடிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, ஊராட்சி மன்றம் உடனடியாக இதில் தலையிட்டு தங்கள் பகுதிக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வாகைகுளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்றைய இரவு நிலவரப்படி தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால், அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றனர்.1
- தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று நடத்தப்பட்டது. இப்போட்டியில் பெரிய மாடு பிரிவில் 9 வண்டிகளும், சின்ன மாடு பிரிவில் 20 வண்டிகளும் பங்கேற்றன. இதில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்து கொண்டன. இப்போட்டிகளை தொழிலதிபர்கள் கோவை லட்சுமணன், ஐரவன்பட்டி முருகேசன், பொன்முருகன், தங்ககுமார், ராமச்சந்திரன், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி பாசறை கவியரசன் மற்றும் வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெரிய மாட்டு வண்டி பிரிவில் சீவலப்பேரி துர்காம்பிகா மாட்டு வண்டி முதல் பரிசான ரூபாய் ஒரு லட்சத்தை தட்டிச் சென்றது. நாகம்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், சிவகங்கை மாவட்டம் OA பில்டர் மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், ஆர் சி ஆர் சித்திரங்குடி மாட்டுவண்டி நான்காவது பரிசையும் பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் உடப்பன்பட்டி சுப சின்னையா காபி பார் மாட்டு வண்டி முதல் பரிசையும், துரைசாமிபுரம் ஆர் எஸ் சுரேஷ் குமார் அய்யங்கார் பேக்கரி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், ஆப்பனூர் நாகநாதன் பிரதர்ஸ் பால்பண்ணை மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், மோகன் சாமி குமார் மாட்டு வண்டி நான்காவது பரிசையும் வென்றன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.1
- முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையான சன்னதி தெருவில், பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இன்று விடுமுறை நாள் என்பதால் காலையிலிருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர். பேருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலையான சன்னதி தெருவில் இன்று காலை முதல் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி வருகிறது. அதிலும் குறிப்பாக மனித கழிவுகளும் சேர்ந்து வெளியேறுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். உள்ளூர் மக்களும் வெளியே சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், சன்னதி தெருவின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் ஆக்கிரமிப்புகளால் நிறைந்துள்ளன. இதன் காரணமாகவே, வேறு வழியின்றி பக்தர்கள் அந்த சாக்கடை கழிவுநீரிலேயே மிதித்து நடந்து சென்று முருகனை தரிசிக்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. எனவே, திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட ஆட்சி தலைவரும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து கழிவுநீரை அப்புறப்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.1
- தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் மற்றும் மாவட்ட கலெக்டர் விஷுமகாஜன் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், ஜல்ஜீவன் மிஷன், பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், சுயஉதவிக் குழுக்களுக்கான நிதி உதவிகள், சீர்மிகு நகரத்திட்டம் (ஸ்மார்ட் சிட்டி), அம்ரூத் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள், மின்விநியோகத் திட்டங்கள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் மற்றும் பயிர்க்காப்பீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன. மாவட்டத்தில் தற்போது நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப்பணிகளை அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கனிமொழி எம்.பி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன், கருணாநிதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் மற்றும் அரசுத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவின் மிகப்பெரிய ஊரான புதியம்புத்தூருக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வந்து செல்வது வழக்கம். தற்போது புதியம்புத்தூரில் ஆனித் திருவிழா நடைபெற்று வருவதை ஒட்டி, வழக்கத்தை விட மிக அதிக அளவில் பொதுமக்கள் அங்கு வந்து செல்கின்றனர். இதனால், இன்று இரவு 7 மணியளவில் புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலானது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால், அப்பகுதியைக் கடக்க முயன்ற பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி, பெரும் அவதிக்கு ஆளாகினர்.1
- தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில், மனைவியைப் பிரிந்த துயரத்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மின்சாரம் பாய்ச்சி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மனமுடைந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மிகுந்த வேதனையின் காரணமாக, தந்தை தனது குழந்தைகளையும் தன்னுடன் சேர்த்து மின்சாரத்தை பாய்ச்சி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.1